பாடத்திட்ட நோக்கம்
ஒரு வெப்பச் செயல்திட்டத்தை உருவாக்குதல் பாடத்திட்டத்திற்கு வரவேற்கிறோம்! ஒரு வெப்பச் செயல்திட்டம் என்பது வெப்பம்-சார்ந்த தாக்கங்களுக்கு நடவடிக்கை எடுக்கவும் அதைக் குறைக்கவும் பலதரப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறது. வெப்ப செயல்பாட்டைத் திட்டமிடுதல் என்பது சமூக பங்காளர்களுடன் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் மேலும் அதை தயார்படுத்துதல், அதற்கு நடவடிக்கை எடுத்தல், மற்றும் வெப்ப மேலாண்மையில் இருந்து மீளுதல் நிலைகளில் ஒருங்கிணைப்பினை அதிகரிப்பதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலவகையான பொறுப்பாளர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்.
இந்த திட்டங்களில் அவசரக்கால எதிர் நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளெங்கும் மேற்கொள்ளப்படும் நீண்டகால வெப்பத்திற்கு தயார்படுத்துதல் மற்றும் குளிர்வித்தல் நடவடிக்கைகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியிருக்க வேண்டும். அவை பெரும்பாலும் ஒரு நகராட்சி அரசின் பல்வேறு துறைகள் மற்றும் உள் மற்றும் வெளி நிறுவனங்கள் ஆகியோருக்கு இடையே உள்ள பங்குகள் மற்றும் பொறுப்புகளை வலியுறுத்துகின்ற ஒரு ஏற்கப்பட்ட செயல்திட்டத்தை உள்ளடக்கியதாக இருக்கும்.
இந்த பாடத்திட்டம் முன்னனியான நடைமுறைகளில் காலூன்றிய ஒரு செயல்படுத்தக்கூடிய வெப்பச் செயல்திட்டத்தை உருவாக்க உங்களுக்கு உதவுவதற்கு முந்தைய திட்டமிடல் படிநிலைகளை ஒருங்கிணைக்கிறது.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
பொருத்தமான பங்குதாரர்களுடன் கூட்டாக இணைந்து முந்தைய பாடத்திட்டங்களில் உருவாக்கப்பட்ட வெளிப்பாடுகளை சேகரித்து ஒருங்கிணைத்தல்.
-
அனைத்து பங்குதாரர்களிடையே திட்ட உருவாக்கம், இயக்கம், செயல்படுத்துதல், மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கு ஒரு வெப்பச் சாம்பியனை அடையாளம் கண்டு அவருக்கு அதிகாரமளித்தல்.
-
முக்கிய நடவடிக்கைகள், ஒவ்வொன்றுக்குமான பொறுப்பான செயல்பாட்டாளர்கள், மற்றும் செயல்படுத்துவதற்கான காலக்கட்டம் மற்றும் பொதுவெளியில் வழங்கப்படும் திட்ட வளர்சசி பற்றிய அறிக்கைகள் ஆகியவை உள்ளிட்ட திட்டப்பணிக்கான ஒரு திட்டத்தை உருவாக்குதல்.
-
நீங்கள் எப்படி “வெற்றியை” விவரிப்பீர்கள் என்பதையும் மேலும் முக்கிய செயல்திறன் குறிக்காட்டிகள் மற்றும் அந்த குறிக்காட்டிகளை கண்காணிப்பதற்கான ஒரு கால அளவு உள்பட ஒரு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு செயல்முறையை உருவாக்குவீர்கள் என்பதையும் முடிவு செய்தல்.
வெளிப்பாடுகள்
-
பட்டியலிடப்பட்ட நடவடிக்கைகள், அவ்வாறு திட்டமிடப்பட்ட செயல்பாடுகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பொறுப்பான செயல்பாட்டாளர்கள், மற்றும் ஒரு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைக் கொண்ட வெப்பச் செயல்திட்ட ஆவணம்.
பலன்கள்
-
வெப்பம்-சார்ந்த குறுகிய-கால மற்றும் நீண்ட-கால முன்னுரிமைகள் மற்றும் நடவடிக்கைகள் அடையாளம் காணப்படும்.
-
வெப்பம்-சார்ந்த குறுகிய-கால மற்றும் நீண்ட-கால முன்னுரிமைகள் மற்றும் நடவடிக்கைகள் அடையாளம் காணப்படும்.
-
தற்போதைய பங்காளர்கள் மற்றும் உங்களது அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மிகக்கடுமையான வெப்பத்தை நிர்வகிப்பதற்கான முக்கியமான உறவுகள் அடையாளம் காணப்படும்.
-
வெப்பச் செயல்திட்டத்தை எப்படி தற்போதுள்ள திட்டமிடுதல் முயற்சிகளுடன் ஒருங்கிணைக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுதல் (எ.கா. பருவநிலை தகவமைத்தல் திட்டங்கள், அவசரக்கால நடவடிக்கைத் திட்டங்கள்)
கண்ணோட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக முழுமையான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
ஒரு “நல்ல” வெப்பச் செயல்திட்டம் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?
ஒரு வெற்றிகரமான வெப்பச் செயல்திட்டம் என்பது…
- அதிக வெப்ப-நலிவுநிலையிலுள்ள மக்களுக்கான தேவைகளின் அடிப்படையில் அந்த மேம்பாட்டு செயல்முறையின் ஆரம்பம் முதலே சமூக உறுப்பினர்கள் திட்டத்தை இணைந்து-உருவாக்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமாக நடவடிக்கைகளை உருவாக்குதல்.
- கட்டிடக் குறியீடுகள் முதல் பொது சுகாதார தயார்நிலை நடவடிக்கைகள் வரையிலான முயற்சிகளை பரிசீலித்து ஒரு முழுமையான அமைப்பு சார்ந்த அணுகுமுறையை எடுத்தல்.
- தற்போதுள்ள ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் திட்டமிடுதல் செயல்முறைகளிலே வெப்ப நடவடிக்கைகளை ஒன்றிணைப்பதன் மூலமாக வெப்ப திட்டமிடுதலை பிராந்திய நகர்புற திட்டமிடுதல் நீரோட்டத்துடன் இணையச் செய்கிறது.
- மிகக்கடுமையான வெப்பத்தின் தாக்கத்தை சரிசெய்யக்கூடிய நடவடிக்கைகளை செயல்படுத்துவதை விரைவுபடுத்துவதற்காக ஆதரவு திரட்டக்கூடிய ஒரு பொறுப்பான வெப்பச் சாம்பியன் அல்லது சாம்பியன்களின் குழுவை அடையாளம் காண்கிறது.
- மிகக்கடுமையான வெப்பத்தின் எதிர்மறை தாக்கங்களை குறைக்கக்கூடிய நடவடிக்கைகளின் வளர்ச்சியைக் பின்தொடர்கின்ற தெளிவான அளவீட்டைக் கண்காணிப்பதற்கான ஒரு சாத்தியமான அமைப்பினை உருவாக்கி அதை வரையறுக்கிறது.
ஒரு வெப்பச் செயல்திட்டத்தின் முக்கிய பாகங்கள்
வெப்ப அபாயங்கள் மற்றும் தாக்கங்களை விளக்குதல்
வெப்பச் செயல்திட்டங்கள் பெரும்பாலும் அந்த பகுதி எதிர்கொள்ளக்கூடிய வெப்பம்-சார்ந்த சவால்களை விவரிப்பதன் மூலமாக துவங்குகிறது– அதன் சாராம்சம் என்னவென்றால், திட்டமிடுதலும் நடவடிக்கையும் ஏன் அவசியமானது என்பதற்கான பின்னணியை நிர்ணயிக்கிறது. இந்த சவால்களின் கதையை தெரிவித்து அதற்கு ஆதாரத்தை வழங்கக்கூடிய பொதுவாக குறிப்பிடப்படுகின்ற இரண்டு தரவு வகைகள் யாதெனில்:
- வெப்ப அலை நாட்களின் எண்ணிக்கை (அல்லது மிகக்கடுமையான வெப்ப நாட்கள்), மற்றும் அந்த தொடர் நிகழ்வில் இருக்கக்கூடிய ஏதேனும் குறிப்பிட்ட போக்குகள்.
- வெப்ப வரைபடம் தயாரித்தல் அல்லது நலிவு நிலை வரைபடம் தயாரித்தல் என்பது முறையே குறிப்பிட்ட மக்கள்தொகை அல்லது பகுதியினர் எதிர்கொள்ளக்கூடிய வெப்ப மற்றும் நலிவுநிலை பாதிப்புகளை அடையாளம் காண்கிறது.
ஒரு திட்டத்தில் உள்ளடங்கக்கூடிய, தற்போதைய சம்பவங்கள் முதல் முறையான ஆய்வுகள் மற்றும் பருவநிலை மாதிரிகள் வரை, அபாயங்கள் மற்றும் தாக்கங்களுக்கான இதர உதாரணங்களுக்கு கீழே பார்க்கவும்.
Resources
பருவநிலை செயல்திட்டம் 2050: பியூனஸ் ஏர்ஸ் நகரம்
- அர்ஜண்டீனா
நகரங்கள் ஒரு விரிவான பருவநிலை செயல்திட்டத்திற்குள் எப்படி வெப்ப வரைபடம் தயாரித்தலை ஒன்றிணைக்க முடியும் என்பதற்கான ஒரு உதாரணத்திற்கு, பியூனஸ் ஏர்ஸ் பருவநிலை செயல்திட்டத்தின் 30-32 பக்கத்தைப் பாருங்கள்.
பாஸ்டனுக்கான வெப்ப மீள்திறன் தீர்வுகள்
- அமெரிக்கா
பாஸ்டன் நகரின் பகல்நேர மற்றும் இரவுநேர காற்று வெப்பநிலை வரைபடங்களுக்கான உதாரணங்களுக்கு, பாஸ்டனுக்கான வெப்ப மீள்திறன் தீர்வுகளின் 60-61ஆம் பக்கங்களைப் பாருங்கள்.
ஒரு பகுதியில் மிகக்கடுமையான வெப்பத்தின் தாக்கம்
சுகாதாரத் தாக்கங்கள்
மிகக்கடுமையான வெப்பத்தின் காரணமாக அதிகரித்துள்ள மரணங்களின் எண்ணிக்கை அல்லது வெப்பம்-சார்ந்த நோய்கள்.
வடமேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவில் 2021 இல் ஏற்பட்ட வெப்ப அலையின் போது, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 619 மக்கள் வெப்ப-சார்ந்த காரணங்களால் இறந்தார்கள்.
விவசாய இழப்புகள்
மிகக்கடுமையான வெப்பத்தின் காரணமாக பயிற்களுக்கு ஏற்படக்கூடிய அதிகமான அழிவு அல்லது வளர்ச்சிக் குறைபாடு.
2022இல், ஐரோப்பிய ஒன்றியப் பகுதியில் வெப்ப அலைகள் மற்றும் வறட்சியின் காரணமாக கோதுமை, சூரியகாந்தி மற்றும் சோயா மொச்சை ஆகியவற்றின் மகசூல் 8-9% வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் உற்பத்தித்திறன் இழப்புகள்
மிகக்கடுமையான வெப்பத்தின் காரணமாக ஒரு பொருளாதாரத்தில் பணி செய்யும் மக்கள் மூலமாக இழக்கப்பட்ட பணி நேரங்கள்.
மிகக்கடுமையான வெப்பத்திற்கு இந்தியா தற்போது ஒரு ஆண்டுக்கு 100 பில்லியன் மணி நேரங்களுக்கும் அதிகமான தொழிலாளர் பணிநேரத்தை இழப்பதாக ஆராய்ச்சிகள் மதிப்பிட்டுள்ளன.
கற்றல் இழப்புகள்
மிகக்கடுமையான வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்படுவதால் இழக்கப்பட்ட வகுப்பறை மணிநேரங்கள்.
2023 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தேர்வு நடைபெறுகின்ற வாரத்தில் மிகக்கடுமையான வெப்பத்தை எதிர்கொண்ட கொலம்பிய மாணவர்கள் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றுள்ளதைக் கண்டறிந்துள்ளது.
மின்சக்தித் தேவை
மிகக்கடுமையான வெப்பத்தின் போது விண்ணை முட்டும் குளிர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதிகரிக்கும் மின்சக்திக்கான தேவை.
ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில், வெப்பநிலை 35°C மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் நாட்களில் வீடுகளின் மின்சாரப் பயன்பாடு வழக்கத்தை விட மூன்று முதல் நான்கு மடங்குகள் அதிகமாக இருக்கும், இது மின் கட்டமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி மின் தடைகள் ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
கட்டமைப்பு சேதாரம்
மிகக்கடுமையான வெப்பத்தின் காரணமாக ஏற்பட்ட கட்டமைப்பு சேதாரத்திற்கான அதிகரித்துள்ள இயக்க மற்றும் பராமரிப்புக் செலவுகள்.
ஒரு 2022 கோடைக்கால வெப்ப அலையின்போது, ஐக்கிய ராஜியத்தில், அதிக வெப்பநிலையின் காரணமாக இரயில் இருப்புப் பாதைகள் வளைந்துவிட்டன மேலும் சாலைகள் நெளிந்துவிட்டன.
வெப்பத்திற்கு-ஆட்பட்ட மக்கள்தொகை
நடவடிக்கைகளை அடையாளம் காணவும் முன்னுரிமை வழங்கவும் உதவுவதற்கு, வெப்பச் செயல்திட்டம் என்பது பொதுவாக ஒரு மக்கள்தொகை மதிப்பாய்வை உள்ளடக்கியதாக இருக்கும், அதில் முக்கிய மக்கள்தொகை, குறிப்பாக மிகக்கடுமையான வெப்ப விளைவுகளின் அபாயத்தில் உள்ள மக்கள்தொகை சிறப்பித்து காண்பிக்கப்பட்டிருக்கும். இந்த மதிப்பாய்வுகள் பெரும்பாலும் எந்த வடிவில் வழங்கப்பட்டிருக்கும் என்றால்:
- நலிவுநிலையில் உள்ள மக்கள்தொகை அட்டவணை, இது வெப்பத்திற்கு-அதிகமாக ஆட்பட்ட அல்லது வெப்பத்தின் காரணமாக உடல்ரீதியான, சமுதாய, அல்லது பொருளாதார ரீதியான நலிவுநிலைகளைக் கொண்ட மக்களை அடையாளம் காண்பதன் மூலமாக அவர்களுக்கான பிரத்யேகமான இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை உருவாக்க அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பளிக்கிறது.
- நலிவுநிலையை இனம்காணும் மதிப்பாய்வுகள், இது நிலம்சார்ந்த, வெப்பநிலை மற்றும் மக்கள்தொகையியல் தரவுகளைப் பயன்படுத்தி எந்த பகுதிகளுக்கு முதலீட்டிலும் வெப்ப அலை நடவடிக்கையிலும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை முடிவுசெய்ய திட்டமிடுவோருக்கு உதவுகிறது.
- பண்புசார் அறிக்கைகள், இது வெப்ப பாதிப்பு அல்லது நலிவுநிலை குறித்த நேரடி அனுபவத்தை வலியுறுத்துவதற்காக சமூக மக்களின் கருத்துக்கள் மற்றும் கண்ணோட்டங்களை உள்ளடக்குகிறது.
வளங்கள்
ஜோத்பூர் வெப்பச் செயல்திட்டம்
- இந்தியா
ஒரு நகரின் திட்டத்தில் வெப்ப நலிவுநிலை மதிப்பீடுகள் ஒன்றிணைக்கப் பட்டிருப்பதற்கான ஒரு உதாரணத்திற்கு 2023 ஆம் ஆண்டின் ஜோத்பூர் வெப்பச் செயல்திட்டத்தின் 14-22 பக்கங்களைப் பாருங்கள்.
மியாமி-டேட் மாகாணத்தின் மிகக்கடுமையான வெப்பச் செயல்திட்டம்
- அமெரிக்கா
ஒரு அமெரிக்க நகருக்கு எப்படி நலிவுநிலை மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதற்கான ஒரு உதாரணத்திற்கு, மியாமி-டேட் மாகாணத்தின் மிகக்கடுமையான வெப்பச் செயல்திட்டத்தின் 9ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
தற்போதுள்ள வெப்பம்-சார்ந்த திட்டங்கள், நெறிமுறைகள் மற்றும் அமைப்புகள்
உள்ளூர் மற்றும் பிராந்திய அரசுகள் பெரும்பாலான நேரங்களில் பல்வேறு திட்டங்களைக் கொண்டிருப்பார்கள், அவை நகர்புற வெப்பத்தை குறைக்கக்கூடியதாக அல்லது அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். உதாரணமாக, நகர்புற மரங்களின் பரப்பினை அதிகரிக்கும் திட்டங்கள், ஆபத்தைக் குறைக்கும் திட்டங்கள், அல்லது முழுமையான திட்டங்கள் ஆகியவை ஏற்கெனவே உருவாக்கப்பட்டு இருக்கலாம். தொழில் புரிவோருக்கு இந்த திட்டங்கள் குறித்த புரிதல் இருக்க வேண்டும் மேலும் ஒரு வெப்பச் செயல்திட்டத்தில் அவற்றை அங்கீகரித்து அவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க வேண்டும். முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் இந்த ஒருங்கிணைப்பு, முந்தைய திட்டமிடுதல் முயற்சிகளில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள சமூக மக்கள் உள்ளீடு மற்றும் முதலீட்டையும் அங்கீகரிக்கிறது.
ஒரு செயல்திட்டம் எந்த சுற்றுச்சூழலுக்குள் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் என்பதை விளக்குவதற்கு, வெப்பச் செயல்திட்டங்கள், தற்போதுள்ள வெப்பம்-சார்ந்த நெறிமுறைகள் மற்றும் அமைப்புகளையும் அங்கீகரிக்கலாம் (எ.கா. வெப்ப அலை துவக்க நிலைகள் அல்லது ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகள்).
- வெப்ப அலை துவக்க நிலைகள்: ஒரு வெப்ப அலைக்கான உலகளாவிய விளக்கம் எதுவும் இல்லை என்பதால், உள்ளூர் அல்லது தேசிய வெப்ப அலை துவக்க நிலைகள் குறிப்பாக ஆபத்துமிக்க வெப்பநிலைகளை விவரிக்கிறது.
- முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் அமைப்புகள்: ஆபத்தான நிலைகள் குறித்து பொதுமக்களுக்கும் பங்காளர்களுக்கும் அறிவிப்பு வழங்குவதற்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட ஆரம்பநிலை அல்லது பண்புசார்ந்த தாக்க மதிப்பீட்டு செயல்முறை ஆகியவற்றின் அடிப்படையில் வெப்ப எச்சரிக்கைகளை வழங்குதல்.
வளங்கள்
கராச்சி வெப்பச் செயல்திட்டம்
- பாக்கிஸ்தான்
ஒரு வெப்ப செயல்திட்டத்தில் பிராந்திய வெப்ப அலை துவக்க நிலைகள் குறித்த ஒரு விளக்கத்திற்கு, கராச்சி வெப்பச் செயல்திட்டம்: மிகக்கடுமையான வெப்பத்திற்கு திட்டமிடுதல் மற்றும் நடவடிக்கைக்கான ஒரு வழிகாட்டி, ஆவணத்தின் 21ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
மேற்கு சிட்னி வெப்ப உக்தி மற்றும் செயல்திட்டம்
- ஆஸ்திரேலியா
தினசரி அதிகபட்ச வெப்பநிலைகளை பிரித்துக் காட்டுகின்ற பல-ஆண்டுக்கான வெப்ப அலை நாட்களின் மதிப்பாய்வு குறித்த ஒரு உதாரணத்திற்கு, மேற்கு சிட்னியின் வெப்பத்தைக் குறைக்கின்ற உக்தி மற்றும் செயல்திட்டத்தின் 9ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
அகமதாபாத் வெப்பச் செயல்திட்டம்
- இந்தியா
ஒரு வெற்றிகரமான, செயல்படுகின்ற ஆரம்பக்கட்ட எச்சரிக்கை அமைப்புக்கான ஒரு உதாரணத்திற்கு, அகமதாபாத் வெப்பச் செயல்திட்டத்தின் 3ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
மிகக்கடுமையான வெப்பத்தை நிர்வகிப்பதற்கான தகவமைத்தல் உக்திகள்
நடவடிக்கைகளின் வகைகள்
- திட்டமிடுதல் மற்றும் கொள்கை: புதிய ஒழுங்குமுறைகள், குறியீடுகள் அல்லது செயல் திட்டங்கள்
- தகவல்தொடர்புகள் மற்றும் களப்பணி: பொதுமக்கள் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு அல்லது வெப்ப அலை மேலாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கான இயக்கங்கள்
- பசுமை மற்றும் இயற்கைக் கட்டமைப்பு: இயற்கை-அடிப்படையிலான பசுமை உருவாக்கம் மற்றும் தண்ணீர் தீர்வுகள்
- கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட வடிவம்: கட்டிடங்களுக்கான புதிய தரநிலைகள் அல்லது கட்டமைப்பு புதுப்பித்தல்களின் அறிமுகம்
வளங்கள்
பருவநிலை செயல்திட்டம் 2050: பியூனஸ் ஏர்ஸ் நகரம்
- அர்ஜண்டீனா
நகரங்கள் ஒரு விரிவான பருவநிலை செயல்திட்டத்திற்குள் எப்படி வெப்ப தகவமைத்தல் உக்திகளை ஒன்றிணைக்க முடியும் என்பதற்கான ஒரு உதாரணத்திற்கு, பியூனஸ் ஏர்ஸ் பருவநிலை செயல்திட்டத்தின் 90-92 பக்கத்தைப் பாருங்கள்.
மிகக்கடுமையான வெப்ப மேலாண்மை அட்டவணை
சில வெப்ப மீள்திறன் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதாக இருக்கும்; மற்றவை வெப்ப நிகழ்வு(கள்) மற்றும்/அல்லது வெப்ப காலங்களில் பயன்படுத்தப்பட வேண்டும்.
உங்களது பகுதிக்கான மிகக்கடுமையான வெப்ப நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கான கூடுதல் வளங்களுக்கு, தயவுசெய்து பின்வரும் வெப்ப செயல்திட்ட தளப் பகுதிகளை ஆராயவும்: ஒரு கல்வி மற்றும் ஈடுபாட்டை ஏற்படுத்தும் உக்தியை உருவாக்குதல், வெப்பத் தகவமைப்புத் தீர்வுகளை ஆராய்தல் அல்லது வெப்ப செயல்பாட்டு தளக் கொள்கைக் கருவி.
ஒரு செயல்திட்டத்தை உருவாக்குதல்
முதன்மை பொறுப்பு நிறுவனம் அல்லது அதிகாரி மற்றும் அவர்களது முக்கிய கடமைகள்
ஒரு வெப்பச் செயல்திட்டத்தை உருவாக்கும் போது அந்த திட்டத்தின் மேம்பாடு, இயக்கம், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக ஒரு நியமிக்கப்பட்ட அதிகாரி அல்லது முன்னணி அரசு அமைப்பு போன்ற ஒரு முதன்மைப் பொறுப்பு அமைப்பு அடையாளம் காணப்பட வேண்டும்.
நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனப் பங்காளர்களின் பட்டியல்
விரிவான வெப்பச் செயல்திட்டத்தை திட்டமிடுதல் என்பது மிகக்கடுமையான வெப்பத்திற்கு ஒரு பயனுள்ள மற்றும் நீடித்த நடவடிக்கையாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அரசு, தொண்டு நிறுவனம், சமூகக் குழுக்கள் மற்றும் சமூக உறுப்பினர்கள் ஆகியோருடன் இணைந்து உருவாக்கப்படும் ஒரு முழுமையான முயற்சியாக இருக்க வேண்டும்.
உதாரணமாக, அமெரிக்காவில், மியாமி-டேட் மாகாணத்தின் மிகக்கடுமையான வெப்பச் செயல்திட்டத்தை உருவாக்கும் சமயத்தில், மிகக்கடுமையான வெப்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ளவும் செயல்பாடுகளைப் பரிந்துரைக்கவும் 298 குடியிருப்போர், பங்குதாரர்கள், மற்றும் வல்லுனர்களை ஈடுபடுத்துவதற்காக மியாமி-டேட் மாகாணம் பல பணிமனைகளை நடத்தியது. திட்ட மேம்பாட்டு செயல்முறை என்பது ஒரு பருவநிலை மற்றும் வெப்ப சுகாதார பணிக்குழுவின் வழிகாட்டுதலைப் பெற்றதாகும், அதில் சமூக உறுப்பினர்கள், சமூக மக்கள்-அடிப்படையிலான நிறுவனங்கள், மற்றும் இதர மாகான பங்குதாரர்களை உள்ளடக்கியதாகும்.
இந்தியாவில், தெலுங்கானா வெப்ப அலை செயல் திட்டத்தில் மற்றவர்களுடன் கூடவே, பேரிடர் மேலாண்மை ஆணையம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறை, பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய வானிலைப் பிரிவு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, போக்குவரத்துத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை ஆகியவற்றைப் பங்காளர்களாக கொண்டிருந்தது.
பொறுப்பான செயல்பாட்டாளர்களுக்கான நடவடிக்கைகளை இனம் காணுதல்
பொறுப்புள்ள செயல்பாட்டாளர்கள் அனைவருக்குமே தங்களது குறுகிய- மற்றும் நீண்ட-கால நடவடிக்கைகளுக்கான பொறுப்புகள் என்ன என்பது தெரிந்திருப்பதை உறுதி செய்ய, ஒவ்வொரு ஏற்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக உள்ள தரப்பினரை அடையாளம் காட்டுகின்ற ஒரு அட்டவணை வெப்ப செயல்திட்டங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வளம்
பீகார் வெப்பச் செயல்திட்டம்
- இந்தியா
வெப்ப நிகழ்வுகளுக்கு முன்பும் அது ஏற்படும் சமயத்திலும் முக்கிய செயல்பாடுகளை பொறுப்பான துறைகளுக்கு அடையாளப்படுத்துகின்ற ஒரு அட்டவணைக்கான ஒரு உதாரணத்திற்கு, பீகார் வெப்பச் செயல்திட்டத்தின் 31-39 பக்கங்களைப் பாருங்கள்.
ராஜஸ்தான் வெப்பச் செயல்திட்டம்
- இந்தியா
ஒரு கிராமப் பகுதிக்கான ஒரு திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட பங்குதாரர் செயல்பாடுகளின் சரிபார்க்கும் பட்டியல்களுக்கான உதாரணத்தைப் பார்ப்பதற்கு, ராஜஸ்தானின் வெப்பச் செயல்திட்டத்தின் 34-37 பக்கங்களைப் பாருங்கள்.
மிகக்கடுமையான வெப்ப நடவடிக்கைகளுக்கான செயல்படுத்தும் காலக்கட்டம்
நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான ஒரு தெளிவான எதிர்காலப் பாதையை உருவாக்குவதற்கு, வெப்ப காலம் மற்றும் வெப்ப சம்பவங்கள் ஆகிய இரண்டின்போதும் குறுகிய- மற்றும் நீண்ட-கால நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கான ஒரு காலக்கட்டத்தை வெப்பச் செயல்திட்டம் கொண்டிருக்க வேண்டும்.
வளம்
மேற்கு சிட்னி வெப்பச் செயல்திட்டம்
- ஆஸ்திரேலியா
பல-ஆண்டுகளுக்கு செயல்படுத்தக்கூடிய வகையில் கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள வெப்ப நடவடிக்கைகளுக்கான விரிவான காலக்கட்டத்திற்கான ஒரு உதாரணத்திற்கு, மேற்கு சிட்னியின் வெப்பத்தைக் குறைக்கின்ற உக்தி மற்றும் செயல்திட்டத்தின் 20 ஆம் பக்கத்தைப் பாருங்கள்.
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவைக் கண்டறிதல்
நிர்வாகம்
வெப்பச் செயல்திட்டங்களுக்கான மதிப்பாய்வின் ஒழுங்கு
வெப்ப செயல்திட்டங்கள் மிகக்கடுமையான வெப்பத் தகவல் மற்றும் தற்போதைய நலிவுநிலைகள் என இரண்டையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்; அது வாழும் ஆவணங்களாக பார்க்கப்பட வேண்டும், மேலும் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட வேண்டும். வெப்ப திட்டமிடுதல் செயல்முறை அந்த திட்டத்தை பங்குதாரர்களுடன் மதிப்பாய்வு செய்கின்ற ஒரு ஒழுங்கினை (ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு; ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை) ஏற்றுக்கொள்வதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
வெப்பம்- சார்ந்த சுகாதாரத் தாக்கங்களை தெரிவித்தல்
வெப்பம்- சார்ந்த மரணங்கள் மற்றும் நோய்களின் காரணங்கள் மற்றும் தீவிரத்தன்மை குறித்த புரிதலில் உள்ள இடைவெளியைக் கையாள்வதற்கு, வெப்பச் செயல்திட்டங்களில் அறிக்கையளிக்கும் படிவங்கள் சேர்க்கப்படலாம். இது வெப்பம்- சார்ந்த மரணங்கள் மற்றும் நோய்களுக்கு பங்களிக்கின்ற காரணிகள் தொடர்பான தரவு சேரிப்பதில் ஒரு சீரான தன்மையையும் முழுமையையும் உறுதி செய்யும்.
வளங்கள்
இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய வெப்ப அலை மேலாண்மை வழிகாட்டி
- இந்தியா
வெப்பம்- சார்ந்த நோய்கள் அல்லது மரண சம்பவத்திற்கு பங்களிக்கும் மக்கள்தொகையியல் காரணிகளை சேகரிக்கும் அறிக்கை வடிவிற்கான ஒரு உதாரணத்திற்கு, மாநில-அளவிலான மிகக்கடுமையான வெப்ப மேலாண்மைக்கான இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் 33-37 பக்கங்களைப் பாருங்கள்.
வெப்பச் செயல்திட்டங்களை கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்
வெப்ப மீள்திறன் உக்திகள் யாவும் அவற்றின் திட்டமிட்ட இலக்குகளை அடைவதை உறுதி செய்வதற்கு, முக்கிய செயல்திறன் குறிக்காட்டிகள், கண்காணிப்பதற்கான காலக்கட்டம் (மாதாந்தம், காலாண்டு, ஆண்டு) மற்றும் மதிப்பீட்டை நடத்துகின்ற முதன்மைப் பொறுப்பு தரப்பு ஆகியவை உள்ளிட்ட ஒரு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் செயல்முறையை வெப்பச் செயல்திட்டங்கள் உருவாக்க வேண்டும். மேலும் தகவலுக்கு, வெப்பச் செயல்பாட்டு பாடத்திட்டத்தை கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் பகுதியைப் பாருங்கள்.
வளங்கள்
அகமதாபாதின் வெப்ப செயல்திட்டத்தை மதிப்பிடுதல்
- இந்தியா
ஒரு வெப்பச் செயல்திட்டத்தின் பலன்களை எப்படி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தார்கள் என்பதற்கான ஒரு உதாரணத்திற்கு, காந்திநகரில் உள்ள இந்திய பொது சுகாதார மையம், இயற்கை வளங்கள் பாதுகாப்புக் குழு, எமோரி பல்கலைக்கழகத்தின் ரோலின்ஸ் பொது சுகாதாரப் பள்ளி, மற்றும் சினாய் மலையில் உள்ள ஐசான் மருத்துவப் பள்ளி ஆகியோரின் இந்த மதிப்பீட்டைப் பாருங்கள்.
பெருநகர ஃபீனிக்ஸின் அக்கம்பக்க பகுதிகளுக்கான வெப்ப நடவடிக்கை திட்டமிடுதல் வழிகாட்டி
- அமெரிக்கா
ஒரு வெப்பச் செயல்திட்டத்திற்கான விரிவான, சமூக மக்கள்-மூலமாக நடத்தப்பட்ட வெற்றி அளவீடுகளுக்கான ஒரு உதாரணத்திற்கு, இயற்கைப் பாதுகாப்பு மற்றும் இதர பங்காளர்கள் மூலமாக உருவாக்கப்பட்ட பெருநகர ஃபீனிக்ஸின் அக்கம்பக்க பகுதிகளுக்கான வெப்ப நடவடிக்கை திட்டமிடுதல் வழிகாட்டியின் 107-117 பக்கங்களைப் பாருங்கள்.
Database of Heat Action Plans and Case Studies
- Global
உலகெங்கிலும் இருந்து மேலும் வெப்பச் செயல்திட்டத்தை மதிப்பாய்வு செய்வதற்கு, தயவுசெய்து உலகளாவிய வெப்ப சுகாதாரத் தகவல் கூட்டமைப்பின் வெப்பச் செயல்திட்டங்கள் மற்றும் உதாரண ஆய்வுகளின் தரவுதளத்தைப் பாருங்கள்
நீங்கள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை நடத்துவதை பூர்த்தி செய்துள்ளீர்கள்
இந்த பாடத்திட்டத்தில் இருந்து அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்களை மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள்.