One Billion People More Resilient
phone call
கொள்கைத் தீர்வு

வெப்ப உதவி அழைப்பு சேவைகள்

விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்

சுருக்கம்

வெப்ப உதவி அழைப்பு சேவைகள் என்பது ஒரு வெப்ப அலையின் போது பொதுமக்களுக்கு தகவல் வழங்கக்கூடிய ஒரு தொலைபேசி உதவி சேவையாகும். குளிர்விக்கும் வளங்களான குளிர்ச்சி மையங்களை எப்படி அணுகுவது, வெப்பம்-தொடர்பான நோய்க்கான அறிகுறிகளை நிகழ்-நேரத்தில் அடையாளம் காணுதல், மற்றும் தேவைக்கு ஏற்ப அவசரக்கால சேவைகளுடன் பயனர்களை இணைத்தல், போன்றவை சம்மந்தமான தகவல்களை உதவி அழைப்பு சேவையை வழங்குபவர் பகிர்ந்துகொள்ள முடியும். வெப்ப உதவி அழைப்பு சேவைகள் வளங்களுடன் பயனர்களை இணைப்பதன் மூலமாக வெப்பம் தொடர்பான நோய்களையும் மரணத்தையும் தவிர்க்க முடியும்.

செயல்படுத்துதல்

பொது மக்களுக்கு மிகக்கடுமையான வெப்பம் பற்றியும் குளிர்வித்துக் கொள்வதற்கான வளங்கள் பற்றியும் நிகழ்-நேர ஆலோசனை வழங்குவதற்காக ஒரு தொலைபேசி உதவி மையத்தை உருவாக்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

பருவநிலையைப் பொறுத்து, இந்த உதவி மையங்கள் ஆண்டு முழுவதும் செயல்படலாம், அல்லது ஆண்டில் அதிக-அபாயமுள்ள நேரங்களில் மட்டும் (எ.கா. பருவ காலத்தில் அல்லது ஒரு வெப்ப அலை ஏற்படும் போது) செயல்படலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    தகவல்தொடர்புகள்/களப்பணி
  • துறைகள்:

    பேரழிவு அபாய மேலாண்மை, பொது சுகாதாரம், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மை
  • அளவீடுகள்:

    பெறப்பட்ட அழைப்புகளின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம், மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சமூக மக்கள் நிறுவனங்கள், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    உணவுப் பாதுகாப்பை வழங்குதல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்