நோக்கம்
வெப்பம்-சார்ந்த நலிவுநிலைகள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காணுதல் பாடத்திட்டத்திற்கு வரவேற்கிறோம்! வெப்பம்- சார்ந்த நோய், காயம், அல்லது மரணத்திற்கு ஒரு நபர் அல்லது சமூகம் ஏன் அதிக அபாயத்தில் உள்ளது என்பதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளன. உதாரணமாக, குளிர்ச்சியான பகுதிகளுக்கான அணுகலைப் பெற முடியாதவர்கள் அல்லது தங்களது பொருளாதார நிலையின் காரணமாக ஏர் கண்டிஷனிங் வசதியைப் பயன்படுத்த முடியாதவர்கள் அதிக அபாயங்களை எதிர்கொள்ளக் கூடும்.
சமமான பலன்களைப் பெறுவதற்கான திட்டங்கள் மற்றும் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதற்கு, வெப்பம்-சார்ந்த தாக்கங்கள் ஏற்படும் அபாயத்தில் உள்ள உங்களது பகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் நீங்கள் அடையாளம் கண்டு இணைக்க வேண்டும். இது இந்த குழுக்களுடன் கூட்டாக இணையவும் உங்களது திட்டங்களில் சமூக மக்களால்-வழிநடத்தப்பட்ட அணுகுமுறையை மேற்கொள்வதற்கும் உங்களை அனுமதிக்கும். இந்த பாடத்திட்டத்தில், உங்களது சூழ்நிலையில் நலிவுநிலை என்பதை விவரிப்பீர்கள் மேலும் அதனைத் தொடர்ந்து நிலப்பரப்பு அல்லது அடிப்படை சமுதாய, பொருளாதார மற்றும் ஆரோக்கிய நிலைகளின் காரணமாக வெப்பத் தாக்கங்களுக்கு அதிக நலிவடையக்கூடிய சமூக மக்கள் குழுக்களை இனம் காணுவீர்கள்.
இந்த பாடத்திட்டம் இதற்கு முந்தைய பாடத்திட்டமான, ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை மேற்கொள்ளுதல்’ என்பதில் கிடைத்த வெளிப்பாடுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படலாம்.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
வயது, வருமானம், மற்றும் ஏர் கண்டிஷனிங் மற்றும் குளிர்ச்சியான பகுதிகளுக்கான அணுகல் போன்ற சமுதாய மற்றும் உடல் ரீதியான நலிவுநிலைக் காரணிகள் குறித்த தகவல் வழங்கக்கூடிய உங்களது பகுதிக்கு பிரத்யேகமான தரவு வளங்களை சேகரித்தல்.
-
உங்களது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வெப்பத்தினால்-அதிகம் நலிவடையக்கூடிய மக்கள்தொகை குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கக்கூடிய ஒரு ஆவணத்தை உருவாக்குவதற்கு இந்த தரவினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால், வெப்பநிலை/மக்கள்தொகை வரைபடங்கள் மீது இந்த தரவைக் குறித்து இணைத்து பல்வேறு வரைபடங்களின் தொகுப்பினை உருவாக்குங்கள் அல்லது ஒரு ஒட்டுமொத்த நலிவுநிலை குறியீட்டை உருவாக்குங்கள்.
வெளிப்பாடுகள்
-
உங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் எந்த மக்கள் எல்லாம் வெப்ப-நலிவுநிலைக்கு அதிகமாக பாதிக்கப்படுவார்கள் மற்றும் ஏன் என்பதை விளக்கும் ஒரு அட்டவணை அல்லது சிறு ஆவணம்.
-
முடிந்தால், நலிவுநிலைக்கு பொருத்தமான தரவு நிலைகளைக் கொண்ட அல்லது அதன் மீது வெப்ப நலிவுநிலைக் குறியீடு குறிக்கப்பட்டு வெப்ப மீள்திறனுக்கு செய்யப்பட்ட முதலீடுகளைத் தெரிவிக்கும் ஒரு வெப்பநிலை வரைபடம்(ங்கள்).
பலன்கள்
-
உள்ளூர்வாசிகளிடையே வெப்ப அபாயத்தை பாதிக்கக்கூடிய அடிப்படை பொருளாதார, சமுதாய மற்றும் ஆரோக்கிய குணாதிசயங்களைப் புரிந்துகொள்ளுதல்.
-
உங்களது பகுதியில் வெப்பத்திற்கு யார் அதிகம் நலிவடையக் கூடிய நிலையில் உள்ளார்கள் என்பதைக் கண்டறிதல்.
-
உங்களது பகுதியில் எங்கே மிகவும் ஆபத்தான வெப்ப பாதிப்பு உள்ளது மற்றும் ஏன் என்பதைக் கண்டறிதல்.
-
கொள்கைகள் மற்றும் திட்டங்கள் எப்படி வெப்பத்தினால்-நலிவடையக்கூடிய மக்களுக்கு முன்னுரிமை அளிக்க முடியும் என்பதை புரிந்துகொள்ளுதல்.
கண்ணோட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக முழுமையான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
வெப்பம்- சார்ந்த நலிவுநிலையில் உள்ள காரணிகள்
வெப்பம்-சார்ந்த நோய் அல்லது மரணம் ஏற்படக்கூடிய அபாயம் அனைத்து மக்களுக்கும் உள்ளது, ஆனால் அந்த அபாயத்தின் அளவு வேறுபடுகிறது. பல சமுதாய, பொருளாதார, மற்றும் உடல் சார்ந்த காரணிகள் வெப்பம்- சார்ந்த நோய் அல்லது மரணம் ஏற்படக்கூடிய ஒரு நபர் அல்லது சமூகத்தின் அபாயத்தை பாதிக்கிறது. இவற்றில் உள்ளடங்குபவை வயது, மதம்/சமுதாயப் பிரிவு, சமூக மக்களிடையே ஒற்றுமை, கலாச்சார விதிமுறைகள், ஒதுக்குதல்/ஓரம்கட்டுதல், பாலினம், வருமானம் மற்றும் சொத்து, மொழி, தொழில், இனம், ஏற்கெனவே உள்ள நோய் நிலைகள், ஒருசில பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துதல், மற்றும் குளிர்ச்சியான இடங்கள் மற்றும் குடி தண்ணீருக்கான அணுகல் ஆகியவை.
மூத்த வயதுவந்தோர்
65 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்களால் வெப்பத்திற்கு உடல்ரீதியாக தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாது.
தனியாக வாழும் மக்கள்
தனியாக வாழும் மக்கள், குறிப்பாக மாற்றுத்திறனுள்ள தனிநபர்கள், ஒரு வெப்ப அலை ஏற்படும் சமயத்தில் உயிரைக்-காப்பாற்றக்கூடிய தகவல் மற்றும் உதவியைப் பெறுவது கடினமாகும்.
5 வயதுக்கு உட்பட்ட பச்சிளங் குழந்தைகள் மற்றும் இதர குழந்தைகள்
5 வயதுக்கு உட்பட்ட பச்சிளங் குழந்தைகள் மற்றும் இதர குழந்தைகள் வெப்பத்தின் தாக்கங்களுக்கு ஆளாவார்கள் மேலும் பராமரிப்பு மற்றும் நீர்ச்சத்தைப் பெறுவதற்கு அவர்கள் மற்றவர்களைச் சார்ந்துள்ளனர்.
பெண்கள்
அந்த பகுதியின் அல்லது குடும்பத்தின் கலாச்சார விதிமுறைகளின் அடிப்படையில், பெண்கள் அதிகமாக வீட்டுக்கு உள்ளேயே இருக்கவேண்டும், வெப்பத்தால்-பாதிக்கப்படக்கூடிய வெளிப்புற அல்லது உட்புற வேலையை செய்ய வேண்டும் (எ.கா. ஒரு வெப்பமான அடுப்பிற்கு பக்கத்தில் சமையல் செய்தல்), அல்லது கனமான ஆடைகளை அணிய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படலாம்.
கர்ப்பிணி மக்கள்
கர்ப்ப காலத்தில், உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தக் கூடிய ஆற்றல் மக்களின் உடல்களுக்கு குறைவாக உள்ளது, இதன் காரணமாக கர்ப்பமாக உள்ள தனிநபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல், குறைப் பிரசவம், கருக்கலைப்பு மற்றும் மரணம் ஆகியவை ஏற்படுகின்றன.
ஏற்கெனவே நோய் பாதிப்புகள் உள்ள மக்கள்
வெப்பம் ஏற்கெனவே உள்ள நோய் பாதிப்புகளை அதிகப்படுத்தலாம் அல்லது பலமடங்கு பெறுக்கலாம், அல்லது வெப்பத்தின் பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாகக்கூடிய மருந்துகளை எடுத்து வரும் மக்கள் மீது எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும்.
வீடற்ற மக்கள்
தொடர்ந்து வீடுகளில் தங்குவதற்கான அணுகல் இல்லாத தனிநபர்களுக்கு தங்குமிடம், நிழல், ஏர் கண்டிஷனிங், அல்லது தண்ணீர் ஆகியவற்றுக்கான அணுகல் கிடைக்காமல் போகலாம்.
வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள்
வெளியில் வேலை செய்வது சூடான வெப்பநிலைகள் மற்றும் நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு ஆளாகும் சூழ்நிலையை உருவாக்குகிறது, மேலும் உடலின் வெப்பநிலையை அதிகரிக்கச் செய்யக்கூடிய தொடர்ச்சியான கடின உடலுழைப்பிலும் ஈடுபடவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது.
பூர்வீக மொழியைப் பேசாத மக்கள்
அவர்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள பூர்வீக மொழியைப் பேசாத மக்களுக்கு அவர்களது மொழியில் வெப்ப அலைகளின் போது பாதுகாப்பாக இருப்பதற்கான சமீபத்திய எச்சரிக்கைத் தகவல்களைப் பெற இயலாது.
வளங்கள்
மிகக்கடுமையான வெப்பக் கருவித்தொகுப்பு
- அமெரிக்கா
எந்த மக்கள் எல்லாம் நலிவு நிலையில் உள்ளனர் மற்றும் ஏன் என்பது குறித்த மேலும் தகவலுக்கு விஸ்கான்சின் பருவநிலை மற்றும் ஆரோக்கியத் திட்டத்தின் மிகக்கடுமையான வெப்பக் கருவித்தொகுப்பின் 9ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
நகரங்களுக்கான வெப்ப அலை வழிகாட்டி
- உலகெங்கும்
யாரெல்லாம் நலிவுநிலையில் உள்ளனர் மற்றும் ஏன் என்பது குறித்த ஒரு பயனுள்ள ஒரு-பக்கத் தகவலுக்கு செஞ்சிலுவை செம்பிறை பருவநிலை மையத்திற் நகரங்களுக்கான வெப்ப அலை வழிகாட்டியின் 18ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
முன்கள மருத்துவமனைகளுக்கான பருவநிலை மீள்திறன் கருவித்தொகுப்பு
- அமெரிக்கா
பரிந்துரைக்கப்பட்ட மருந்துப் பயன்பாடு, நாள்பட்ட நோய் பாதிப்புகள், மற்றும் கர்ப்பகாலம் ஆகியவை வெப்பத்துடன் எப்படி வினை புரிகிறது என்பது குறித்த வழிகாட்டுதலுக்கு, ஹாவர்டு சான் C-CHANGE மற்றும் அமெரிக்கேர்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட முன்கள மருத்துவமனைகளுக்கான பருவநிலை மீள்திறனில் “வெப்பம்” பகுதியைப் பாருங்கள்.
வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புக்கு அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்ளும் சமூக மக்களை அடையாளம் காணுதல்
நலிவுநிலை மதிப்பீடுகள் பெரும்பாலும் ஒரு பகுதி முழுவதும் எப்படி வெப்பநிலை விநியோகிக்கப்பட்டுள்ளது (ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை மேற்கொள்ளுதல் பகுதியைப் பார்க்கவும்), வயது, வருமானம், மற்றும் குளிர்வித்தலுக்கான அணுகல் (குளிர்வித்தல் மையங்கள், மரங்களின் மேற்பரப்பு விதானம் போன்றவை) மற்றும் மின்னாற்றல் சுமை ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யும்.
விரிவான வெப்ப நலிவுநிலை வரைபடங்களைத் தயாரிப்பதற்கும் வெப்பம் எங்கே மோசமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்த எதிர்கால முன்கணிப்புகளுக்காகவும் ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் அரசாங்கங்களுடன் கூட்டாக பணியாற்றுவார்கள். வெப்பத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட சமூகத்தினரை ஈடுபடுத்துவது (எ.கா. ஒரு கணக்கெடுப்பு அல்லது பங்கேற்பு மதிப்பீட்டு செயல்முறை மூலமாக) உங்களது மதிப்பாய்வு துல்லியமாகவும் மக்களின் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் உருவாவதையும் உறுதி செய்யும். ஒரு நலிவுநிலை மதிப்பீட்டைச் செய்ய ஆரம்பிக்கும்போது, சமூக மக்களை ஈடுபடுத்துவதற்கான ஒரு நடைமுறை செயல்திட்டத்தை உருவாக்க களப்பணி மற்றும் தகவல்தொடர்பைச் செய்வதற்கு உங்களிடம் உள்ள நேரம் மற்றும் வளங்களை கணக்கிடுங்கள்.
வளங்கள்
நகர்புற வெப்ப வரைபடமாக்கல் கட்டமைப்பு
- உலகெங்கும்
வெப்ப வரைபடமாக்கல் அணுகுமுறைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் பரிசீலனைகளின் ஒரு தொழில்புரிவோர்-சம்மந்தமான கண்ணோட்டத்திற்கு, அர்ஷ்ட்-ராக்கின் நகர்புற வெப்ப வரைபடமாக்கல் கட்டமைப்பைப் பார்க்கவும்.
நகர மீள்திறன் கருவித்தொகுதி
- இந்தியா
அரசு ஈடுபாடு மற்றும் நலிவுநிலை மதிப்பீட்டு செயல்முறைகளுக்கான சரிபார்க்கும் பட்டியல்கள் மற்றும் விளக்கங்களுக்கு, இயற்கை வளங்களின் பாதுகாப்புக் குழுவின் நகர மீள்திறன் கருவித்தொகுதி: ஆபத்தான வெப்ப அலைகளுக்கு நடவடிக்கை எடுத்தல் மற்றும் அதிகரித்துவரும் வெப்பநிலைகளுக்கு தயாராதல் இன் 10-12ஆம் பக்கங்களைப் பாருங்கள்.
டாக்காவில் வெப்ப அலை குறித்த சாத்தியக்கூறு ஆய்வு
- வங்கதேசம்
குறிப்பிட்ட மக்கள்தொகையின் (எ.கா. குடிசைப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் ரிக்ஷா ஓட்டுனர்கள்) மீது வெப்ப அலைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தால் பயன்படுத்தப்பட்ட ஒரு முறைக்கு டாக்காவில் வெப்ப அலை குறித்த சாத்தியக்கூறு ஆய்வின் 17-24 பக்கங்களைப் பாருங்கள்.
தாக்க முன்கணிப்பை இனம் காணுதல்
- வியட்நாம்
வியட்நாமின் ஹனோயியில் உள்ள நலிவு நிலையிலுள்ள பகுதிகளைஅடையாளம் காண்பதற்காக மென்பொருள் மற்றும் நிலப்பரப்பு தகவல் அமைப்பு வரைபடம் தயாரித்தல் முறைக்கான ஒரு உதாரணத்திற்கு ஜென்மன் செஞ்சிலுவை மூலமாக தயாரிக்கப்பட்ட தாக்க முன்கணிப்பை இனம் காணுதல்:வெப்ப அலைக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடிய நகர்புறப் பகுதிகளை இனம் காணுதலின் 2ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
அதிகார எல்லைகளுக்கு இடையிலுள்ள வித்தியாசங்களை அங்கீகரித்தல்
ஒவ்வொரு அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளும் வெப்பம்- சார்ந்த பிரத்யேகமான சவால்களை எதிர்கொள்கின்றன. அருகில் கடற்கரைகள் அல்லது மலைத்தொடர்கள் இருப்பது போன்ற நிலப்பரப்பு மற்றும் பருவநிலைக் காரணிகள் எப்படி உங்களது பகுதியை பாதிக்கிறது என்பதை யோசிக்கவும். மக்கள்தொகை மற்றும் பொருளாதார காரணிகளும் முக்கியமானவை ஆகும். உதாரணமாக, ஒரு நகரில் பல வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இருப்பார்கள்; மற்றொன்றில் ஒரு சுற்றுலாக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம், அதனால் வெளியில் இருந்து வரும் நபர்களைக் காப்பதற்கான திட்டங்களுக்கு அவசியத் தேவை உள்ளது; மற்றொன்றில் தற்போது அல்லது வரலாற்றுக் காலங்களில் இன ரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கலாம் மேலும் மற்ற வகையான ஒதுக்குதல்களையும் எதிர்கொண்டிருக்கலாம். ஒடுக்கப்படுதல் மற்றும் ஒதுக்குதல் ஏற்கெனவே மக்களின் ஆரோக்கியம், வளங்களுக்கான அணுகல், மற்றும் அரசின் மீது நம்பிக்கை ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன, மேலும் இது கடுமையான வெப்பத்தினால் மேலும் தீவிரமாகிவிடும்.
தண்ணீர் அமைப்புகள் அல்லது பசுமையான பகுதிகளின் மூலமாக வெப்பநிலைகளைக் குறைக்க முடியும். எனினும், பெரிய பூங்காக்கள் அல்லது குளங்கள் உள்ள பகுதிகளும் வாழ்வதற்கு மிகவும் பிரபலமான பகுதிகளாக இருக்கும் (மேலும் இத்தகைய பகுதிகளை புதிதாக உருவாக்குவது பெரும்பாலும் வசதிமிக்க மக்களுக்காகவே ஒதுக்கப்படுகிறது), அதனால் குறைந்த-வருமானமுள்ள மக்கள் இதில் இடங்களை வாங்க முடிவதில்லை அல்லது அத்தகைய பகுதிகளுக்குள் நுழையக்கூட முடிவதில்லை, அதனால் அவர்கள் வெப்பமான பகுதிக்குச் செல்ல நிர்பந்திக்கப் படுகின்றனர். கூடுதலாக, எல்லா குடிமக்களாலும் பசுமையான பகுதிகளை அணுக முடியாது. உதாரணமாக, பாதுகாப்புக் கவலைகள் அல்லது கலாச்சார காரணிகள் அடர்த்தியான பூங்காக்கள் மற்றும் காட்டுப் பகுதிகளுக்கு பெண்கள் தனியாக செல்வதைத் தடுக்கக் கூடும்.
ஒரு நிலப்பகுதியின் வெப்பம் சார்ந்த சாவல்களுக்கு பங்களிக்கக் கூடிய இதர காரணிகளில், சமூக மக்கள்தொகையில், மாசு ஏற்படுத்தும் வளங்களுக்கு அருகில் இருத்தல் மற்றும் புயல்கள், வெள்ளங்கள், மற்றும் வறட்சிகள் போன்ற கூடுதல் அபாயங்கள் ஆகியவை உள்ளடங்கும்.
வளங்கள்
நகர்புற வெப்பம் மற்றும் சமவாய்ப்பு: சி40களின் குளிர்ச்சியான நகரங்களின் கூட்டமைப்பில் இருந்து அனுபவங்கள்
- உலகெங்கும்
தங்களது சமூக மக்களிடையே யார் மிகவும் நலிவு நிலையில் உள்ளார்கள் என்பதை ஆராய்கின்ற பல்வேறு நகரங்களுக்கான ஒரு உதாரணத்திற்கு, சி40 மூலமாக தயாரிக்கப்பட்ட, நகர்புற வெப்பம் மற்றும் சமவாய்ப்பு: சி40களின் குளிர்ச்சியான நகரங்களின் கூட்டமைப்பில் இருந்து அனுபவங்கள், ஆவணத்தின் 6-16 பக்கங்களைப் பாருங்கள்.
அமெரிக்காவில் மிகக்கடுமையான வெப்பத்திற்கு மனித ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடிய நலிவு நிலைகளை இனம் காணுதல்
- அமெரிக்கா
நலிவு நிலைகளை இனம் காணும் பணியை நடத்தும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய பரிந்துரைகள் மற்றும் கேள்விகளின் ஒரு பட்டியலுக்கு அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அமெரிக்காவில் மிகக்கடுமையான வெப்பத்திற்கு மனித ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடிய நலிவு நிலைகளை இனம் காணுதல் ஆவணத்தின் 44-48 பக்கங்களைப் பாருங்கள்.
மிகக்கடுமையான வெப்பத்தை சமாளிப்பதற்கு சமவாய்ப்பினை மையமாகக் கொள்ளுதல்
- அமெரிக்கா
சமூக மக்களின் நலிவு நிலைகளை மதிப்பிடும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சமவாய்ப்பு- சம்மந்தமான கேள்விகளின் ஒரு பட்டியலுக்கு, நகர்புற மையத்தின் மிகக்கடுமையான வெப்பத்தை சமாளிப்பதற்கு சமவாய்ப்பினை மையமாகக் கொள்ளுதல் என்ற சுருக்கமான ஆவணத்தின் 12ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
பசுமைப் பகுதிகளை உருவாக்குதல்: சமூக மக்கள் இடம்பெயர்வதில் இருந்து அவர்களைப் பாதுகாத்தல்
- அமெரிக்கா
இடம்பெயர்வதற்கு-எதிரான கொள்கைகள் மற்றும் திட்டப் பரிந்துரைகளின் ஒரு தொகுப்பிற்கு, டெப்ஸ் பார்க், பப்ளிக் கவுன்சில் அமைந்துள்ள அடுபோன் மையம், மற்றும் SEACA வழங்கியுள்ள பசுமைப் பகுதிகளை உருவாக்குதல்: சமூக மக்கள் இடம்பெயர்வதில் இருந்து அவர்களைப் பாதுகாத்தல் என்ற ஆவணத்தின் 13ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
நலிவுநிலை மதிப்பீட்டு வெளிப்பாடுகளைப் பயன்படுத்துதல்
வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சமூக மக்களுடன் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக உருவான நலிவுநிலை மதிப்பீடுகள் திட்ட அல்லது திட்டமிடுதல் செயல்முறை முழுவதும் உங்களது முடிவு எடுத்தல் செயல்முறைக்கு வழிகாட்டுவதாக இருக்க வேண்டும். பொதுவாக, நலிவுநிலை மதிப்பீட்டின் மூலமாக யார் வெப்பத்திற்கு நலிவடைகிறார்கள், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், மற்றும் அவர்கள் எப்போது அதிக அபாயத்தில் இருக்கிறார்கள் என்பது தெளிவாக உணர்த்தப்பட வேண்டும்.
உதாரணமாக, வெப்பத்தின் காரணமாக யார் அதிக தாக்கத்தினை எதிர்கொள்கிறார்கள் மேலும் எப்படி என்பதை புரிந்துகொள்வதற்காக வெஸ்டர்ன் சிட்னி, ஆஸ்திரேலியா பல்வேறு வகையான பணிமனைகள் மற்றும் நேர்காணல்களை பங்குதாரர்களுடன் நடத்தியது.இதிலிருந்து நகர்புற வெப்பத் தீவு பாதிப்பு ஒரு தெளிவான பிரச்சனையாக தெரிய வந்தது, அதன் பலனாக, நகரின் செயல் திட்டத்தில் புதிய கட்டிடங்களை திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்பதன் மூலமாக நகர்புற வெப்பத் தீவு பாதிப்புகளைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. நலிவுநிலை மதிப்பீடுகளைப் பயன்படுத்துவது மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் முதலீடு செய்ய வேண்டும் என்கின்ற ஒரு தெளிவான மற்றும் குறிப்பிட்ட தேவையைப் புரிய வைக்கலாம்.
நீங்கள் நலிவுநிலை என்பதை எப்படி விவரிக்கிறீர்கள் என்பது உங்களது வெற்றியின் அளவீட்டை முடிவு செய்யும், மேலும் நலிவுறும் மக்களுடன் உள்ள ஈடுபாடு என்பது திட்டமிடுதல் செயல்முறைக்கு பிறகு நின்றுவிடக் கூடாது. சமூக மக்கள்-அடிப்படையிலான அல்லது சமூக மக்கள்-மூலமாக வழிநடத்தப்படும் முயற்சிகள் நீடித்த தன்மை கொண்டதாக மற்றும் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது, ஏனெனில் சமூக உறுப்பினர்கள் அந்த திட்டத்தில் முதலீடு செய்வார்கள் மேலும் எந்தெந்த விஷயங்கள் சரியாக செயல்படுகின்றன எங்கே அவை மேம்படுத்தப்படலாம் என்பது குறித்து முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை வழங்குகின்றனர்.
வளங்கள்
வெப்பத்தை வெற்றிகொள்ளுதல்
- உலகெங்கும்
மேற்கு சிட்னியின் உதாரணம் குறித்து மேலும் வாசிப்பதற்கு, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் மூலமாக பிரசுரிக்கப்பட்ட மற்றும் குளிர்வித்தல் கூட்டணி, ஆர்.எம்.ஐ, பருவநிலை மற்றும் மின்சக்திக்கான மேயர்களின் உலகளாவிய உடன்படிக்கை, மிஷன் இனோவேஷன், மற்றும் சுத்தமான குளிர்வித்தல் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெப்பத்தை வெற்றிகொள்ளுதல்: நகரங்களுக்கான ஒரு நிலையான குளிர்வித்தல் கைப்புத்தகத்தின் 64-66 பக்கங்களைப் பார்க்கவும்.
வெப்ப அலைகள் மற்றும் வீடற்ற நிலை
- ஆஸ்திரேலியா
மெல்பர்ன் நகரம் வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட வீடற்ற மக்களின் மீது எப்படி கவனம் செலுத்தியது என்பதற்கான ஒரு உதாரணத்திற்கு, ஆஸ்திரேலிய நகரின் உக்தி வெப்ப அலைகள் மற்றும் வீடற்ற நிலை என்பதைப் பாருங்கள்.
நகரங்களுக்கான வெப்ப அலை வழிகாட்டி
- உலகெங்கும்
வெப்ப நலிவுநிலை மதிப்பீடுகள் குறித்த கூடுதல் உதாரண ஆய்வுகளைக் காண்பதற்கு செஞ்சிலுவை செம்பிறை பருவநிலை மையத்தின் நகரங்களுக்கான வெப்ப அலை வழிகாட்டியின் பக்கங்கள் 36-37ஐ பாருங்கள்.
பொதுவான சவால்கள்
ஒரு நலிவுநிலை மதிப்பீட்டை உருவாக்குவதில் உள்ள ஒரு பொதுவான சவால் அரசு அல்லது வெளி ஆராய்ச்சியாளர்கள் மீது சமூக மக்களுக்கு ஏற்படக்கூடிய நம்பிக்கை இன்மையாகும். முறையான மற்றும் முழுமையான சமூக மக்கள் ஈடுபாடு மற்றும் செயல்முறைக்கு நேரம் மற்றும் வளங்கள் அர்ப்பணிக்கப்படுவது அவசியமாகும், ஆனால் இந்த மாதிரியான மதிப்பீட்டில் இதற்கு முன்பு ஒருசில சமூக மக்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்க மாட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்வது முக்கியமாகும், அதனால் நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. மக்கள் இதேபோன்ற மதிப்பீடுகளில் ஏற்கெனவே ஈடுபடுத்தப் பட்டிருந்தாலும், தங்களது ஈடுபாட்டிற்கு பலன்கள் ஏற்படுவதைப் பார்ப்பதற்கு முன்னால் கூடுதல் நேரத்தை முதலீடு செய்யத் தயங்குவார்கள். சமூக உறுப்பினர்களை அணுகுவதற்கு முன்னால், வரலாற்றுப்பூர்வமான உறவுகளையும், முன்பு மேற்கொள்ளப்பட்ட ஈடுபாட்டு முயற்சிகளையும் பற்றி புரிந்துகொள்வதற்கு சமூக மக்கள் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களுடன் பணியாற்ற வேண்டும்.
ஒரு நலிவுநிலை வரைபடத்தை உருவாக்கும்போது, உயர் தரமான தரவு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம் (எ.கா. மக்கள்தொகையியல் தரவு, வெப்பநிலைத் தரவு) அல்லது அந்த தரவை சேகரிக்க அல்லது தயாரிக்க மற்றும் பயன்படுத்துவதற்கு தேவையான வளங்கள் மற்றும் ஆற்றல் இல்லாமல் போகலாம். அதேபோன்ற இலக்குகள் அல்லது ஆராய்ச்சித் திறன் உள்ள பங்காளர்களை அடையாளம் காண்பது இந்த இடைவெளியை நிரப்புவதற்கு உதவலாம்.
வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை நடத்துதல் என்பதைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.
இந்த பாடத்திட்டத்தில் இருந்து அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்களை மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள்.