பாடத்திட்ட நோக்கம்
வெப்ப நடவடிக்கைக்கு நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல் பாடத்திட்டத்திற்கு வரவேற்கிறோம்! வெப்ப நடவடிக்கைக்கு நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல் பாடத்திட்டம் வெப்ப மீள்திறன் மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளால் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள பலன்களை எப்படி அளவிடுவது என்பதற்கு வழிகாட்டுதலை வழங்குகிறது, மேலும் நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குவதற்கான ஆதாரங்களைக் கண்டறிகிறது.
வெப்ப மீள்திறனில் முதலீடு செய்வதில் எப்போதும் புதிய நிதி அல்லது நிதியுதவி ஆதாரங்கள் தேவைப்படுவதில்லை. பெரும்பாலான சூழ்நிலைகளில், வெப்பம்- சார்ந்த பரிசீலனைகளை தற்போதுள்ள அல்லது தொடர்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள், வழிகாட்டுதல்கள், மற்றும் திட்டப்பணிகளில் குறைவான கூடுதல் நிதிச் செலவிலேயே ஒருங்கிணைக்க முடியும். எனினும், வெப்பம்- சார்ந்த திட்டமிடுதல் மற்றும் திட்டப் பணிகளுக்கு புதிய மூலதன முதலீடு மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட செயல்பாட்டு பட்ஜெட் ஆகியவையும் தேவைப்படலாம். பூகோலப் பின்னணி, அரசு அமைப்பு, திட்டப் பங்காளர்கள், உள்ளூர் ஒழுங்குமுறைகள், கிடைக்கக்கூடிய பட்ஜெட்டுகள், மற்றும் கடன் தகுதிகள் ஆகிய காரணிகள் கிடைக்கக்கூடிய வளங்களை பாதிக்கும். ஒரு வழங்கப்பட்டுள்ள திட்டப்பணியில் வாய்ப்புள்ள பலன்களை—பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பலன்கள் ஆகிய இரண்டும்—அடையாளம் காண்பது என்பதும் நிதி ஆதாரம் மற்றும் நிதியுதவி வழங்குதல் தொடர்பாக தகுதியானதாக்க ஒரு முக்கிய படிநிலையாகும்.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
நிதி ஆதாரம் மற்றும்/அல்லது நிதியுதவி வழங்குதல் தொடர்பாக தகுதியானதாக்க ஒரு குறிப்பிட்ட திட்டப்பணியிலிருந்து கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ள பலன்களை – ஆரோக்கியம், மற்றும் அரசியல் – அடையாளம் காணுதல்.
-
உங்களது திட்டத்திற்கு(திட்டங்களுக்கு) கிடைக்கக்கூடிய நிதி ஆதாரம் அல்லது நிதியுதவிகளை, அதாவது கடன்கள், அரசு-தனியார் கூட்டுத்திட்டங்கள், மானிய நிதியுதவி, மற்றும் தனியார் துறை நிதித் திட்டங்கள், ஆகியவற்றை திட்டப் பங்காளர்களின் ஒத்துழைப்புடன் கண்டறிதல்.
-
தொடர்புடைய அமைப்புகளுக்கு நேரடியாகவோ அல்லது பங்காளர்களுடன் இணைந்தோ/மூலமாகவோ களப்பணியை துவங்குதல்.
வெளிப்பாடுகள்
-
தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டப் பணிகள் மற்றும் வாய்ப்புள்ள பலன்களைப் பட்டியலிடும் ஆவணம்.
-
பொருத்தமான நிதியுதவி வழங்குவோருக்கான மின்னஞ்சல்கள் அல்லது நிதியுதவி முன்மொழிவுகள் போன்ற களப்பணிப் பொருட்கள்.
பலன்கள்
-
கிடைக்கக்கூடிய நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு முறைகளை அடையாளம் காணுதல்.
-
வெப்ப மீள்திறன் உக்திகளின் சமுதாய மற்றும் பொருளாதாரப் பலன்களை மதிப்பிடுதல்.
-
வெப்பத்திற்கு எப்படி ஒரு பேரிடர் அபாய நிதி அணுகுமுறையைப் பயன்படுத்த முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
கண்ணோட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக முழுமையான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
வெப்ப மீள்திறன் திட்டங்களுக்கு பணம் வழங்குதல்
வெப்ப மீள்திறனுக்கான நிதியுதவி மற்றும் நிதி ஆதரவிற்கான ஆதாரங்களில் அரசு நிதிகள் அல்லது அரசு-தனியார் கூட்டு முயற்சிகள் முதல் வர்த்தக அல்லது சலுகைக் கடன்கள் மற்றும் உள்ளூர், பிராந்திய, அல்லது தேசிய அரசுகள் மூலமாக வழங்கப்படும் மானிய நிதியுதவிகள் மற்றும் மனிதநேய, வளர்ச்சி மற்றும் கொடையளிக்கும் நிறுவனங்களின் நிதியுதவிகள் வரை அடங்கும். உங்களது தேசிய அரசுடன் பணியாற்றுவது அமெரிக்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் மூலமாக நிதியுதவி வழங்குதல் போன்ற நேரடி நிதியுதவிக்கான, அல்லது பசுமை பருவநிலை நிதி அல்லது உலகளாவிய சுற்றுச்சூழல் அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள் மூலமான புதிய நிதியுதவிகளுக்கான வாய்ப்பையோ உருவாக்கும்.
வெப்பம் பல்வேறு-பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கங்களின் காரணமாக, பல்வேறு வகையான நிதிகள்–சுகாதாரத்திற்கான, மின்னாற்றல் செயல்திறனுக்கான, அவசரக்கால நடவடிக்கை போன்றவற்றுக்கான–நிதிகள் வெப்ப மீள்திறன் திட்டப் பணிகளுக்காக பயன்படுத்தப்படலாம். உங்களது தேடலைத் துவங்கும்போது பல்வேறு துறைகள் மற்றும் நிதி ஆதாரங்களையும் விரிவாக தேடுங்கள்.
நிதியுதவி ஆதாரங்கள்
- அரசுகளுக்கு இடையிலான பரிமாற்றங்கள்
- வரிகள்
- நில மதிப்பினை பிடித்தம் செய்தல்
- பயனர் கட்டணங்கள்/சுங்க வரிகள்
- இதர பயன்களுக்காக அபராதங்கள்/தண்டத்தொகைகள் திருப்பி விடப்படுதல்
- அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி
- அர்ப்பணிக்கப்பட்ட பருவநிலை நிதிகள்
வளங்கள்
வெப்பத்தை வெற்றிகொள்ளுதல்
- உலகெங்கும்
நகர்புற கட்டமைப்புத் திட்டப்பணிகளுக்கு ஆதரவு வழங்கக்கூடிய வாய்ப்புள்ள நிதி ஆதாரங்களைப் பற்றிய விளக்கத்திற்கு குளிர்ச்சிக் கூட்டணி, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், ஆர்.எம்.ஐ, பருவநிலை மற்றும் மின்சக்திக்கான மேயர்களின் உலகளாவிய உடன்படிக்கை, மிஷன் இனோவேஷன், மற்றும் சுத்தமான குளிர்வித்தல் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெப்பத்தை வெற்றிகொள்ளுதல் கைப்புத்தகத்தின் 182, 185, 190 மற்றும் 191 பக்கங்களைப் பார்க்கவும்.
நிதியளிக்கத்-தயாராக-உள்ள மீள்திறன் கருவித்தொகுப்பு
- அமெரிக்கா
அமெரிக்க உள்ளூர் அரசுகள் அதிகமாக நிதியளிக்கத்தக்க பருவநிலை மீள்திறன் திட்டங்களை எப்படி வடிவமைக்க முடியும் என்பது குறித்த ஒரு வழிகாட்டுதலுக்கு, தகவமைத்தல் வல்லுநர்கள் மற்றும் பருவநிலை மீள்திறன் ஆலோசனை வழங்கும் அமெரிக்க சங்கத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட நிதியளிக்கத்-தயாராக-உள்ள மீள்திறன் கருவித்தொகுப்பைப் பாருங்கள்.
நிதியுதவி ஆதாரங்கள்
- வளர்ச்சி நிதி
- அரசு-வழங்கிய கடன்
- அரசு-தனியார் கூட்டு முயற்சிகள்
வளங்கள்
குளிர்ச்சியான நகரங்களுக்கான முதல் புத்தகம்
- உலகெங்கும்
நகர்புற குளிர்வித்தலுக்கான உக்திகளைப் பற்றிய ஒரு அறிமுகத்திற்கு உலக வங்கியின் குளிர்ச்சியான நகரங்களுக்கான முதல் புத்தகத்தின் 7ஆம் அத்தியாயத்தைப் பார்க்கவும்.
இயற்கையில் முதலீடு செய்தல்: பாதுகாத்தல் மற்றும் இயற்கை-அடிப்படையிலான தீர்வுகளுக்கு நிதியுதவி அளித்தல்
- ஐரோப்பா
பாதுகாப்பு மற்றும் இயற்கை-அடிப்படையிலான தீர்வுகளுக்கான நிதியுதவி அளித்தல் பற்றி புரிந்துகொள்வதற்கு, அதிலும் முக்கியமாக ஐரோப்பாவை-அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தும் ஒரு ஏழு-படிநிலை கட்டமைப்பிற்கு, இயற்கையில் முதலீடு செய்தல்: பாதுகாத்தல் மற்றும் இயற்கை-அடிப்படையிலான தீர்வுகளுக்கு நிதியுதவி அளித்தல் என்பதன் 7ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
பேரிடர் அபாய நிதியுதவி
குறிப்பிடும்படியான அளவுக்கு குளிர்வித்தல் கட்டமைப்பைக் கொண்ட நகரங்களில் கூட, வெப்ப சம்பவங்களின் போது வெப்பம்-சார்ந்த அபாயங்கள் கடுமையாகும். ஒரு வெப்ப நிகழ்வு ஏற்படும்போது அதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு (அல்லது தயாராக இருப்பதற்கு) செலவிட அரசிடம் போதுமான அளவுக்கு நிதி ஆதாரங்கள் இருப்பதை பேரிடர் அபாய நிதியுதவி சாதனங்கள், அதாவது காப்பீடு போன்றவை உதவுகிறது. இந்த நிதி சாதனங்கள் ஒரு வெப்ப அலை ஏற்படும்போது உயிர்களைக் காப்பாற்ற உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கும், விழிப்புணர்வு இயக்கங்களை நடத்துவதற்கு, குளிர்வித்தல் மையங்களை அமைப்பதற்கு, மற்றும் தொழில்கள், அரசுகள், நிறுவனங்கள், சமூகங்கள், மற்றும் விரிவான சுகாதார தாக்கங்களின் காரணமாக வீடுகளுக்கு ஏற்படக்கூடிய அதிகமான செலவுகள், குறைந்துவிடக்கூடிய உற்பத்தித் திறன் மற்றும் கட்டமைப்புக்கு ஏற்படக்கூடிய சேதம் ஆகியவற்றுக்கும் ஆகக்கூடிய செலவுகளுக்கு நிதி வழங்கும்.
உலகெங்கும், வெப்ப அலைகளின் போது அது குறித்த முன் கணிப்புகளின் அடிப்படையில் மனிதநேய உதவித் தொகைகளை வழங்குவது உள்பட வெப்ப அபாய பண மாற்றம் அல்லது அது தொடர்பான மனிதநேய நடவடிக்கைகளுக்காக பல்வேறு வகையான கட்டமைப்புகள் மற்றும் முன்னுதார சாதனங்கள் ஆராயப்பட்டு அல்லது உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கான ஒருசில உதாரணங்களில் பாக்கிஸ்தானின் கராச்சியில் ஸ்டார் நெட்வொர்க், வியட்நாம் ஹநோயில் சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு (IFRC), மற்றும் இந்தியாவின் தில்லியிலும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலும் வர்த்தக விருப்பத்தேர்வுகள் ஆகியவை உள்ளடங்கும். இவை யாவும் ஒரு வெப்ப அலைக்கான நடவடிக்கை எடுப்பதற்கு நகரங்களுக்கு நிதி தேவைப்படும் சமயத்தில் அவர்களது கைகளில் நிதி இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு புதிய முறைக்கான உதா ரணங்களாகும்.
வளங்கள்
வெளிப்படுத்தப்படுகிறது: மிகக்கடுமையான வெப்பத்தின் உண்மையான பாதிப்பு
- உலகெங்கும்
வெப்ப நிகழ்வுகளுக்கு எப்படி முன்கூட்டியே நிதிக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு, அர்ஷ்ட்-ராக்கின் வெளிப்படுத்தப்படுகிறது: மிகக்கடுமையான வெப்பத்தின் உண்மையான பாதிப்பின் 9ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
பலன்களை அளவிடுதல்
வெப்ப மீள்திறன் நடவடிக்கைகளில் முதலீடு செய்வதால் மின்னாற்றல் செலவுகள், சுகாதாரப் பராமரிப்பு செலவுகள், மற்றும் கட்டமைப்பு சேதம் ஆகியவை குறையலாம், அத்துடன் இது தொழிலாளர் உற்பத்தித் திறனையும் மற்றும் இதர பலன்களையும் மேம்படுத்தலாம். முதலீட்டுக்கான ஒரு முறையாக இதை உருவாக்குவதற்கு இதன் முழுமையான பலன்களை மதிப்பிடுவது என்பது ஒரு முக்கியமான பகுதியாகும், அத்துடன் தாக்க நிதிப்பத்திரங்கள் போல, ஒருசில வகையான முதலீட்டிற்கு இத்தகைய பலன்களை தொடர்ச்சியாக அல்லது அதற்கு முந்தைய காலத்தில் இருந்தே அளவிடுவது என்பது ஒரு முன்நிபந்தனைத் தேவையாக இருக்கலாம்.
வளங்கள்
வெப்ப மீள்திறன் கொண்ட நகரங்களின் பலன்கள் கருவி
- உலகெங்கும்
பச்சை மற்றும் நீலக் கட்டமைப்புகள் மற்றும் அத்துடன் குளிர்ச்சியான மேற்பரப்புகளின் மூலமாக கிடைக்கக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதாரப் பலன்களை மதிப்பிடுவதற்கான ஒரு செலவுப்-பலன் மதிப்பாய்வுக் கருவிக்கு, சி40 மற்றும் ராம்போல் மூலமாக வடிவமைக்கப்பட்ட வெப்ப மீள்திறன் கொண்ட நகரங்களின் பலன்கள் கருவியைப் பாருங்கள்.
ஸ்மார்ட் மேற்பரப்புகளின் செலவுப்-பலன் பகுப்பாய்வு இயந்திரம்
- அமெரிக்கா
பல்வேறு வகையான ஸ்மார்ட் மேற்பரப்பு தொழில்நுட்பங்களின் கலவையுடன் தொடர்புடைய அமெரிக்க நகரங்களுக்கான செலவு மற்றும் பலன்களை மதிப்பீடு செய்யும் ஒரு கருவிக்கு, ஸ்மார்ட் மேற்பரப்புகள் கூட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் மேற்பரப்புகளின் செலவுப்-பலன் பகுப்பாய்வு இயந்திரத்தைப் பாருங்கள்.
புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்டவற்றை ஒருங்கிணைத்தல்: அடுத்த தலைமுறை கட்டமைப்பை உருவாக்குதல்
- உலகெங்கும்
வாய்ப்புள்ள செலவுக் குறைப்புகள், பொருளாதார இணைப்-பலன்கள், மற்றும் புதிய கட்டமைப்பு செலவுகளுக்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு, உலக வங்கிக் குழுமம் மற்றும் உலக வளங்கள் மையத்தின் கூட்டணியின் மூலமாக தயாரிக்கப்பட்டபுதிய மற்றும் புதுப்பிக்கப்பட்டவற்றை ஒருங்கிணைத்தல்: அடுத்த தலைமுறை கட்டமைப்பை உருவாக்குதல் என்பதன் 51-59 பக்கங்களைப் பாருங்கள்.
வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை நடத்துதல் என்பதைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.
இந்த பாடத்திட்டத்தில் இருந்து அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்களை மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள்.