One Billion People More Resilient
bike lane alongside road
கொள்கைத் தீர்வு

போக்குவரத்து-சார்ந்த வளர்ச்சி

நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்

சுருக்கம்

போக்குவரத்து நகர்புற வெப்பத்தீவு பாதிப்பு ஏற்படுவதற்கு ஒரு முக்கியப் பங்களிக்கிறது. போக்குவரத்து-சார்ந்த வளர்ச்சி (TOD) கார்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது மேலும் பொதுப் போக்குவரத்து, நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் அணுகக்கூடிய அடர்த்தியான, பல்வேறு-பயன் கொண்ட பகுதிகளை ஊக்குவிக்கிறது. அரசாங்கங்கள் பெரும்பாலும் ஒழுங்குமுறைத் தடைகள் மற்றும் சந்தைக் குறைபாடுகள் தொடர்பான TOD-க்கு தடைகளை எதிர்கொள்கின்றன. TOD-க்கு ஆதரவான ஊக்கத்தொகைகளை வழங்குவது மற்றும் நிதியுதவி செய்வது திட்டங்களை முன்னேற்றி எடுத்துச்செல்ல உதவியாக இருக்கும்.

செயல்படுத்துதல்

நிதிப் பற்றாக்குறைகளுக்கு மானியம் வழங்கிட TOD திட்டங்களுக்காக நிதித் திட்டங்களை உருவாக்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

TOD திட்டங்களில் பொதுவான தடைகள் யாதெனில், ஒருமுறை-பயன்படுத்தக்கூடிய மண்டலங்கள், குறைவான அதிகபட்ச-அடர்த்தி ஒழுங்குமுறைகள், மற்றும் உயர்ந்த குறைந்தபட்ச-வாகன நிறுத்த விகிதங்கள் போன்ற நகர்புற நிலப் பயன்பாட்டு ஒழுங்குமுறைகள் ஆகும். இந்த தடைகளைக் கையாள்வதற்கு இதர நகர துறைகள் மற்றும் TOD இல் ஆர்வமுள்ள கட்டிடங்களை உருவாக்கும் தனியார் துறையினர் ஆகியோர் அவசியமானவர்கள் ஆவர். நிலப்பகுதிகள் நகர்புறங்களாக மாற்றப்படுவது நகர்புற வெப்பத் தீவுகளுக்கு பங்களித்தாலும், வெப்பத்தைப் பொறுத்தவரை இது மிகவும் விரும்பத்தக்க நிலப்பயன்பாட்டுக் கொள்கையாகும் ஏனெனில் இது தன்னைத்தானே- சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும் பசுமைத் தளங்களை உருவாக்கவும் உதவுகிறது.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    திட்டமிடப்பட்ட புதிய வளர்ச்சிபசுமை நிலப்பரப்பை அல்லது பயன்படுத்தாமல் உள்ள காலி நிலப்பரப்பை மேம்படுத்துவது அல்லது புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    கட்டிடங்கள், நகர நிர்வாகம், பொருளாதார மேம்பாடு, போக்குவரத்து

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    புதிய போக்குவரத்து நிலையங்களின் எண்ணிக்கை அல்லது உருவாக்கப்பட்ட புதிய போக்குவரத்து கட்டமைப்பின் தூரம், போக்குவரத்து பயணிகளில் மாற்றம்

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    சுற்றுப்புற பகுதி, நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    நீண்ட-காலம் (10+ ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    அதிகமானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பணிகளை உருவாக்குதல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்