One Billion People More Resilient
hospital hallway
கொள்கைத் தீர்வு

குளிர்ச்சியான மருத்துவமனைத் தயார்நிலை

கட்டாயத்தேவை

சுருக்கம்

ஒரு வெப்ப அலை சமயத்தில், திடீரென்று நோயாளிகளின் வருகை அதிகரிப்பதன் காரணமாக மருத்துவமனைகள் அவர்களைச் சமாளிக்க முடியாத நிலையை அடையக்கூடும். இத்தகைய வெப்ப அலைகள் ஏற்படும் சமயத்தில் மின் விநியோகக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் அவசியமான சாதனத்திற்குத் தேவையான மின் விநியோகத்தில் தடைகளைச் சந்திக்கக்கூடும். மருத்துவமனைகள் தாங்கள் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதை உறுதி செய்வதற்கு அந்த சமயத்தில் நோயாளிகளின் அதிகமான வருகை மற்றும் மின் தடை ஆகியவற்றுக்குத் தயாராக இருக்க வேண்டும்.

செயல்படுத்துதல்

கடுமையான வெப்ப அலைகளை எதிர்கொள்ளக்கூடிய எதிர்பாரா நிகழ்வுக்கான திட்டங்களை மருத்துவமனைகள் மற்றும் சுகாதாரத் துறைகள் தயார் செய்ய வேண்டியது அவசியம். எதிர்பாரா நிகழ்வுக்கான திட்டங்களில் வெப்ப அலைகள் ஏற்படும் சமயங்களில் ஜெனரேட்டர்களை நிறுவுதல், திடீரென்று அதிகமாக நோயாளிகள் வருகையை எப்படி சமாளிப்பது என்று பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல்; மற்றும் இதர அவசரக்கால தயார்நிலை ஆதாரங்களையும் உள்ளடக்கும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

கடுமையான வெப்ப நிகழ்வுகளுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்வது மற்ற சுற்றுச்சூழல் அபாயங்களுக்கும் தயாராவதற்கு மருத்துவமனைகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    அவசரக்கால மேலாண்மை, பொது சுகாதாரம், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மை
  • அளவீடுகள்:

    வெப்பம்-தொடர்பான மரணங்கள் குறைதல்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்