மின்சாரத்தைக் குறைவாக பயன்படுத்தும் கட்டிடங்களுக்கான குறியீடுகள்
கட்டாயத்தேவை
சுருக்கம்
அதிகமாக மின்சாரத்தை சேமிக்கக்கூடிய கட்டிடங்களுக்கான மின்சாரப் பயன்பாட்டு குறியீடுகளை உருவாக்குவது குளிர்வித்தல் உக்திகளை செயல்படுத்துவதற்கான தேவையை ஊக்குவிக்கும். ஒரு கட்டிடத்தின் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாட்டில் பெரும்பகுதி இயந்திரங்களைப் பயன்படுத்தி அவற்றை குளிர்விப்பதன் காரணமாக ஏற்படுகிறது. மின்சாரத்தை அதிகமாக சேமிக்கும் முறையில் வடிவமைத்தல் மற்றும் மறைமுகமாக குளிர்வித்தல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டை அளவிடுவதற்கான சென்சார் முறைகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது தேவையற்ற வெப்பத்தைக் குறைப்பதன் மூலமாக ஒட்டுமொத்த வெப்ப அதிகரிப்பைக் குறைத்து அதன்மூலமாக அந்த கட்டிடத்தின் குளிர்விப்புத் தேவையையும் குறைக்கும்.
செயல்படுத்துதல்
புதிய மற்றும் தற்போதுள்ள கட்டிடங்களில் மின்சாரத்தை மிச்சப்படுத்தும் ஆற்றலை அதிகரிப்பதற்கு கட்டிடத்தின் மின்சாரப் பயன்பாட்டு குறியீடுகளை புதுப்பிக்க வேண்டும். நீண்ட காலத்திற்கு திட்டமிடப்பட்ட, இடையிடையே இலக்குகளைக் கொண்ட நீண்ட-கால இலக்குகளை நிர்ணயிப்பதற்கு கட்டிட செயல்திறன் தரநிலைகளைப் பயன்படுத்தலாம்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
புதிதாக கட்டிடங்கள் உருவாகக்கூடிய வளர்ச்சி அதிகரிக்கும் அல்லது தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலப்பகுதிகளில் இந்த நடவடிக்கை அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கட்டுப்பாடுகளுக்கு மாறுவதற்கு போதுமான ஆற்றல் அல்லது அதிகாரம் இல்லாத நிர்வாக அதிகாரிகள் தன்னார்வமாக முன்வந்து செயல்வடுத்துவதற்கான தேவைகளை ஏற்படுத்துவது குறித்து சிந்திக்கலாம். எங்கெல்லாம் அதிக வெப்பமான மற்றும் ஈரப்பதம் நிறைந்த பருவநிலைகள் உள்ளதோ, எங்கே இயந்திரங்கள் மூலமாக குளிர்விக்கும் பணிகளுக்கு குறிப்பிடும்படியான அளவு மின்சார செலவுகள் ஏற்படுகிறதோ அங்கே மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவதற்கான கட்டிடங்களுக்கான குறியீடுகள் மிகுந்த பலனைத் தரும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்துறைகள்:
கட்டிடங்கள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
இணங்குகின்ற கட்டிடங்களின் எண்ணிக்கை, மின்சார சேமிப்பு, மின்சார நுகர்வில் மாற்றம்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம், பகுதி, மாநிலம்/மாகாணம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
பொருந்தாதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்