கொள்கைத் தீர்வு
பசுமைச் சுவர்கள்
முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்
சுருக்கம்
பசுமைச் சுவர்கள் என்பது கட்டிடங்களின் பக்கவாட்டில் தாவரங்களை வளர்ப்பது சம்மந்தமானதாகும். இந்த தாவரங்கள் நீரை ஆவியாக்கி கடத்துதல் மற்றும் நிழல் வழங்குதல் ஆகியவற்றின் மூலமாக கட்டிடத்தைச் சுற்றிலும் உள்ள வெப்பநிலைகளில் இருந்து கட்டிடத்தை ஒட்டி அமைந்துள்ள வெப்பநிலையைக் குளிர்ச்சியாக வைத்திருக்கும். பசுமைச் சுவர்கள் வாழும் சுவர்கள் அல்லது செங்குத்துத் தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
செயல்படுத்துதல்
தற்போதுள்ள அல்லது புதிய அரசுக்குச்-சொந்தமான கட்டிடத்தின் சுவர்களை மாற்றுவதன் மூலமாக அல்லது பசுமை சுவர்களை நிறுவுவதன் மூலமாக அவற்றின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
பசுமைச் சுவர்களுக்கு போதுமான நீர் பாசனமும் அதிக அளவிலான தொடர் பராமரிப்பும் தேவை. அதிகபட்ச பசுமை மேற்பரப்பினைப் பெறுவதற்கு அடர்த்தியான பசுமையைத் தரக்கூடிய வகையில் தாவரங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம்கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.தூண்டுதல் புள்ளிகள்:
கணிசமான மறுசீரமைப்புமறு-உருவாக்கம் அல்லது பெரிய அளவிலான புதுப்பித்தல் திட்டங்களை உள்ளடக்கியது.திட்டமிடப்பட்ட புதிய வளர்ச்சிபசுமை நிலப்பரப்பை அல்லது பயன்படுத்தாமல் உள்ள காலி நிலப்பரப்பை மேம்படுத்துவது அல்லது புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
பசுமை/இயற்கைக் கட்டமைப்புதுறைகள்:
கட்டிடங்கள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
கட்டிட வெப்பநிலைகள் குறைதல், மழைநீர் வீணாவது குறைதல், மின்சார சேமிப்பு
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
கட்டிடம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
அதிகமானதுபொது நலன்:
நடுத்தரமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
நடுத்தரமானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்