
ஆரோக்கியப் பரிசோதனைத் திட்டங்கள்
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்

சுருக்கம்
சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் இதர நலிவுநிலையில் உள்ள மக்களும் வெப்ப அலைகள் ஏற்படும் சமயங்களில் சுகாதார அவசரநிலைகளை எதிர்கொள்ளும் அபாயம் அதிகம் உள்ளது. இந்த மக்களின் நிலையை கவனிப்பதற்கான திட்டங்கள் மூலமாக இத்தகைய தனிநபர்களை கண்காணிப்பதற்கு என்று மக்களை பணியமர்த்துவதன் மூலமாக வெப்பம்- சார்ந்த நோய்களையும் அவசரநிலைகளையும் குறைக்க முடியும்.
செயல்படுத்துதல்
மூன்று நிலைகளைக் கொண்ட ஒரு ஆரோக்கிய பரிசோதனைத் திட்டத்தை உருவாக்குதல்: 1) மிகவும் கடுமையான வெப்பம் நிலவும் சமயங்களில் தங்களை பரிசோதனை செய்வதற்காக பதிவு செய்துகொள்ளும் தனிநபர்களை கொண்ட ஒரு தன்னார்வப் பதிவுவேட்டினை உருவாக்குதல்; 2) வெப்ப மன அழுத்த அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கும் வெப்ப அலைகள் ஏற்படும்போது நலிவு நிலையில் உள்ள மக்களிடம் தகவல்களை கேட்கவும் சமூக உறுப்பின்களுக்கு பயிற்சி அளித்தல்; மற்றும் 3) ஒரு இயக்கத்தை துவங்குதல்; இது ஒரு வெப்ப அலை முன்னெச்சரிக்கை அமைப்புடன் இணைக்கப்படலாம்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
ஆண்டுக்கு ஒருமுறை திட்டப் பங்கேற்பாளர்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட வேண்டும். சென்று சந்திப்பது கடினமாக இருக்கக்கூடிய மக்களிடம் களப்பணி மேற்கொள்வதில் உதவுவதற்கு சமூக மக்கள் சார்ந்த நிறுவனங்களுடன் அரசு கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.தூண்டுதல் புள்ளிகள்:
வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
தகவல்தொடர்புகள்/களப்பணிதுறைகள்:
பேரழிவு அபாய மேலாண்மை, பொது சுகாதாரம், முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மைஅளவீடுகள்:
சென்றடைந்த சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
சுற்றுப்புற பகுதி, நகரம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
அரசுக்குச் சொந்தமானது, சமூக மக்கள் நிறுவனங்கள், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்செயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, குறைவானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
அதிகமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
உணவுப் பாதுகாப்பை வழங்குதல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், சமூகமக்கள் திறனை வளர்த்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்