பாடத்திட்ட நோக்கம்
வெப்ப அபாய விழிப்புணர்வை மதிப்பிடுதல் பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! உலகெங்கும், மற்ற பருவநிலை ஆபத்துக்களுடன் ஒப்பிடும்போது மிகக்கடுமையான வெப்பத்திற்கு ஏற்படக்கூடிய ஆரோக்கிய அபாயங்கள் குறித்த மக்களின் புரிதல் பொதுவாக குறைவாகவே உள்ளது. புயல் காற்றுகள் மற்றும் வெள்ளங்கள் ஏற்படுத்துகின்ற அதிபயங்கரமான காட்சிகளை ஒப்பிடும்போது வெப்பத்தில் அது குறைவாகவே காணப்படுவதால், அதன் தாக்கங்கள் தெரியாமலேயே இருக்கலாம். ஒரு விழிப்புணர்வு மதிப்பீடு வெப்பம் குறித்த கண்ணோட்டத்தையும் தாக்கங்களையும் குறித்த தரமான புரிதலை வளர்க்கும். கூடுதலாக, சமூக உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்களின் அனுபவத்தில் பொதிந்துள்ள வெப்பத்தின் அபாயங்களைச் சுற்றிய புரிதலை வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளையும் கண்டறிய உதவும். ஒரு வெப்ப விழிப்புணர்வு மதிப்பீட்டை நடத்துவது, உதாரணமாக உங்களது பங்குதாரர்கள் வெப்ப அலைகளுக்கு முன்பாக தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் அது ஏற்படும்போது அதை எதிர்கொள்ளவும் என்ன செய்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் மேலும் அதைத் தொடர்ந்து உங்களது திட்டமிடுதல் மற்றும் தயார்நிலையை பள்ளி தெரிவிக்கும்.
மக்கள் அதை ஒரு ஆபத்தாக அங்கீகரிக்கும் வகையில் வெப்பம் ஒரு பிரச்சனையாக உள்ளதா? மிகக்கடுமையான வெப்பத்தைக் கையாள்வதற்கு வளங்களை எப்படி அணுகுவது மற்றும் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியுமா? மிகக்கடுமையான வெப்பத்தின் ஆபத்தைப் பற்றி தெரிந்த மக்கள் தங்களையும் தங்களது அன்பானவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் மேலும் மீள்திறன் கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை மதித்து நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. உங்களது திட்டங்களில் சமூக மக்களால்-உந்தப்பட்ட இலக்குகள் மற்றும் விழுமியங்களை நிர்ணயிப்பதற்கு இந்த பாடத்திட்டத்தின் வெளிப்பாடுகள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீடு மற்றும் நலிவுநிலை மதிப்பீடு ஆகியவற்றுடன் சேர்த்து பயன்படுத்தப்படலாம்.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
வெப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய மற்றும் உங்களது வெப்பம்- சார்ந்த திட்டங்கள் மற்றும் கொள்கைகளை எவர்களுடன் வடிவமைத்தீர்களோ (அல்லது வடிவமைப்பீர்களோ) அந்த மக்கள்தொகையை அடையாளம் காணுதல்.
-
வெப்ப அபாயத்திற்கு-உள்ளான மக்கள்தொகைக்கு சிறந்த முறையில் சேவை செய்வதற்காக வெப்பம்-சார்ந்த அபாயங்களை புரிந்துகொள்ள வேண்டிய குழுக்களை அடையாளம் காணுதல் (அரசு, சுகாதாரப் பராமரிப்பு, தொண்டு நிறுவனம் போன்றவற்றில்).
-
வெப்பம்-சார்ந்த தாக்கங்கள், இந்த பிரச்சனை சம்மந்தமாக தங்களது தனிப்பட்ட அவசரநிலை, மற்றும் இதர முதன்மையான தரவு (எ.கா. ஒரு வெப்ப அலைக்கு முன்பாக எடுக்கப்பட வேண்டிய தயார்நிலை நடவடிக்கைகள் குறித்த அறிவு, நீங்களும் உங்களது பங்காளர்களும் ஆதரவளிக்கக் கூடிய அல்லது விரிவுபடுத்தக்கூடிய தற்போதைய தகவமைக்கக்கூடிய உக்திகள்) ஆகியவை குறித்த அவர்களது கருத்துக்களை மதிப்பிடுவதற்காக குடியிருப்போர் மற்றும் இதர தொடர்புடைய குழுக்களின் ஆய்வுகள் அல்லது பல்வேறு இலக்குக் குழுக்களை உருவாக்குதல்.
வெளிப்பாடுகள்
-
பொருத்தமான பங்குதாரர்களின் ஒரு பட்டியல் (வெப்பத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அத்தகைய மக்களுக்கு சேவைகள் வழங்கும் மக்கள் ஆகிய இரண்டும்)
-
கருத்தாய்வுக் கருவி.
-
ஆய்வு மற்றும் இலக்குக் குழுத் தரவு.
பலன்கள்
-
ஒரு வெப்ப அபாய விழிப்புணர்வு மதிப்பீட்டை எப்படி நடத்துவது என்பதைப் புரிந்துகொள்ளுதல்.
-
சமூக உறுப்பினர்கள் மற்றும் இதர முக்கிய பங்குதாரர்கள் தங்களது சமூகத்தின் மீது மிகக்கடுமையான வெப்பம் ஏற்படுத்தும் தாக்கத்தை பார்க்கிறார்கள் என்பதை முடிவுசெய்தல் (பலங்கள், பலகீனங்கள், வாய்ப்புகள் மற்றும் ஆபத்துக்கள்).
-
இந்த கருத்துக்கள் தற்போதுள்ள தரவுடன் ஒத்துப்போகிறதா அல்லது முரண்படுகிறதா என்பதை மதிப்பிடுதல்.
-
வெப்பத்தின் அபாயங்கள் குறித்த கருத்துக்கள் தற்போதுள்ள வெப்ப அபாயக் குறைப்பு மற்றும் தகவமைப்புக் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் உள்ள உக்திசார்ந்த அணுகுமுறையுடன் ஒத்துப்போகிறாதா என்பதை மதிப்பிடுதல்.
-
வெப்ப செயல் திட்டமிடுதலின் திசையை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்து பங்குதாரர்களிடையே எங்கே ஒருமித்த கருத்து மற்றும் வேறுபட்ட கருத்து உள்ளது என்பதைக் கண்டறிதல்.
கண்ணோட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக முழுமையான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
ஒரு வெப்ப அபாய விழிப்புணர்வு மதிப்பீட்டு செயல்முறையை எப்படி துவங்குவது
முதலில், ஆய்வை நடத்துவதற்கான கால அளவு மற்றும் இருக்கக்கூடிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளங்களை முடிவு செய்தல். அதன்பின் இது அனைத்து குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆகியோரை உள்ளடக்கிய விரிவான மதிப்பீடாக இருக்குமா, அல்லது இந்த மதிப்பீடு குறிப்பிட்ட பங்குதாரர்களை இலக்காகக் கொண்டு நடத்தப்படுமா (எ.கா. நகர அரசு நிறுவனங்கள்) என்பதை முடிவு செய்தல். இது மதிப்பீட்டின் நோக்கத்தையும் இதைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளங்களையும் முடிவு செய்யும். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் கூடுதலாக ஆய்வு வடிவமைப்பு மற்றும் செயல்முறை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக வெப்பத்தின் தாக்கங்கள் குறித்த விஷயங்களில் நிபுணர்களாக உள்ள சமூக மக்கள் தலைவர்கள் அல்லது குழுக்களை ஈடுபடுத்துவது அவசியமாகும்.
மதிப்பீட்டின் குறிக்கோளை நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதில் உள்ளடங்க வேண்டிய முக்கியமான கேள்விகளை அடையாளம் காண வேண்டும். பெரும்பாலான ஆய்வுகள் அல்லது இலக்குக் குழுக்களில் உள்ளது போல, வயது, வருமானம் மற்றும் கல்விநிலை போன்ற மக்கள்தொகையியல் தரவு முக்கியமாகும். வெப்பம் குறித்த கேள்விகளில் உள்ளடங்குவது:
- வெப்ப பாதிப்பு, தீவிரம் மற்றும் நலிவுநிலை குறித்த கருத்து.
- வெப்ப அலைகள் ஏற்படுவதற்கு முன்பும் ஏற்படும்போதும் எடுக்கப்பட்ட தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்.
- வெப்பம் குறித்த தகவல் வளங்கள் பற்றிய விழிப்புணர்வு (எச்சரிக்கைகள், நம்பகமான அதிகாரிகள்).
- வெப்ப அலைகளின் போது பொருளாதார தாக்கங்கள் (வாழ்வாதாரங்கள் அல்லது தொழிலைத் தொடர்வது சம்மந்தமானவை).
- குளிர்வித்தல் அல்லது ஓய்வெடுப்பதற்கான இடங்களுக்கான அணுகல் (ஏர் கண்டிஷனர் வசதியுள்ள சமூக மையங்கள், பசுமையான பகுதிகள், தண்ணீர் அமைப்புகள்)
- பொருத்தமான சேவைகள் மற்றும் ஆதரவு ஆதாரங்களுக்கான அணுகல் மற்றும் அதன்மீது உள்ள நம்பிக்கை.
இன்னும் கூடுதலான தரவு இருப்பது பயனுள்ளதாக இருக்கும், ஆனால் ஆய்வு செய்யப்படும் மக்களுக்கு இத்தகைய மதிப்பீடுகளைப் பூர்த்தி செய்வதற்கான நேரமும் கவனமும் குறைவாகவே உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
Resources
நேப்பாளத்தில் வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வெப்ப அலையின் பாதிப்பு தொடர்பான அறிவு, மனப்பான்மைகள், நடைமுறை மற்றும் அபாயத்தைக் குறித்த கருத்துக்கள்
நேப்பாளத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்களை (விவசாயிகள், ரிக்ஷா ஓட்டுனர்கள்/இழுப்பவர்கள், சாலையோர வியாபாரிகள், மற்றும் பலர்) மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வுக்கான ஒரு உதாரணத்திற்கு ஜோஷி மற்றும் பலர் ஆய்வின் 28-32 பக்கங்களைப் பாருங்கள். (2022)
மிகக்கடுமையான வெப்ப ஆய்வு
- அமெரிக்கா
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெப்பத்திற்கு சமூக மக்களின் பதில் நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும் ஒரு ஆய்வுக்கான ஒரு உதாரணத்திற்கு சுற்றுச்சூழல் நீதி மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்காக WE ACT மூலமாக நடத்தப்பட்ட மிகக்கடுமையான வெப்ப ஆய்வைப் பாருங்கள்.
சமூக மக்களின் அறிவு, மனப்பான்மைகள், மற்றும் நடைமுறைகள் ஆய்வு
- வியட்நாம்
ஒரு நடுத்தர-வருமானமுள்ள நாட்டில் வெப்ப அபாய விழிப்புணர்வு மதிப்பீட்டை ஒரு மனிதநேயம் மிக்க நிறுவனம் அணுகியது என்பதைப் பற்றி புரிந்துகொள்ள, ஜெர்மன் செஞ்சிலுவை மூலமாக வியட்நாமின் ஹனோயில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் இந்த கண்ணோட்டத்தைப் பாருங்கள்.
புழுக்கமான நகரங்கள் 2022 கோடைக்கால ஆய்வு
- ஆஸ்திரேலியா
ஒரு அதிக-வருமானமுள்ள நாட்டில் உள்ள ஒரு சமூக மக்கள்-அடிப்படையிலான நிறுவனம் மூலமாக நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் ஆய்வுக் கேள்விகள் மற்றும் முடிவுகளுக்கான ஒரு உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவில் புழுங்கும் நகரங்கள் அமைப்பு மூலமாக நடத்தப்பட்ட ஒரு 2022 ஆய்வைப் பாருங்கள்.
மதிப்பீட்டு வெளிப்பாடுகளைப் பயன்படுத்துதல்
மதிப்பீட்டின் முடிவுகள் உங்களது திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்தும் செயல்முறைகளை விளக்க வேண்டும், உங்களது செயல்பாடுகளுக்கு ஆதரவை வளர்க்க வேண்டும், மேலும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஒன்றிணைந்து உருவாக்குவதற்கு உதவ வேண்டும். இந்த தகவல் உங்களது சமூகத்திற்குள்ளேயே புதிய முக்கியத்துவங்கள் மற்றும் கவலைகளை வெளிப்படுத்தலாம் அல்லது கையாளப்பட வேண்டிய முதல்நிலைப் பிரச்சனைகளை அடையாளம் காணலாம். பங்குதாரர்களுடன் நடத்தப்பட்டால், இந்த மதிப்பீடுகளை வடிவமைக்கும் மற்றும் செயல்படுத்தும் செயல்முறை வெப்பத்தின் தலைப்பில் சமூகமக்கள் குழுக்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளை ஈடுபடுத்தி கூடுதல் செயல்களுக்காக அரசியல் அர்ப்பணிப்பை வளர்க்க முடியும்.
ஒரு வெப்ப அபாய விழிப்புணர்வு ஆய்வு அல்லது இலக்குக் குழுவின் வெளிப்பாடுகள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீடு (ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை மேற்கொள்ளுதல் பகுதியைப் பாருங்கள்) அல்லது நலிவுநிலைகள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காணுதலுக்கு (வெப்பம்-சார்ந்த நலிவுநிலைகள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காணுதல் பகுதியைப் பார்க்கவும்) கூடுதல் பலம் சேர்க்க முடியும்.
வளங்கள்
வெப்பத்தை வெற்றிகொள்ளுதல்
- உலகெங்கும்
ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் வியட்நாமின் ஹனோய் இந்த மதிப்பீட்டு வெளிப்பாடுகளை எப்படி பயன்படுத்தியது என்பதற்கான உதாரணங்களுக்கு, குளிர்வித்தல் கூட்டணி, ஐக்கிய நாடுகள் கூற்றுச்சூழல் திட்டம், ஆர்.எம்.ஐ, பருவநிலை மற்றும் மின்சக்திக்கான மேயர்களின் உலகளாவிய உடன்படிக்கை, மிஷன் இனோவேஷன், மற்றும் சுத்தமான குளிர்வித்தல் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெப்பத்தை வெற்றிகொள்ளுதல்: நகரங்களுக்கான ஒரு நிலையான குளிர்வித்தல் கைப்புத்தகத்தின் 64-67 பக்கங்களைப் பார்க்கவும்.
மிகக்கடுமையான வெப்பம் குறித்த பெயிட்பிரிட்ஜ் குடியிருப்போரின் கருத்துகள்
- ஜிம்பாப்வே
ஜிம்பாப்வேயின் பெயிட்பிரிட்ஜில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இருந்து வெளிவந்த பரிந்துரைகள் மற்றும் சமூகமக்கள் தேவைகளின் ஒரு உதாரணத்திற்கு, சடாம்புகா, மோயோ, மற்றும் பாடாசாரா (2022) மூலமாக உருவாக்கப்பட்ட மிகக்கடுமையான வெப்பம் குறித்த பெயிட்பிரிட்ஜ் குடியிருப்போரின் கருத்துகள் ஆவணத்தின் பக்கங்கள் 35-38 மற்றும் 48-50 ஆகியவற்றைப் பார்க்கவும்.
பொதுவான சவால்கள்
ஒரு வெப்ப அபாய விழிப்புணர்வு மதிப்பீட்டை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதில் உள்ள பொதுவான சவால்களில் உள்ளடங்குபவை:
- தரவு சேகரிப்பு செயல்முறை மற்றும் தரவைப் பயன்படுத்துவதில் வாய்ப்புள்ள ஆய்வுப் பங்கேற்பாளர்களிடம் காணப்படும் நம்பிக்கையின்மை.
- மிகக்கடுமையான வெப்பம் ஒன்றும் பெரிய விஷயமல்ல அல்லது அது வழக்கமானது என்கின்ற கருத்தின் காரணமாக ஆய்வு செயல்முறையில் குறைவான ஈடுபாடு.
- திட்டத்திற்கு அர்ப்பணிக்க நேரம் மற்றும் வளங்கள் இல்லாத நிலை.
- பங்குதாரர்களின் திறன் குறைவாக இருப்பதன் காரணமாக செயல்முறை முழுவதும் பங்குதாரர்களை ஈடுபடுத்துவதில் சிரமம்.
- ஒரு ஆராய்ச்சி நெறிமுறை மதிப்பாய்வுக் குழுவிடமிருந்து நிர்வாக ஒப்புதல் அல்லது துவங்குவதற்கான அனுமதியில் தாமதங்கள்.
ஆய்வு பங்கேற்பாளர்களாகும் வாய்ப்புடைய மக்களுக்கு ஏற்கெனவே விரிவான தரவுகளை சேகரிக்கும் செயல்முறைகள் அல்லது அந்த தரவு தங்களுக்கு அல்லது தங்களது சமூகமக்களுக்கு பயன் தராத நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுதல் போன்ற எதிர்மறை அனுபவங்கள் இருந்திருக்கக்கூடும்.இந்த பங்கேற்பாளர்கள் மூலமாக ஆய்வுப் பங்கேற்பினை அதிகரிப்பதற்கான ஒரு வழி நம்பகமான சமூக நிறுவனங்கள் மற்றும் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகும்.
ஒருவேளை வெப்பத்தை ஒரு பிரச்சனையே- இல்லை என்று ஆய்வுப் பங்கேற்பாளர்கள் கருதுவதன் காரணமாக பங்கேற்கத் தயங்கினால், இந்த பிரச்சனை தொடர்பான அவசரத் தேவையை மற்றும் பக்கத்தில் உள்ள ஒரு பகுதி அல்லது பிராந்தியம் வெப்பத்தால் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை நீங்கள் விளக்குகின்ற ஒரு பகுதியை இதில் சேர்ப்பது பங்கேற்பை அதிகரிக்க உதவக்கூடும். எனினும், ஆய்வுப் பங்கேற்பாளர்களிடையே உங்களது அணுகுமுறையை தரநிலைப்படுத்துவது மற்றும் நீங்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கும் தகவல் அவர்களது பதில்களை எப்படி ஒருதலைபட்டசமானதாக மாற்றக்கூடும் என்பதையும் மனதில் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஒரு மதிப்பீட்டை ஆதரிப்பதற்கு தேவையான செலவு மற்றும் நேரத்தைக் கையாள்வதற்கு, குறிப்பிட்ட விஷயத்தில் நிபுணத்துவம், நிதி வழங்கும் வாய்ப்புகள் அல்லது செலவுகளைப் பகிர்தல், மற்றும் தன்னார்வளர்களை வழங்குதல் போன்றவற்றுக்காக ஒரு உள்ளூர் பல்கலைக்கழகம் அல்லது செஞ்சிலுவை போன்ற தொண்டு நிறுவனங்களுடன் கூட்டாக இணைந்து செயல்படுவது உதவியாக இருக்கும். முடிந்தால், ஒரு ஆய்வை உருவாக்கும் சமயத்தில் சமூகத்திற்குள் நம்பகமான தலைவர்கள் அல்லது தெரிந்த அமைப்புகளை ஈடுபடுத்துவது அது ஏற்கப்படுவது மற்றும் பயன்படுத்தப்படுவதை அதிகரிக்கும்.
வளங்கள்
உகாண்டாவின் கம்பாலா நகரில் உள்ள குறைந்த-வருமானமுள்ள சமூகங்களுக்கு இடையே தகவமைப்பதற்கான வெப்ப அபாயம் குறித்த புரிதல் மற்றும் தகவல்தொடர்பு உக்திகள்
- உகாண்டா
உகாண்டாவின் கம்பாலா நகரில் ஆய்வு தேவையற்றது என்கின்ற அந்த குடியிருப்போரின் கருத்தினை ஆராய்ச்சியாளர்கள் எப்படி கையாண்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள செவிரி மற்றும் பலர் மூலமாக வழங்கப்பட்ட உகாண்டாவின் கம்பாலா நகரில் உள்ள குறைந்த-வருமானமுள்ள சமூகங்களுக்கு இடையே தகவமைப்பதற்கான வெப்ப அபாயம் குறித்த புரிதல் மற்றும் தகவல்தொடர்பு உக்திகளின் பக்கம் 42ஐ பார்க்கவும்.(2022)
வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை நடத்துதல் என்பதைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.
இந்த பாடத்திட்டத்தில் இருந்து அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்களை மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள்.