பசுமை மேற்கூரைகள்
முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்
சுருக்கம்
பசுமை மேற்கூரைகள் தாவரம் மற்றும் இதர செடிகளைக் கொண்ட ஒரு அடுக்கினை உருவாக்குவதன் மூலமாக சுற்றியுள்ள காற்றினை குளிர்விக்கிறது மேலும் கட்டிடத்தின் வெப்பத்தைக் குறைக்கிறது. பசுமை மேற்கூரைகள் ஒரு கூடுதல் பசுமைப் பகுதியாகவும் செயல்படும். இரண்டு வகையான பசுமை மேற்கூரைகள் உள்ளன: தீவிரமானவை மற்றும் விரிவானவை.
செயல்படுத்துதல்
தற்போதுள்ள அல்லது புதிய அரசுக்குச்-சொந்தமான கட்டிடத்தில் பசுமை மேற்கூரைகளை நிறுவுவதன் மூலமாக அவற்றின் பயன்பாட்டை ஆய்வு செய்யும்படி சொத்து உரிமையாளர்களை ஊக்கப்படுத்துதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
பசுமை மேற்கூரைகளுக்கு போதுமான அளவு கட்டுமான ஆதரவு தேவை அதனால் ஆழமான-சரிவான மேற்கூரைகள் மீது அவற்றை நிறுவ முடியாது. பசுமை மேற்கூரைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு மற்றும் பேணுதல் தேவைப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள மேற்கூரைகளுக்கு பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. தீவிரமான பசுமை மேற்கூரைகள் கூடதல் இணைப்-பலன்களைத் தரும் (மழைநீரை நிர்வகித்தல் போன்றவை) மேலும் விரிவாக அமைக்கப்பட்ட மேற்கூரைகளைக் காட்டிலும் கனமானவை மேலும் அவற்றுக்கு அதிக கட்டுமான ஆதரவு, நீர் பாசனம், மற்றும் உரம் ஆகியவற்றுடன் கூடுதல் பராமரிப்பும் அவசியமாகும். பசுமை மேற்கூரைகள் என்பது பொதுவாக மறுசீரமைக்கப்பட்ட கட்டிடங்களைக் காட்டிலும் புதிக கட்டுமானத்திற்கு மலிவானதாக இருக்கும். பசுமை மேற்கூரைகளை நிறுவி அவற்றைப் பராமரிப்பதற்கு ஆகக்கூடிய செலவுகளை கருத்தில் கொள்ளும்போது, அவற்றை நிறுவுவதற்கான தேவைகள் என்பது மிகவும் கவனமாக சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம்கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.தூண்டுதல் புள்ளிகள்:
கணிசமான மறுசீரமைப்புமறு-உருவாக்கம் அல்லது பெரிய அளவிலான புதுப்பித்தல் திட்டங்களை உள்ளடக்கியது.திட்டமிடப்பட்ட புதிய வளர்ச்சிபசுமை நிலப்பரப்பை அல்லது பயன்படுத்தாமல் உள்ள காலி நிலப்பரப்பை மேம்படுத்துவது அல்லது புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
பசுமை/இயற்கைக் கட்டமைப்புதுறைகள்:
கட்டிடங்கள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
கட்டிட வெப்பநிலைகள் குறைதல், மழைநீர் வீணாவது குறைதல், மின்சார சேமிப்பு, முடிக்கப்பட்ட மற்றும் பணி நடந்து வரும் திட்டங்களின் மொத்த எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
கட்டிடம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
அதிகமானதுபொது நலன்:
நடுத்தரமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்