One Billion People More Resilient
temperature sign
கொள்கைத் தீர்வு

வெப்ப விழிப்புணர்வுப் பிரச்சாரம்

விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்

சுருக்கம்

பல சமூக மக்களுக்கு மிகவும் கடுமையான வெப்பத்தின் பல்வேறு வகையான தாக்கங்கள் பற்றியோ அல்லது தங்களது அபாயத்தை தீர்ப்பதற்கான தேர்வுகள் பற்றியோ தெரியாது. களப்பணி இயக்கங்கள் மூலமாக வெப்பம் ஏன் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும், உயர்ந்துவரும் வெப்பநிலைகள் எப்படி பல்வேறு சமூக மற்றும் பருவநிலை பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புயர்வை அதிகரிக்கும் மேலும் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக குளிர்விக்கும் தீர்வுகளில் சமூக உறுப்பினர்கள் பங்கேற்பதற்காக தற்போதுள்ள வளங்களையும் பகிர்ந்துகொள்ளும்.

செயல்படுத்துதல்

வெப்பத்தின் அபாயம் குறித்து பொது மக்களுக்கு கல்வியளிக்க வழிகாட்டுதல்கள், கருவித் தொகுப்புகள் மற்றும் கைப்புத்தகங்களை உருவாக்குதல். சமூக ஊடகங்கள், இணையதளங்கள், மற்றம் ஊடக அமைப்புகள் ஆகியவற்றைப் போன்ற பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு இயக்கத்தை நடத்துதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

பள்ளிகள் மற்றும் முதுமக்கள் மையங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் செல்லும் இடங்கள் மற்றும் நலிவு நிலையில் உள்ள மக்கள் அடிக்கடி செல்லும் இடங்கள் நிகழ்ச்சிகளுக்கு சிறந்த இடங்களாகும். ஆன்லைன் தகவல்தொடர்பில் நலிவு நிலையில் உள்ள மக்களுக்கு தகவல் சென்று சேருவதில் உள்ள தடைகளை கருத்தில் கொண்டு திட்ட மேலாளர்கள் பொதுமக்கள் அதிகம் பார்க்கக்கூடிய இடங்களில் தகவலைப் பகிர்ந்துகொள்வதை முதன்மைப்படுத்த வேண்டும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    தகவல்தொடர்புகள்/களப்பணி
  • துறைகள்:

    கல்வி, பேரழிவு அபாய மேலாண்மை, பொது சுகாதாரம், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    சென்றடைந்த சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம், மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, குறைவானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சமூகமக்கள் திறனை வளர்த்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்