One Billion People More Resilient
permeable pavement
கொள்கைத் தீர்வு

ஊடுருவத்தக்க நடைபாதைகள்

கட்டாயத்தேவை

சுருக்கம்

மழைநீர் நீராவியாகி சுற்றிலும் உள்ள காற்றின் வெப்பநிலையைக் குறைப்பதால் ஊடுருவத்தக்க நடைபாதைகள் மேற்பரப்புகளை குளிர்ச்சியாக வைத்திருக்கும். பயனர்களின் மனதைக் கவருவதாக இருப்பதற்கு, நடைபாதைகளை தாவரங்களைக் கொண்டு உருவாக்கலாம். அதற்கு பயன்படுத்தக்கூடிய பொருட்களில் உள்ளடங்குபவை: நுண்துளைகளைக் கொண்ட நீலக்கீல், நுண்துளைகளைக் கொண்ட கான்கிரீட், மற்றும் ஊடுருவத்தக்க நடைபாதைக் கற்கள்.

செயல்படுத்துதல்

குறிப்பிட்ட திட்ட வகைகளில் ஊடுருவத்தக்க நடைபாதைகள் அமைப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் மண்டல வகைப்படுத்துதல் மற்றும் கட்டிடக் குறியீட்டு அவசரச் சட்டங்களை தகவமைத்தல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

குறைவான போக்குவரத்து நெரிசல் உள்ள மற்றும் மாசடைந்த நீர் வருவதற்கு முற்றிலும் வாய்ப்பற்ற அல்லது குறைந்த வாய்ப்புள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பகுதியில்தான் ஊடுருவத்தக்க நடைபாதைகள் சிறந்த பலனைத் தரும். குளிர்ச்சியான காலநிலைகளைக் கொண்ட இடங்களில் நுண்துளைகளைக் கெண்ட நடைபாதைகளில் விரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு ஊடுருவத்தக்க நடைபாதைகளை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். களிமண் அல்லது நுண்துகள் மண்களைக் கொண்ட பகுதிகளில் போதுமான நீர் வடிகால் இருக்காது என்பதால், பாரம்பரிய பொருட்களைக் காட்டிலும் கூடுதலாக அடிக்கடி பராமரிக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவற்றுடனேஅல்லது ஊடுருவத்தக்க மேற்பரப்புகளுக்கு இடையிடையே செடிகள் வளர்க்கப்படலாம்; ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகள் உப்பு மற்றும் தண்ணீருக்கு எதிர்ப்புத்திறன் கொண்டதாக இருக்க வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.
    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    பசுமை/இயற்கைக் கட்டமைப்பு
  • துறைகள்:

    பூங்காக்கள், போக்குவரத்து

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    அமைக்கப்பட்ட ஊடுருவத்தக்க நடைபாதைகளின் மொத்த பரப்பளவு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    தளம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பொது இடத்தை மேம்படுத்துதல்