One Billion People More Resilient
reflective surface
கொள்கைத் தீர்வு

குளிர்ச்சியான மேற்கூரைகள்

ஊக்கமளிப்பவை

சுருக்கம்

குளிர்ச்சியான மேற்கூரைகள் எனப்படுபவை பாரம்பரிய மேற்கூரைகளை விட அதிகமான சூரிய ஒளியை பிரதிபலிக்கின்ற பொருட்களால் வடிவமைக்கப்படுகின்ற, கட்டிடம் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதைக் குறைக்கிறது, மேலும் அதன்மூலமாக நகர்புற வெப்பத்தீவு பாதிப்பினைக் குறைக்கிறது. குளிர்ச்சியான மேற்கூரைகளால் கட்டிடத்திற்குள் இருக்கும் வெப்பத்தை 30% வரை குறைக்க முடியும்.

செயல்படுத்துதல்

வரிக் கடன்கள், பயன்பாட்டு விலக்குகள், மற்றும் கூட்டுறவு அல்லது பெரிய அளவிலான கொள்முதல் மூலமாக சொத்து உரிமையாளர்களுக்கு அவர்களது மேற்கூரைகளை மாற்றுவதற்கு ஊக்கமளித்தல். நிதி-அல்லாத ஊக்கமளித்தல் முறையில் புதிய கட்டுமானங்கள் அல்லது குறிப்பிடும்படியான மறுசீரமைப்புகளுக்கு மண்டலங்களாக்கும் ஊக்கத்தொகைகளும் உள்ளடங்கும் (எ.கா. நிலப்பரப்பு விகித (FAR) போனஸ்கள்)

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

குளிர்ச்சியான குளிர்காலங்களைக் கொண்ட பகுதிகளில் வெப்பம் அதிகமாக உள்ள மாதங்களில் வெப்பத்தை மீட்டெடுக்கக்கூடிய குறைவான ஆற்றலானது குளிர்ச்சியான மாதங்களில் அதிக வெப்பமாக்கும் தேவைகள் மற்றும் ஈரப்பதம் அதிகரித்தல் ஆகியவற்றினை ஈடு செய்துகொள்கிறது. ஓரே சீரான கட்டிட உயரங்களைக் கொண்ட பகுதிகளுக்கு குளிர்ச்சியான மேற்கூரைகள் சிறந்த பலனைத் தரும். உயரம் குறைவான கட்டிடங்கள் உயரமான கட்டிடங்களின் மீது கூசும் ஒளியை ஏற்படுத்தலாம். எந்த விதமான முறை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில், குளிர்ச்சியான மேற்கூரைகள் காலப் போக்கில் அவற்றின் மேற்பரப்பின் மூலமாக பிரதிபலிக்கும் திறனை இழக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்பூச்சு பொருட்கள் மற்றும் உள்ளூரில் எவை கிடைக்கிறது என்பதன் அடிப்படையில் அந்த மேற்பூச்சுப் பொருட்களுக்கான செலவு வேறுபடும். புதிய கட்டுமானங்களில் குளிர்ச்சியான மேற்கூரைகளை ஒன்றிணைப்பது மறுசீரமைப்புக்கு ஆகக்கூடிய செலவைக் காட்டிலும் மலிவானதாகும், ஆனால் குளிர்ச்சியான மேற்கூரைகள்தான் விலை மலிவான மற்றும் மிகவும் அணுகத்தக்க மறுசீரமைப்பு நடவடிக்கையாகும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.
    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    உட்புற காற்று வெப்பநிலைக் குறைதல், ஒதுக்கீடுகளைப் பின்பற்றும் கட்டிடங்களின் எண்ணிக்கை, கட்டிடங்கள் மூலமாக மின்சார சேமிப்பு, வெளிச் சுற்றுப்புற காற்று வெப்பநிலை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    கட்டிடம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, குறைவானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல்