நகர்புற காடு வளர்ப்புத் திட்டம்
அர்ப்பணிப்பு
சுருக்கம்
மரங்கள் தண்ணீரை ஆவியாக்கி கடத்துவதன் மூலமாகவும் நிழல் தருவதன் மூலமாக குளிர்ச்சியைத் தருகிறது அது நடைபாதைகளில் வெப்பநிலைகளைக் குறைக்கிறது. தாவரங்களை அதிகப்படுத்துவது மாசு ஏற்படுவதைக் குறைத்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மற்றும் மின்சாரச் செலவுகளைக் குறைத்தல் என பல்வேறு இணைப்-பலன்களைத் தருகிறது. தற்போதுள்ள மரங்களின் அடர்த்தியை கவனித்துக்கொள்வதும் மேலும் அத்தகைய மரங்களின் அளவை விரிவுபடுத்துவதற்கான உக்திகளைக் கண்டறிவதும் தான் ஒரு நகர்புற காடு வளர்ப்புத் திட்டத்தின் இலக்குகளாகும். அடர்த்தியான மரங்களை உருவாக்குதல், உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், மற்றும் சிறந்த பராமரிப்பினை வழங்குதல் ஆகியவற்றில் இருக்கக்கூடிய வாய்ப்புள்ள முரண்பாடுகளை சரிசெய்வதற்கு பல்வேறு துறைகளை அணிசேர்ப்பதற்கு ஒரு நகர்புற காடு வளர்ப்புத் திட்டம் ஒரு முக்கியமான படிநிலையாகும்.
செயல்படுத்துதல்
நகர செயல்படுத்துதலுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு நகர்புற காடு அல்லது சாலை மரங்கள் திட்டத்தை உருவாக்குதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
நகர்புற காடு வளர்ப்புத் திட்டத்தில் அந்த பகுதியின் காணப்படும் தண்ணீர்த் தேவைகளை அங்கீகரிக்கக்கூடிய பூர்வீக மர வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும். பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மரங்கள் தீ விபத்து ஏற்படக்கூடிய அபாயத்தை அதிகரிக்கலாம். மரம் நடுவதில் அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது தொடர்பான செலவுகள் மற்றும் பணியாளர் தேவைகள் உள்ளது. நகர்புற காடு வளர்ப்பு மற்றும் சாலை திட்டங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அல்லது மண்டல மாற்றம் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படலாம்.
கண்ணோட்டம்
பருவநிலை:
மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
அர்ப்பணிப்புமுன்னுரிமைகளுக்கும் முதலீட்டிற்கும் வழிகாட்டுவதற்கு அரசாங்கங்கள் பேராவல்கொண்ட இலக்குகளை நிர்ணயித்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
தயாரிப்பு நடவடிக்கைகள் (நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை நிரூபிக்கும் செயல்கள்)சம்மந்தப்பட்ட தூண்டுதல்-நிகழ்வுகள் நிகழும்போது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை நிரூபிக்க/ உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள்.நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.நடவடிக்கை வகைகள்:
பசுமை/இயற்கைக் கட்டமைப்புதுறைகள்:
பூங்காக்கள், பொதுப் பணிகள், முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அபாயக் குறைப்பு மற்றும் தணிப்புஅளவீடுகள்:
நகர்புற மர அடர்த்தியில் மாற்றம்
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
சுற்றுப்புற பகுதி, நகரம், மாவட்டம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சமூக மக்கள் நிறுவனங்கள், சொத்து உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள், தனியார் சொத்து உருவாக்குவோர், நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, தனியார் முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்செயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
நடுத்தரமானதுபொது நலன்:
அதிகமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
குறைவானதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
உணவுப் பாதுகாப்பை வழங்குதல், உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்