One Billion People More Resilient
temperature sign
கொள்கைத் தீர்வு

அனைத்து-அபாய அளவுருக் காப்பீடு

நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்

சுருக்கம்

அளவுருக் காப்பீடு என்பது கொடுப்பனவுகளை வழங்குவதற்கு முன்பே-நிர்ணயிக்கப்பட்ட தூண்டுதல் சம்பவங்கள் நிகழ்வதை அடிப்படையாகக் கொள்கிறது. இந்த தூண்டுதல் என்பது வானிலை அல்லது இயற்கை நிகழ்வுகளின் ஒரு அட்டவணையின் அடிப்படையிலானது, இது உண்மையான சேதாரத்தை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் இல்லாமலேயே அடையாளம் காணப்பட்ட தூண்டுதல் நிகழ்வின் காரணமாக ஏற்பட வாய்ப்புள்ள நிதி இழப்பிற்கு எதிராக பாதுகாப்பினைப் பெறுவதற்கு பாலிஸிதாரரை அனுமதிக்கிறது.

செயல்படுத்துதல்

ஒரு அபாயத்தின் தொகுப்பினைப் பல்வகைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அளவுருக் காப்பீட்டைப் பயன்படுத்துதல். அளவுருக் காப்பீட்டின் மூலம் ஒரு குறிப்பிட்ட பருவநிலை அபாயத்திற்கு எதிராக பாதுகாப்பு வழங்க முடியும் அல்லது விரிவான பேரழிவு அபாயக் குறைப்பு மற்றும் தகவமைப்புக்கு ஆதரவு வழங்க முடியும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

அளவுருக் காப்பீடு என்பது அபாயத்தைக் கையாள்வதற்கான ஒரு புதிய அணுகுமுறையாகும் மேலும் அதன் செயல்திறன் இப்போதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பேரழிவு அபாயங்கள் மற்றும் நிதிப் பேரழிவுக்கான நடவடிக்கைக்கு அரசாங்கங்கள் அளவுருக் காப்பீட்டைப் பயன்படுத்தலாம். அளவுருக் காப்பீட்டுக் கொடுப்பனவுகளை பாரம்பரிய காப்பீட்டுக் கோருதல்களைக் காட்டிலும் விரைவாக விநியோகிக்க முடியும் ஏனெனில் கொடுப்பனவுகள் யாவும் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதிமுறையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    பேரழிவு அபாய மேலாண்மை

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், தொழில் உரிமையாளர்கள், வாடகைக்கு வழங்குவோர்
  • தாக்கத்தின் நிலை:

    அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மை
  • அளவீடுகள்:

    குறியீட்டு மதிப்பில் மாற்றம், செலுத்தப்பட்ட கோருதல்கள் மற்றும் உண்மையான இழப்புகளுக்கு இடையே உள்ள வித்தியாசம்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    பகுதி, மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    தேசிய அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தேசி அரசு, தொழில்துறை, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    பொருந்தாது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், வறுமையைக் குறைத்தல்