One Billion People More Resilient
air conditioners
கொள்கைத் தீர்வு

சேவைகளை நிறுத்துவதற்கான கட்டுப்பாடுகள்

கட்டாயத்தேவை

சுருக்கம்

வெப்ப அவசரக்காலங்களில் கட்டணங்களை செலுத்தாமல் இருந்தால் சேவைகளை துண்டிப்பதை அரசாங்கங்கள் தடை செய்யலாம். அதிகமான வெப்பநிலைகள் இருக்கும் சமயங்களில் குறைந்த வருவாய் உள்ள குடும்பங்களுக்கு ஏர் கண்டிஷனிங் மற்றும் இதர சேவைகளுக்கான அணுகலை வழங்குவது உயிர்களை காக்கும்.

செயல்படுத்துதல்

சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மிகவும் வெப்பமான நிகழ்வின் போது கட்டணம் செலுத்தாத காரணத்திற்காக அத்தியாவசிய சேவைகளை நிறுத்தக்கூடாது என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

கட்டுப்பாடுகள் என்பது வெப்பநிலையைத் சமாளிக்கக்கூடியதன் அடிப்படையில் தெளிவாக விளக்கப்பட வேண்டும். வருமானத் தேவைகள், ஒருசில மருத்துவ நிலைகள், அல்லது இதர சமூக பொருளாதார காரணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியை முடிவு செய்யலாம். சேவையை நிறுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளுடன் சேர்த்து மின்சாரத்தை சேமிப்பதற்கான வழிகள் குறித்து சமூக மக்களுக்கு கல்வியளிப்பதும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    பொதுப் பணிகள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மை
  • அளவீடுகள்:

    திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம், மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தொழில்துறை, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்