One Billion People More Resilient
கொள்கைத் தீர்வு

மாவட்ட குளிர்வித்தல்

மற்றவை

சுருக்கம்

மாவட்ட குளிர்வித்தல் என்பது பல்வேறு இடங்களில் அமைக்கப்படும் குளிர்வித்தல் அமைப்புகளுக்கு மாற்றாக அமையலாம், அதன் மூலமாக அது 50 சதவிகிதம் வரை மின்சாரத்தையும் உமிழ்வின் தாக்கங்களையும் குறைக்கிறது. இந்த குளிர்விக்கும் அமைப்புகள் இயந்திரவியல் குளிர்வித்தல் முறைகளில் ஏற்படுவது போன்ற நகரப்பகுதியில் ஏற்படும் வெப்பத் தீவு பாதிப்பு ஏற்படாமல் குளிர்ச்சியான தண்ணீரை கட்டிடங்களுக்கு அனுப்புகிறது.

செயல்படுத்துதல்

மாவட்ட குளிர்வித்தல் முறையை குடிமைக் கட்டமைப்பில் உருவாக்கி அவற்றை ஒன்றிணைப்பதற்கு அந்த முறையையும் வாய்ப்புகளையும் மதிப்பீடு செய்தல். தற்போது ஏற்கெனவே உள்ள குளிர்வித்தல் முறைகள் மாற்ற வேண்டிய அல்லது பழுதுநீக்கம் செய்ய வேண்டிய சமயத்தில், மாவட்ட குளிர்வித்தல் முறையைப் பயன்படுத்துவது குறித்து சிந்திக்கவும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

மாவட்ட குளிர்வித்தல் முறையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அந்த பலன்களில் குறைவான மின்சார நுகர்வு, குளிர்விக்கும் பளுவை இடமாற்றம் செய்தல், அதிக நம்பகத்தன்மை, மற்றும் கட்டிடங்களை உருவாக்குவதற்கான முதலீட்டுத்தொகை குறைவது ஆகியவை அடங்கும். மாவட்ட குளிர்வித்தல் முறைக்கு, அதற்கான கட்டமைப்பை உருவாக்கும் ஆரம்பக் கட்டத்தில் அதிகமான முதலீட்டு செலவுகள் ஆகும் மேலும் பொருளாதார ரீதியாக இது பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றால், அதிக-அடர்த்திமிக்க பகுதிகள் அல்லது புதிதாக கட்டிடங்கள் உருவாகும் மண்டலங்களில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    மற்றவை
  • தூண்டுதல் புள்ளிகள்:

    முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள், பொதுப் பணிகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    மின்சார சேமிப்பு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம், மாவட்டம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    நீண்ட-காலம் (10+ ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தொழில்துறை, நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    அதிகமானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    அதிகமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்