வார்த்தை விளக்கங்கள்
தூண்டுதல் புள்ளிகள்: வெப்பத்தை வெற்றி கொள்ளுதல் கைப்புத்தகத்தில் (2021) பயன்படுத்தப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத் தூண்டதல்களை மேலும் மேம்படுத்தும் வகையில், கொள்கை நீட்சியை அடிப்படையாகக் கொண்டு அபாயக் குறைப்பு மற்றும் தயாராதல் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு நகராட்சிகளுக்கான வாய்ப்புகள்.
தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்): சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை): குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
திட்டமிடப்பட்ட புதிய வளர்ச்சி: பசுமை நிலப்பரப்பை அல்லது பயன்படுத்தாமல் உள்ள காலி நிலப்பரப்பை மேம்படுத்துவது அல்லது புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
கணிசமான மறுசீரமைப்பு: மறு-உருவாக்கம் அல்லது பெரிய அளவிலான புதுப்பித்தல் திட்டங்களை உள்ளடக்கியது.
நகர திட்டமிடல் செயல்முறைகள்: பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்: நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.
நகர நிலக் கையகப்படுத்துதல்/விற்பனையை மதிப்பிடுதல்: ஊதா அல்லது பசுமை கட்டமைப்பு அல்லது மாவட்ட குளிர்வித்தல் போன்ற நகர்புற குளிர்வித்தல் முயற்சிகளுக்கு பொருத்தமான இடத்தை ஒதுக்கீடு செய்வது மற்றும் முயற்சிகளை மேற்கொள்வதை உள்ளடக்கியது.
புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்: நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.
கொள்கை நீட்சிகள்: திட்டத்தை செயல்படுத்துவதற்கு நகராட்சிகள் பயன்படுத்தக்கூடிய முறை. இந்த கொள்கை நீட்சிகள் ஒன்றோடு ஒன்று சேர்த்து பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கட்டாயத்தேவை: கட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்: அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்: அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.
ஊக்கமளிப்பவை: வெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்: கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.
அர்ப்பணிப்பு: முன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.