வெப்பச் செயல்பாட்டுத் தளம் என்றால் என்ன?
வெப்பச் செயல்பாட்டு தளம் என்பது பிராந்திய அல்லது நகராட்சி நிலையில் மிகக்கடுமையான வெப்பத்தின் மனித மற்றும் பொருளாதார தாக்கங்களைக் குறைப்பதற்காக, வழிகாட்டுதலைக் கண்டறியவும், தற்போதுள்ள வளங்கள் மற்றும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தீர்வுகள் ஆகிய இரண்டையும் பெறுவதற்காகவும் நகர அதிகாரிகள், தொழில் புரிவோர் மற்றும் நிதி நிறுவனங்களுக்குமான ஒரு உயிரோட்டமான, ஈடுபாட்டுடன்-கூடிய கருவியாகும்.
இந்த தளம் வெப்ப மீள்திறன் நடவடிக்கைகளைத் திட்டமிட, நிதி வழங்க, செயல்படுத்த மற்றும் அவற்றை அளவிடுவதற்கான பல்வேறு வகையான துறை சார்ந்த உலகின்-முன்னணி வல்லுனர்களை ஈடுபடுத்தும் வாய்ப்புகளை வழங்குகிறது.
வெப்பச் செயல்பாட்டு தளப் பாடத்திட்டங்களை ஆராய்தல்
மிகக்கடுமையான வெப்பம்: மௌனக் கொலையாளி
இன்று பருவநிலையால்-தூண்டப்பட்ட எந்த பேரழிவைக் காட்டிலும் உலகெங்கும் அதிக மக்களை வெப்பம் கொல்கிறது. பருவநிலை மாற்றம் என்பது வெப்ப அலைகளின் தீவிரம், தொடர் நிகழ்வு, மற்றும் கால அளவை அதிகரித்து வருகிறது. மேலும் வெப்பநிலைகள் அதிகரிக்கும்போது, அத்துடன் கடுமையான வெப்பத்தின் பாதிப்புகளின் ஏற்றத்தாழ்வும் அதிகரிக்கிறது.
முக்கிய பங்காளர்கள்
இந்த தளம் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், குளிர்ச்சிக் கூட்டணி, ஆர்.எம்.ஐ, பருவநிலை மற்றும் மின்சக்திக்கான மேயர்களின் உலகளாவிய உடன்படிக்கை, மிஷன் இனோவேஷன், மற்றும் 2030ஆம் ஆண்டில் உயிரியல் பன்முகத்தன்மைகொண்ட நகரங்களுக்கான உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து ஆர்ஷ்ட்-ராக்கர்ஃபெல்லர் அறக்கட்டளை மீள்திறன் மையம் மற்றும் மிகக்கடுமையான வெப்ப மீள்திறன் கூட்டணி ஆகியோர் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது.