பாடத்திட்ட நோக்கம்
ஒரு கல்வி மற்றும் ஈடுபாட்டு உக்தியை உருவாக்குதல்’ என்ற பாடத்திட்டத்திற்கு வரவேற்கிறோம்! சமூக உறுப்பினர்கள் அதிலும் முக்கியமாக அரசின் மீது குறைவான நம்பிக்கை கொண்ட சமூகங்களை அடையாளம் கண்டு அவர்களுடன் ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொள்வது மிகக்கடுமையான வெப்பத்தின் தாக்கங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு உக்தியில் ஒரு அவசியமான பகுதியாகும்.
சமூக உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஆரம்பக்கட்ட மற்றும் தொடர்ச்சியான தகவல்தொடர்பு வாய்ப்புகளை உருவாக்கும் கல்வி மற்றும் ஈடுபாட்டு உக்திகளை உருவாக்க வேண்டும். இது பாதிக்கப்பட்ட சமூகங்களுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளுக்கான இலக்குகள், விழுமியங்கள், மற்றும் முன்னுரிமைகளை ஒன்றிணைந்து உருவாக்க வாய்ப்புகளை உருவாக்கும். அனைவரையும் உள்ளடக்கிய ஒரு கல்வி மற்றும் ஈடுபாட்டு உக்தியை உருவாக்கும்போது மற்ற அடையாளங்களுடன் மொழி, வயது, பாலினம், இனம், மற்றும் இனக்குழு, புவியியல் அமைவிடம், மதம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உக்தியை உருவாக்கிய பின்னர், அதன் பலன்கள் மற்றும் புதிய தகவலின் அடிப்படையில் காலப்போக்கில் அதனை தொடர்ச்சியாக தகவமைத்து அதை மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
ஒரு பங்குதாரர் மதிப்பாய்வு மற்றும்/அல்லது வெப்பம் மற்றும் நலிவுநிலை மதிப்பாய்வு அடிப்படையிலான உக்திக்கு உங்களது இலக்கு மக்களை அடையாளம் கண்டு அவர்களை இனம் காணுங்கள் (வெப்ப அபாய விழிப்புணர்வை மதிப்பிடுதல் மற்றும் வெப்பம்-சார்ந்த நலிவுநிலைகள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காணுதல் பகுதியைப் பாருங்கள்).
-
வெப்பத்தால்-பாதிக்கப்பட்ட சமூகங்களின் ஆலோசனையுடன், எத்தகைய தகவல்தொடர்பு பயன்முறைகளின் கலவை, (எ.கா. வானொலி, விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி, கையேடுகள், சமூக ஊடகம்) மொழிகள் மற்றும் தகவல் வழங்குவோர்கள் உங்களது இலக்கு மக்களை அடைவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மதிப்பிடுதல்.
-
வெப்பப் பாதுகாப்பு சார்ந்த சிறந்த நடைமுறைகளைப் பயன்படுத்தி ஒரு வெப்ப இயக்கம் அல்லது வெப்ப எச்சரிக்கையை உருவாக்குங்கள், இது வெப்பத்தினால்- நலிவடையக்கூடிய மக்களுக்குத் தேவையான பிரத்யேகமான வழிகாட்டுதலை வழங்கும். அதிகபட்சமாக ஏற்றுக்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு இந்த இயக்கம் அல்லது எச்சரிக்கைகள் இலக்கு மக்களுடன் இணைந்து உருவாக்கப்பட வேண்டும்
-
வெப்ப காலத்திற்கு முன்பாகவே இந்த இயக்கம் அல்லது எச்சரிக்கை முறையை அறிமுகப்படுத்துங்கள், மேலும் மிகக்கடுமையான வெப்ப நிகழ்வுகள் ஏற்படும் சமயத்தில் இது தொடர்பான களப்பணிகள் அதிகரிக்கப்பட வேண்டும். தகவல்களை மக்களுக்கு வழங்குவதில் உதவுகின்ற அல்லது முன்னின்று அந்த பணியைச் செய்கின்ற மேலும் இந்த இயக்கத்தை அல்லது முறையை தற்போதுள்ள நடவடிக்கை மற்றும் கல்வி முறைகளுடன் ஒருங்கிணைக்கும் நிலையில் உள்ள பங்காளர்களுடன் இதனை இணைந்து அறிமுகப்படுத்துவது சிறந்த முறையாக இருக்கும்.
வெளிப்பாடுகள்
-
ஒரு வெப்ப இயக்கத்திற்கு அல்லது வெப்ப எச்சரிக்கை முறைகளுக்கான இலக்கு மக்களை அடையாளம் காணும் ஆவணம் மற்றும் அவர்களைச் சென்றடையும் வழிகள் (எ.கா. நம்பிக்கையான தகவல் வழங்குவோர்).
-
இறுதிசெய்யப்பட்ட வெப்ப விழிப்புணர்வுப் பொருட்கள் (எ.கா. சமூக ஊடக இடுகைகள், விளம்பரக் காட்சிகள், சுவரொட்டிகள், கையேடுகள்).
பலன்கள்
-
வெப்பம் சம்மந்தமான பிரச்சனையைப் புரிந்துகொண்டு அதனைக் கையாளக்கூடிய முயற்சிகளில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய பங்குதாரர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பர்.
-
ஒரு ஒத்துழைப்புடன் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய, மற்றும் நியாயமான ஈடுபாடு மற்றும் இணை-வளர்ச்சி செயல்முறைகளுக்கான ஒரு பாதை.
-
வெப்பம்- சார்ந்த ஆபத்துக்களைக் கையாள்வதில் தகவல்தொடர்பு மற்றும் கல்வியின் பங்கில் தெளிவு.
-
அடையாளம் காணப்பட்ட பங்குதாரர்களை இலக்காக்கும் சிறந்த தகவல்தொடர்பு கருவிகள் உருவாக்கப்பட்டிருக்கும்.
கண்ணோட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக பரிபூரணமான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
ஒரு கல்வி மற்றும் ஈடுபாட்டு உக்தியின் முக்கியத்துவம்
மிகக்கடுமையான வெப்பம் ஒரு சுகாதார ஆபத்து என்பது குறித்த விழிப்புணர்வு பெரும்பாலும் மிகவும் குறைவாக உள்ளது, குறிப்பாக வெப்பத்தின் காரணமாக அதிக அபாயத்தில் உள்ள மக்களிடையே குறைவாக உள்ளது. பெரும்பாலும், 65 மற்றும் அதற்கு அதிகமான வயதுள்ள தனிநபர்கள் மற்றும் அபாயத்தில் உள்ள இதர மக்கள் வெப்பம் சார்ந்த நோய்களுக்கு அல்லது மரணத்திற்கு மற்றவர்களை ஆளாகக்கூடும் என்று நினைக்கிறார்களே தவிர, தங்களைத் தாங்களே அவ்வாறு நினைப்பதில்லை.ஒரு வெப்பக் கல்வி மற்றும் ஈடுபாட்டு உக்தி என்பது இவ்வாறு இருக்க வேண்டும்:
- பொதுமக்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களிடையே, குறிப்பாக ஆபத்துக்கு அதிகம் உட்படக்கூடிய சமூக மக்களிடையே விழிப்புணர்வு நிலை அதிகமாக இருத்தல்.
- பொதுமக்களும் சேவை/தகவல் வழங்குவோரும் தங்களையும் மற்றும்/அல்லது மற்றவர்களையும் காத்துக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி தெளிவான மற்றும் செயல்படுத்தக்கூடிய வழிகாட்டுதலை வழங்குதல்.
- ஒரு பல-பங்குதாரர் அணுகுமுறையை உருவாக்கி பார்வையாளர்களுக்கு சிறந்த முறையில் சென்றடைவதற்கு பல்வேறு வகையான தகவல் வகைகள் மற்றும் முறைகளைப் பயன்படுத்துதல்.
- ஆபத்தான வெப்பத்திற்கு மக்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும் அதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் தற்போது கிடைக்கக்கூடிய வளங்கள் மற்றும் சேவைகளை வலியுறுத்துதல்.
வெப்பம்-சார்ந்த தகவல்தொடர்புகள் சூடான வெப்பநிலைகள் உள்ள காலத்தில் மட்டுமே பயன்படுத்துவதில்லை, இருந்தாலும் தகவல்தொடர்புகளின் தரம் மற்றும் வகை வெப்ப அலைகளுடன் அதிகரிக்கக்கூடும். அவை ஆண்டு-முழுவதும் (பொது வெப்ப விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக), வெப்பக் காலத்திற்கு முன்பு மற்றும் அந்த சமயத்தில், மேலும் வெப்ப சம்பவங்களுக்கு முன்பு அல்லது அந்த சமயத்தில் சிறந்த தயார்நிலையை மேம்படுத்துவதற்கு மற்றும் பருவநிலை ஆபத்தான அளவுக்கு வெப்பமாக இருந்தால் என்ன செய்வது என்பது குறித்த விழிப்புணர்வை வலியுறுத்துவதற்கும் வெளியிடலாம்.
ஒரு கல்வி மற்றும் ஈடுபாட்டு உக்தியின் அம்சங்கள்
- இலக்கு மக்கள் மற்றும் வெப்ப அபாய தகவல்தொடர்பின் பலன்கள் குறித்த தெளிவான இலக்குகள் மற்றும் நோக்கங்கள்.
- பங்குதாரர்கள், செய்தித்தொடர்பாளர்கள் போன்ற தகவல்தொடர் முறைகள் மற்றும் அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கக்கூடிய “செயல்திட்டத்தை” அடையாளம் காணுதல்.
- வெப்ப அலைகளுக்கு முன்கூட்டியே அல்லது அந்த சமயத்தில் பொதுமக்களுக்கு தகவல்தொடர்பு மேற்கொள்ள எவை மிகவும் பயனுள்ள தருணங்கள் அல்லது நிலைகள் என்பதை பரிசீலிக்கும் ஒரு காலக்கெடு.
- தற்போதுள்ள தகவல்தொடர்பு திட்டங்களையும் மேலும் முரண்பாடான தகவல்களைத் தவிர்ப்பதற்கு வெப்ப ஆபத்துத் தகவல்தொடர்புகளை எப்படி ஒருங்கிணைப்பது என்பதையும் பரிசீலித்தல்.
- அணுகக்கூடிய, நம்பகமான, செயல்படுத்தத்தக்க மற்றும் தனிப்பட்டமுறையில் பொருத்தமான அபாயத் தகவல்தொடர்பு தயாரிப்புகள் மற்றும் பொருட்கள்.
- குளிர்வித்தல் மையங்கள், ஆரம்பக்கட்ட எச்சரிக்கை முறைகள், மற்றும் இதர சமூகத் திட்டங்களை வெப்ப அபாயம் மற்றும் தாக்கத்தை குறைக்கும் திட்டங்களுடன் ஒருங்கிணைத்தல்.
வளங்கள்
வெப்ப அபாயத்தை தெரியப்படுத்துதல்
- உலகெங்கும்
சி40களின் குளிர்ச்சியான நகரங்களின் கூட்டமைப்பில் இருந்து அனுபவங்கள்
வெப்ப அபாயத்தை தெரியப்படுத்துதலில் உதாரணங்கள் மற்றும் ஒரு வழிகாட்டுதலுக்கு, சி40 மூலமாக தயாரிக்கப்பட்ட வெப்ப அபாயத்தை தெரியப்படுத்துதல் ஆவணத்தின் 2-3 மற்றும் 5-11 பக்கங்களைப் பாருங்கள்.
தெற்காசியாவில் உள்ள நகரங்களுக்கான வெப்ப தகவல்தொடர்பு வழிகாட்டி
- தெற்காசியா
தெற்காசியாவில் உள்ள நகரங்களின் பின்னணியில் பயனுள்ள பொதுமக்கள் தகவல்தொடர்புத் திட்டத்திற்கான முக்கிய பாகங்கள் (அணுகல், பொருத்தம், புரிதல், மற்றும் நடவடிக்கை) மீது கவனம் செலுத்துகின்ற ஒரு வழிகாட்டுதல் குறிப்பிற்கு பருவநிலை மற்றும் மேம்பாட்டு அறிவுக் கூட்டமைப்பின் தெற்காசியாவில் உள்ள நகரங்களுக்கான வெப்ப தகவல்தொடர்பு வழிகாட்டியைப் பாருங்கள்.
மிகக்கடுமையான வெப்பச் சம்பவங்களின் ஆரோக்கிய அபாயங்களைத் தெரிவித்தல்
- கனடா
வெப்பம்-சார்ந்த தகவல்தொடர்புகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டிக்கு, ஹெல்த் கனடா மூலமாக தயாரிக்கப்பட்ட மிகக்கடுமையான வெப்பச் சம்பவங்களின் ஆரோக்கிய அபாயங்களைத் தெரிவித்தல்: பொது சுகாதார மற்றும் அவசரக்கால மேலாண்மை அதிகாரிகளுக்கான கருவித்தொகுப்பினைப் பாருங்கள்.
இலக்கு மக்கள் மற்றும் தகவல்தொடர்பு முறைகளை அடையாளம் காணுதல்
இலக்கு மக்கள் என்பவர்கள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒரு நலிவுநிலை மதிப்பீட்டில் இருந்து எடுக்கப்பட வேண்டும் அல்லது வெப்பம்-சார்ந்த நலிவுநிலைகள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காணுதல் மற்றும் வெப்ப அபாய விழிப்புணர்வை மதிப்பிடுதல் பாடத்திட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட வேண்டும்.
விரிவாக, இந்த உக்தி நான்கு நிலைகளில் மக்களை இலக்காக்க முடியும்:
- வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய தனிநபர்கள்
- சமூக கூட்டமைப்புகள்
- நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள், துறைகள் மற்றும் அமைச்சகங்கள்
- சமூகமக்கள் மற்றும்/அல்லது சமுதாயங்கள்
சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட சமூக உறுப்பினர்கள்
சமூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட தனிநபர்கள் வெப்பம்-சார்ந்த நோய் அல்லது மரணம் ஏற்படும் அதிக அபாயத்தில் இருக்கிறார்கள் ஏனெனில் அவர்களை சென்று பார்ப்பதற்கு அவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இருப்பதில்லை.
பூர்வீக மொழியைப் பேசாத மக்கள்
பூர்வீக மொழியைப் பேசாத மக்களால் வெப்ப அலைகளின் போது பாதுகாப்பாக இருப்பது குறித்த புதிய வெப்ப எச்சரிக்கைகள் மற்றும் தகவல்களை அணுக முடியாது.
குறைந்த-வருவாயுள்ள சமூகத்தினர்
குறைந்த-வருவாயுள்ள சமூகத்தினர் பூகோல ரீதியாக கடுமையான வெப்பத்திற்கு அதிகம் ஆட்படக்கூடிய பகுதிகளில் திறளாக காணப்படுகின்றனர், அவர்களது வீட்டு வசதிகளும் வெப்பத்திற்கு ஆட்படும் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்துவதாக இருக்கும், மேலும் தங்களை குளிர்ச்சியாக பராமரிக்கக்கூடிய வளங்களின்றி இருக்கும்.
அரசின் மீது குறைவான நம்பிக்கை கொண்ட சமூகங்கள்
ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அல்லது கடந்த காலங்களில் அரசு வழங்கிய தகவல் அல்லது சேவைகளில் எதிர்மறை அனுபவங்களைப் பெற்ற மக்கள், அரசு ஆதாரங்களில் இருந்து வரும் வெப்ப அபாயத் தகவல்தொடர்பை நம்புகின்ற அல்லது அதற்கு நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு குறைவாகும்.
துரதிர்ஷ்டவசமாக உங்கள் தகவல்களைக் கேட்பவர்கள் எப்படி தகவலை அனுப்புகின்றனர் மற்றும் பெறுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்வது அவர்களைச் சிறப்பாக சென்றடைவதற்கு முக்கியமானதாகும். சுகாதாரப் பராமரிப்பு வழங்குவோர், பள்ளிகள், மற்றும் தொழில்கள் போன்றவை மிகச்சிறந்த பயனளிக்கும் முறைகளையும் அபாயத் தகவல்தொடர்பு செய்திகளையும் பயன்படுத்துவதை உறுதி செய்ய, வெப்பத்தால்-பாதிக்கப்படும் மக்களுடன் தொடர்பில் இருக்கக்கூடிய தலைவர்கள், நிறுவனங்கள், மற்றும் அமைப்புகளை அடையாளம் கண்டு அவர்களுடன் கூட்டணி அமைப்பது. நகர அதிகாரிகள், இடையில் செயல்படக்கூடிய அமைப்புகள் (எ.கா. உள்ளூர் ஊடகம், தொண்டு நிறுவனங்கள், சமூகத் தலைவர்கள்) மற்றும் சமூக மக்களுக்கு இடையே செயல்படக்கூடிய தகவல்தொடர்பு முறைகளில் உள்ளடங்குபவை:
- சமூக ஊடகம்
- தொலைக்காட்சி
- இணையதளங்கள்
- வானொலி
- வாய்மொழியாக
- உரை செய்தி (குறுஞ்செய்திகள், வாட்ஸாப்) எச்சரிக்கைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள்
- செய்தித்தாள்கள்
- கையேடுகள்
- நம்பகமான/செல்வாக்குள்ள சமூக நிறுவனங்களுக்கான பிரத்யேகமான செய்திகள்
- பொது அறிவிப்புகள் (எ.கா. வாகனங்கள் அல்லது ஒலிப்பெருக்கிகள் மூலமாக ஒலிபரப்புதல்)
- பொதுமக்கள் தகவலுக்காக அழைக்கக்கூடிய “அழைப்பு சேவைகள்”
தகவல்தொடர்பு முறைகள் பொதுவாகப் பயன்படுத்தக்கூடிய அளவையியல் தரவுகளை சமூக ஆய்வுகள், தொலைத்தொடர்பை நிர்வகிக்கும் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், மற்றும் தனியார் ஆராய்ச்சி அமைப்புகளிடம் இருந்து பெற முடியும், அதேவேளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகத் தலைவர்களால் பண்புசார்ந்த தரவுகளை வழங்க முடியும். பயன் பெறுவோரின் கல்வியறிவு, மொழிப் புலமை, நிதி அணுகல் (எ.கா. இணையதளத்தை அல்லது தொலைக்காட்சியைப் பயன்படுத்துதல்) மற்றும் பல்வேறு தகவல்தொடர்பு முறைகளின் மீது நம்பிக்கை நிலை ஆகியவை தகவலுக்கான அணுகலை எப்படி ஏற்படுத்த முடியும்.
வளங்கள்
கராச்சி வெப்ப செயல்திட்டம்
- பாக்கிஸ்தான்
ஒரு நகரின் வெப்ப தகவல்தொடர்புத் திட்டம் மற்றும் எச்சரிக்கைச் செய்திகள் மற்றும் வரைபடங்களுக்கான மாதிரிகளுக்கு கராச்சி வெப்ப செயல்திட்டம்: மிகக்கடுமையான வெப்பத்திற்கு திட்டமிடுதல் மற்றும் நடவடிக்கைக்கான ஒரு வழிகாட்டி, ஆவணத்தின் பக்கங்கள் 22 மற்றும் 44-56 ஆகியவற்றைப் பார்க்கவும்.
அகமதாபாத் வெப்ப செயல்திட்டம்
- இந்தியா
அகமதாபாத் நகரத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட தகவல்தொடர்பு முறைகள் வரைபடத்திற்கும் மற்றும் முக்கிய வெப்ப காலத்திற்கு முந்தைய, அந்த சமயத்து மற்றும் அதற்குப் பிந்தைய தகவல்தொடர்பு முறைகளுக்கும், அகமதாபாத் வெப்ப செயல்திட்டத்தின் பக்கம் 3ஐ பாருங்கள்.
ஒரு தோழனாக இருத்தல்: ஒரு சமூகமக்கள்-அடிப்படையிலான பருவநிலை மீற்திறன் பாடத்திட்டம்
- அமெரிக்கா
ஒரு சமூகமக்கள்-அடிப்படையிலான வெப்ப அபாய தகவல்தொடர்பு மற்றும் அவசரக்கால நடவடிக்கைத் திட்டத்திற்கான ஒரு உதாரணத்திற்கு, நியூயார்க் நகரின் ஒரு தோழனாக இருத்தல் திட்டத்தை ஆராயவும்.
ஒரு வெப்ப விழிப்புணர்வுப் பிரச்சாரம் அல்லது எச்சரிக்கை முறையை துவங்குதல்
வரவிருக்கும் கோடைக் காலத்தில் இருந்து தங்களையும் மற்றவர்களையும் எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு போதுமான அளவு காலத்தை வழங்குவதற்காக ஒரு வெப்ப காலத்திற்கு முன்பாகவே இயக்கங்கள் துவங்கப்படுவதுதான் சிறந்ததாகும். வெப்ப எச்சரிக்கை முறைகள் யாவும் அவை சரியாக செயல்படுகிறதா என்பதையும் உங்களது இலக்கு மக்களை அடைகிறதா என்பதையும் உறுதி செய்வதற்கு வெப்ப காலத்திற்கு முன்பாகவே பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
வெப்பம்- சார்ந்த தகவல்தொடர்புகள் அனைத்து தகவல் தொடர்பு முறைகள் மற்றும் காலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் (அதாவது குளிர்ச்சியான மாதங்களின் போது வழங்கப்படுவதற்கு எதிராக வெப்ப அலைகளின் போது வழங்கப்படுபவை). அவை பயன்படுத்தப்படும் ஊடக முறையை அடிப்படையாகக் கொண்டு எழுத்து மற்றும் காட்சி வடிவ முறைகளின் ஒரு கலவையைக் கொண்டதாக, உள்ளூர் அரசு மற்றும் இதர பங்குதாரர்கள் மூலமாக வழங்கப்படும் பொது சுகாதார தகவல்களை நிறைவானதாக்குவதாக இருக்க வேண்டும்.
வெப்பம்- சார்ந்த தகவல்தொடர்புகள் உள்ளடக்கத்தில் உள்ளடங்குபவை:
- வானிலை முன்னறிவிப்பு
- எந்த பகுதிகள் அதிகமாக பாதிக்கப்படும்
- ஏற்படக்கூடிய தாக்கங்கள்
- என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்த அறிவுரை
செய்திகளை உருவாக்கும்போது, அவற்றில் இவை உள்ளதா என்பதை கவனிக்கவும் (ஹெல்த் கனடாவில் [2011] இருந்து எடுக்கப்பட்டவை):
- முக்கிய செய்திகள் மற்றும் தேவையான நடவடிக்கைகளை அடையாளம் கண்டு அவற்றை பரிசோதித்தல்
- தெளிவாக தகவல்தொடர்பை வழங்குதல்
- உங்கள் நேயர்களை ஊக்கப்படுத்துதல்
- எங்கெல்லாம் முடியுமோ தெளிவான மற்றும் பொருத்தமான படங்களைப் பயன்படுத்துதல்
- ஆதாரத்தை வழங்குவதன் மூலமாகவும் தெளிவின்மை எங்கே உள்ளதோ அவற்றை ஏற்பதன் மூலமாகவும் நம்பிக்கையை வளர்த்தல்
- தொழில்நுட்ப வார்த்தை, இரக்கமுள்ள வாக்கியங்கள், அல்லது உறுதிமொழிகள்/உத்திரவாதங்கள் போன்றவற்றை தவிர்த்தல்
வளங்கள்
வெப்பக் கருவித்தொகுப்பு இயக்கப் பொருட்கள்
- உலகெங்கும்
வெப்ப அலைகளின் போது தங்களை எப்படி காத்துக்கொள்வது என்பதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதற்கு ஆங்கிலம், பெங்காலி, மற்றும் நேப்பாளி ஆகிய மொழிகளில் கிடைக்கக்கூடிய சுவரொட்டிகள், சமூக ஊடகச் சொத்துக்கள், மற்றும் வீடியோக்களுக்கு, உலகளாவிய பேரிடர் தயார்நிலை மையத்தின் வெப்பக் கருவித்தொகுப்பு இயக்கப் பொருட்களைப் பாருங்கள்.
அர்ஷ்ட்-ராக் #வெப்ப கால இயக்கம்
- உலகெங்கும்
சமூக ஊடக படங்களுக்கும் வெப்பத்தின் தாக்கங்கள் மற்றும் நகரங்கள் தங்களது குடி மக்களை எப்படி பாதுகாக்க முடியும் என்பதையும் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், மற்றும் கிரேக்க மொழிகளில் பெறுவதற்கு அர்ஷ்ட்-ராக்ஸின் #வெப்ப கால இயக்கப் பொருட்களைப் பாருங்கள்.
வெப்ப அழுத்தத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்
- உலகெங்கும்
“பீட் த ஹீட்” தகவல்தொடர்பு கட்டமைப்புக்குள் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பொது சுகாதார செய்திகள் மற்றும் தகவல்களைப் பெறுவதற்கு யூனிசெஃபின் வெப்ப அழுத்தத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் என்ற தொழில்நுட்ப குறிப்பின் 18ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
வெப்ப ஆரோக்கிய தகவல்தொடர்பு செய்தி மதிப்பாய்வுக் கருவி
- கனடா
உங்களது வெப்ப எச்சரிக்கை மற்றும் கல்வியளிக்கும் செய்திகளை மதிப்பாய்வு செய்வதற்கான ஒரு எளிய பட்டியலைப் பெறுவதற்கு, மற்ற வளங்களுடன், ஹெல்த் கனடா தயாரித்துள்ள மிகக்கடுமையான வெப்பச் சம்பவங்களின் ஆரோக்கிய அபாயங்களைத் தெரிவித்தல்: பொது சுகாதார மற்றும் அவசரக்கால மேலாண்மை அதிகாரிகளுக்கான கருவித்தொகுப்பின் 39 ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
மிகக்கடுமையான வெப்பக் கருவித்தொகுப்பு
- அமெரிக்கா
மிகக்கடுமையான வெப்பம் மற்றும் செய்திகளை இனம் காணுதல் தொடர்பான அரசு அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய பேசும் கருத்துக்களுக்கு, அமெரிக்காவில் விஸ்கான்சின் பருவநிலை மற்றும் சுகாதார திட்டத்தின் மூலமாக தயாரிக்கப்பட்ட மிகக்கடுமையான வெப்பக் கருவித்தொகுப்பின் 10-12ஆம் பக்கங்களைப் பாருங்கள்.
வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை நடத்துதல் என்பதைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.
இந்த பாடத்திட்டத்தில் இருந்து அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்களை மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள்.