பாடத்திட்ட நோக்கம்
வெப்ப நடவடிக்கையை செயல்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தல் பாடத்திட்டத்திற்கு வரவேற்கிறோம்! திட்டமிடுதல் நிலையைப் பூர்த்தி செய்த பின்னர், நீங்கள் வெப்ப நடவடிக்கையை செயல்படுத்துதல் மற்றும் விரிவாக்கம் செய்தலுக்கு செல்வீர்கள். மாதிரித் திட்டப் பணிகள் மற்றும் திட்டங்களை துவங்கும்போது அதைச் செயல்படுத்தும் அணி தயாராகவும் வெற்றிகரமாகவும் இருப்பதை உறுதிசெய்வதற்கு உங்களுக்கு உதவுவதற்கான வளங்களை இந்த பாடத்திட்டம் வழங்குகிறது.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
சமூக உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், மற்றும் தொண்டு நிறுவனப் பங்காளர்களுடன் கூட்டாக இணைந்து மாதிரித் திட்டத்திற்காகவும் அதனை விரிவுபடுத்துவதற்காகவும் திட்டத்தை உருவாக்கவும்.
-
கண்டறியப்பட்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்து வரிசைப்படுத்துகின்ற, மேலும் நிதி ஆதாரம் மற்றும் மனித மூலதனத் தேவை வாய்ப்புகளை அறிகின்ற ஒரு திட்டப்பணி/திட்ட கோட்பாட்டை உருவாக்குதல்.
வெளிப்பாடுகள்
-
பங்காளர்களின் பின்னூட்டத்தை ஆவணப்படுத்துதல்.
-
பங்காளர்களின் பின்னூட்டத்தை ஆவணப்படுத்துதல்.
பலன்கள்
-
வெப்ப மீள்திறன் கொண்ட தீர்வுகள் பரிசோதனை நிலையில் இருந்து விரிவுபடுத்தப்படும் நிலைக்கு மாற்றப்படும்.
-
செயல்படுத்துவதற்கான தற்போதுள்ள வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைப் புரிந்துகொள்ளுதல்.
கண்ணோட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக முழுமையான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
திட்டப்பணி செயல்படுத்துதலுக்கான தொழில்நுட்ப வளங்களைக் கண்டறிதல்
நகர்புற மரங்களுக்கான ஆதாரங்கள்
ஐ-ட்ரீ ஸ்பீஷிஸ் கருவி
- உலகெங்கும்
உங்களது நாட்டைப் பொறுத்தும் மற்றும் விரும்புகின்ற மரத்தின் பலன்களின் அடிப்படையிலும் மிகவும் பொருத்தமான மர வகைகளைத் தேர்வு செய்வதற்கு உங்களுக்கு உதவக்கூடிய ஒரு ஆன்லைன் கருவிக்கு, அமெரிக்காவின் விவசாய வனச்சேவைத் துறையின் மூலமாக உருவாக்கப்பட்ட ஐ-ட்ரீ ஸ்பீஷிஸ் கருவியைப் பாருங்கள்.
ஏத்தென்ஸ் பசுமை வழிகாட்டி
- கிரீஸ்
ஒரு அடர்த்திமிக்க நகர்புறப் பகுதியில் எப்படி பசுமைக் கட்டமைப்பைச் சேர்க்க முடியும் என்பதை விவரிக்கும் ஒரு ஆதாரத்திற்கு, அல்கேமியா நோவா வழங்கும் ஏத்தென்ஸ் பசுமை வழிகாட்டியைப் பாருங்கள்.
நகர்புற மரம் நடுதல் வடிவமைப்பு வழிகாட்டி
- ஐக்கிய ராஜியம்
நகர்புறத்தில் மரம் நடுவதற்கான வாய்ப்புகளை எப்படி அடையாளம் காண்பது மற்றும் மரத்திற்கான குழியை வடிவமைப்பதில் உள்ள செயல்முறை ஆகியவற்றைப் பற்றிய தகவலுக்கு, கிரீன் ப்ளூ அர்பன் மூலமாக வழங்கப்படும் நகர்புற மரம் நடுதல் வடிவமைப்பு வழிகாட்டியின் 20-24 பக்கங்களைப் பாருங்கள்.
துடிப்பான நகரங்களின் ஆய்வக மரம் நடுதல் கருவித் தொகுப்பு
- வட அமெரிக்கா
நகர்புற மரங்களை நடும்போது மதிப்பீடு செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சங்களுக்கு மற்றும் தள மதிப்பீட்டிற்கான ஒரு வழிகாட்டிக்கு, அமெரிக்க வனச் சேவை, அமெரிக்க வனங்கள், மற்றும் பிராந்திய குழுக்களுக்கான தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஒரு கூட்டணியான துடிப்பான நகரங்களின் ஆய்வகம் மூலமாக வழங்கப்பட்ட மரம் நடுதல் கருவித் தொகுப்பைப் பாருங்கள்.
மண் வளத்தை மீண்டும் உருவாக்குதல்
- மண் வளத்தை மீண்டும் உருவாக்குதல்
மரம் நடுவதற்கு எப்படி மண்ணை மீட்டெடுப்பது என்பது குறித்த மேலும் தகவலுக்கு, சூசன் டே மற்றும் பலர் வழங்கியுள்ள விவரக்குறிப்புகளைப் பாருங்கள்.
குளிர்ச்சியான மேற்கூரைகள் மற்றும் சாலைகளின் வளங்கள்
குளிர்ச்சியான மேற்கூரைகள் மற்றும் குளிர்ச்சியான நடைபாதைகளுக்கான ஒரு நடைமுறை வழிகாட்டி
- உலகெங்கும்
குளிர்ச்சியான மேற்கூரைகளை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்த மேலும் தகவலுக்கு, உலக குளிர்ச்சியான நகரங்கள் கூட்டணி மற்றும் பருவநிலை நடவடிக்கைக்கான ஆர்20 பகுதிகள் ஆகியோர் வழங்கும் குளிர்ச்சியான நடைபாதைகளுக்கான ஒரு நடைமுறை வழிகாட்டியின் 70-75 பக்கங்களைப் பார்க்கவும்.
குளிர்ச்சியான நகரங்களுக்கான முதல் புத்தகம்: அதிகப்படியான நகர்புற வெப்பத்தைக் குறைத்தல்
- உலகெங்கும்
குளிர்ச்சியான மேற்கூரைகளுக்கான ஒழுங்குமுறைகள் குறித்து மேலும் தகவலுக்கு, உலக வங்கி வழங்கும் குளிர்ச்சியான நகரங்களுக்கான முதல் புத்தகம்: அதிகமான நகர்புற வெப்பத்தைக் குறைத்தல் என்பதன் 84 மற்றும் 89ஆம் பக்கங்களைப் பாருங்கள்.
குளிர்ச்சியான மேற்கூரைகள்: உள்ளூர் சமூக மக்களைப் பாதுகாத்தல் மற்றும் மின்னாற்றலை சேமித்தல்
- இந்தியா
இந்தியாவில் பயன்படுத்தப்படும் குளிர்ச்சியான மேற்கூரை வகைகளுக்கான உதாரணங்களுக்கு குளிர்ச்சியான மேற்கூரைகள்: இயற்கை வளங்கள் பாதுகாப்புக் குழு, பெண்கள் வீட்டுவசதி அறக்கட்டளை, மற்றும் இதர பங்காளர்கள் வழங்கியுள்ள உள்ளூர் சமூக மக்களைப் பாதுகாத்தல் மற்றும் மின்னாற்றலை சேமித்தலின் 10 ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
குளிர்ச்சியான மேற்கூரைகளைப் பயன்படுத்துதல்
- உலகெங்கும்
குளிர்ச்சியான மேற்கூரைகளை எப்படி தேர்ந்தெடுத்து நிறுவுவது என்பது பற்றிய ஒரு கண்ணோட்டத்திற்கு, மற்றும் கூடுதல் வளங்களுக்கான அணுகலுக்கு, அரூப்பின் குளிர்ச்சியான மேற்கூரைகளைப் பயன்படுத்துதல் வலைபக்கத்தைப் பாருங்கள்.
நிழல் மற்றும் மறுசீரமைப்பு ஆதாரங்கள்:
திறந்த இடத்திற்கான நிழல் கொள்கையை திட்டமிடுவதற்கான வழிகாட்டுதல்கள்
- இஸ்ரேல்
நிழலைத் திட்டமிடுதல் முறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த கூடுதல் தகவலுக்கு, டெல் அவிவ் நகரில் இருந்து வழங்கப்படும் திறந்த இடத்திற்கான நிழல் கொள்கையை திட்டமிடுவதற்கான வழிகாட்டுதல்களின் 8-9 பக்கங்களைப் பாருங்கள்.
மீள்திறன் கொண்ட மறுசீரமைப்புகள்: தற்போதைய கட்டிடங்களுக்கான பருவநிலை புதுப்பித்தல்கள்
- அமெரிக்கா
வெப்ப-மீள்திறன் கொண்ட மறுசீரமைப்புகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் உதாரண ஆய்வுகளுக்கு, நகர்புற நில மையத்தின் மூலமாக வழங்கப்பட்ட மீள்திறன் கொண்ட மறுசீரமைப்புகள் அறிக்கையின் 18-23 பக்கங்களைப் பாருங்கள்.
முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகளின் வளங்கள்
வெப்ப அலைகள் மற்றும் ஆரோக்கியம்
- உலகெங்கும்
ஒரு வெப்ப ஆரோக்கிய எச்சரிக்கை முறையை உருவாக்குவதற்கு பயன்படுத்த வேண்டிய கட்டமைப்பு மற்றும் அளவீடுகளைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, உலக வானிலையியல் நிறுவனம் மற்றும் உலக சுகாதார நிறுவனம் வழங்கும்,வெப்ப அலைகள் மற்றும் ஆரோக்கியம்: எச்சரிக்கை-அமைப்பை உருவாக்குதல் தொடர்பான வழிகாட்டுதலின் 26-32 பக்கங்களைப் பாருங்கள்.
ஒரு முன்மாதிரித் திட்டப்பணியை விரிவுபடுத்தும்போது பரிசீலிக்க வேண்டிய நடவடிக்கைகள்
சமூக மக்களுடன் கூட்டாக இணைதல்
முன்மாதிரித் திட்டங்கள் அல்லது திட்டங்களுக்கு முன்பு, அவற்றை செயல்படுத்தும் போது, மற்றும் செயல்படுத்திய பின்னர், சமூகமக்கள் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்தப்படுவதையும் (முக்கியமாக இணைந்தே-உருவாக்கும் பணியில்), மேலும் முன்மாதிரித் திட்டங்கள் மீது வழங்கப்படும் எந்த ஒரு முந்தைய சமூகத்தின் பின்னூட்டமும் முழுமையாக ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதையும் உறுதி செய்யுங்கள். தீர்வுகள் குறித்த பரிச்சயத்தை வளர்ப்பதற்கு விநியோக மையங்கள், உற்பத்தியாளர்கள், கட்டுமானங்களை உருவாக்குவோர், மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் மேலும் தனியார் துறையினர் மூலமாக விரிவுபடுத்துவதை ஊக்கப்படுத்துங்கள்.
சமுதாய, சுகாதார மற்றும் பொருளாதாரப் பலன்களை மதிப்பாய்வு செய்தல்
முன்மாதிரித் திட்டத்தின் பலன்களின் அடிப்படையில் நடவடிக்கையின் சமுதாய, சுகாதார மற்றும் பொருளாதாரப் பலன்களை மதிப்பாய்வு செய்து அளவிடுங்கள் (எங்கு முடியுமோ அங்கு). இதனை திட்டத்தின் ஆரம்பம் முதல் அதன் முழுமையான மதிப்பீட்டு முயற்சி வரை என அந்த திட்டப் பணியின் திட்டமிடுதலில் உருவாக்குங்கள்.
தீர்வினை மற்ற நகர செயல்முறைகள் மற்றும் நிறுவனங்களில் இணைத்தல்
விரிவான பருவநிலை தகவமைத்தலுக்கான திட்டமிடுதல் முதல் நிதி ஒதுக்கீட்டு செயல்முறைகள் வரை, இதர நகர செயல்முறைகளில் எங்கே தீர்வுகளை விரிவுபடுத்துவதை இணைக்க முடியும் என்பதைக் கண்டறிதல்.
உள் மற்றும் வெளி பங்குதாரர்களை கண்காணித்தல்
திட்டப் பணியை வெற்றிகரமாக விரிவுபடுத்துவதற்கு உள்ளே மற்றும் வெளியே என இரண்டிலும் யாரை ஈடுபடுத்த வேண்டும் என்பதை விவரிக்கின்ற ஒரு திட்டத்தை உருவாக்க உங்களது பங்குதாரர் மதிப்பாய்வினை மறுபரிசீலனை செய்து புதுப்பிக்கவும்.
ஆரம்பத்தில் இருந்தே விரிவுபடுத்துவதற்கு திட்டமிடத் துவங்குங்கள்
உங்களது திட்டப்பணிக்கு பொருந்தினால், வெற்றி பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பினை உருவாக்குவதற்கு ஆரம்பக்கட்ட வடிவமைப்பு நிலை முதல் விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை ஒன்றிணைத்திடுங்கள்.