One Billion People More Resilient
Green roofs
கொள்கைத் தீர்வு

பசுமை மேற்கூரைகள்

கட்டாயத்தேவை

சுருக்கம்

பசுமை மேற்கூரைகள் தாவரம் மற்றும் இதர செடிகளைக் கொண்ட ஒரு அடுக்கினை உருவாக்குவதன் மூலமாக சுற்றியுள்ள காற்றினை குளிர்விக்கிறது மேலும் கட்டிடத்தின் வெப்பத்தைக் குறைக்கிறது. பசுமை மேற்கூரைகள் ஒரு கூடுதல் பசுமைப் பகுதியாகவும் செயல்படும். இரண்டு வகையான பசுமை மேற்கூரைகள் உள்ளன: தீவிரமானவை மற்றும் விரிவானவை.

செயல்படுத்துதல்

பல்வேறு முறைகள் மூலமாக பசுமை மேற்கூரைகளை ஊக்கப்படுத்தலாம் அல்லது வலியுறுத்தலாம்: ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கட்டிடங்களைக் கட்டும்போது பசுமை மேற்கூரைகளை சேர்ப்பதற்கு அல்லது பசுமை மேற்கூரைகள் தேவை என்பதை வலியுத்துவம் வகையில் மண்டலப் பிரிவுகள் அல்லது குறியீடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

பசுமை மேற்கூரைகளுக்கு போதுமான அளவு கட்டுமான ஆதரவு தேவை அதனால் ஆழமான-சரிவான மேற்கூரைகள் மீது அவற்றை நிறுவ முடியாது. பசுமை மேற்கூரைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு மற்றும் பேணுதல் தேவைப்படுகிறது. பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள மேற்கூரைகளுக்கு பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. தீவிரமான பசுமை மேற்கூரைகள் கூடதல் இணைப்-பலன்களைத் தரும் (மழைநீரை நிர்வகித்தல் போன்றவை) மேலும் விரிவாக அமைக்கப்பட்ட மேற்கூரைகளைக் காட்டிலும் கனமானவை மேலும் அவற்றுக்கு அதிக கட்டுமான ஆதரவு, நீர் பாசனம், மற்றும் உரம் ஆகியவற்றுடன் கூடுதல் பராமரிப்பும் அவசியமாகும். பசுமை மேற்கூரைகள் என்பது பொதுவாக மறுசீரமைக்கப்பட்ட கட்டிடங்களைக் காட்டிலும் புதிக கட்டுமானத்திற்கு மலிவானதாக இருக்கும். பசுமை மேற்கூரைகளை நிறுவி அவற்றைப் பராமரிப்பதற்கு ஆகக்கூடிய செலவுகளை கருத்தில் கொள்ளும்போது, அவற்றை நிறுவுவதற்கான தேவைகள் என்பது மிகவும் கவனமாக சிந்தித்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம்
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    புதிய அல்லது புதுப்பிக்கப்பட்ட மண்டலங்கள்/குறியீடுகளை அறிமுகப்படுத்துதல்நகர்புற திட்டமிடுதல் மற்றம் கட்டிட கட்டுமானப் பணி தொடர்பான குறியீடுகள், மண்டல வகைப்படுத்துதல் தேவைகள் அல்லது சட்டங்களை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    பசுமை/இயற்கைக் கட்டமைப்பு
  • துறைகள்:

    கட்டிடங்கள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    அனுமதிகள் மற்றும் முடிக்கப்பட்ட மற்றும் பணி நடந்து வரும் திட்டங்களின் எண்ணிக்கை., கட்டிட வெப்பநிலைகள் குறைதல், பசுமை இல்ல வாயு (GHG) உமிழ்வு குறைதல், மழைநீர் வீணாவது குறைதல், மின்சார சேமிப்பு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    கட்டிடம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    அதிகமானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்