One Billion People More Resilient
Presenter at Santiago announcement
கொள்கைத் தீர்வு

முதன்மை வெப்ப அதிகாரிகள்

முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்

சுருக்கம்

வெப்பத்தில் இருந்து மக்களைக் காப்பதில் உள்ள சவால்களில் ஒன்று, வெப்பம்-சார்ந்த பிரச்சனைகளுக்கான பொறுப்பு என்பது பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிலைகளுக்கு இடையே வியாபித்து காணப்படுகிறது. ஒரு முதன்மை வெப்ப அதிகாரி என்பவர் இந்த பணியினை ஒன்றிணைக்கும் தலைவராக செயல்பட முடியும், அவர் குறுகிய-கால மற்றும் நீண்ட-கால நடவடிக்கைகள் மூலமாக அதிகரித்து வரும் வெப்பநிலைகளுக்கும் மேலும் இந்த வெப்ப அபாயங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் பொறுப்பேற்கும் வகையில் செயல்படுவார்.

செயல்படுத்துதல்

ஒரு முதன்மை வெப்ப அதிகாரியை பணியமர்த்துவது, நிதி ஒதுக்கீடு செய்வது மற்றும் பணியமர்த்துவது மேலும் அதற்கு ஆதரவான பணிகளையும் உருவாக்குவதும் அவசியமாகிறது.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

இந்த முதன்மை வெப்ப அதிகாரிகளுக்கு அவர்களது அரசு செயல்பாடுகளுக்கு இடையே ஆதரவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் மேலும் அர்த்தமுள்ள தீர்வுகளை செயல்படுத்துவதற்கான அதிகார வரம்பு மற்றும் நிதி ஆகிய இரண்டும் அவருக்கு இருக்க வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.
    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    நகர நிர்வாகம்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    துவங்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூகமக்கள் திறனை வளர்த்தல்