One Billion People More Resilient
Green roofs
கொள்கைத் தீர்வு

வெப்பத்திற்கான-உணர்திறன் மிக்க ஒப்பந்தமுறை மற்றும் கொள்முதல்

முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்

சுருக்கம்

அரசுக் கொள்முதல் கொள்கைகள் என்பது வழக்கமாக வாழ்க்கை-சுழற்சி, செயல்திறன் மற்றும் இதர இணைப்-பலன்களை கருத்திக் கொள்வதற்கான வாய்ப்பின்றி குறைந்த-செலவாகக்கூடிய முறைகளைத் தான் ஆதரிக்கிறது. நிலையான கொள்முதல் மற்றும் ஒப்பந்தம் வழங்கும் முறைகள் நிலையான நகர்புற குளிர்வித்தலை ஊக்குவிப்பதற்கான முடிவுகளை எடுப்பதற்கு அரசுகளுக்கு உதவும்.

செயல்படுத்துதல்

குறைவான வாழ்க்கை-சுழற்சி செலவு மதிப்பாய்வுகளையும் மற்றும் அவற்றின் குளிர்விக்கும் பலன்களையும் சேர்த்து குறிப்பிடக்கூடிய கொள்முதல் முடிவுகளை எடுப்பது குறித்து சிந்தியுங்கள். நகர்புற ஒப்பந்தங்களில் ஒப்பந்தப் புள்ளியை வழங்குவோர் நகர்புற வெப்பத்தில் அவர்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை எவ்வாறு சரி செய்வார்கள் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

தனியார் துறையில் உள்ள ஒழுங்குமுறைகளை மாற்றுவதை விட அரசு கொள்முதல் நடைமுறைகளில் இருக்கக்கூடிய உள் செயல்முறைகளை மாற்றுவது எளிமையானது. நீடித்த கொள்முதலின் முக்கியத்துவத்தைப் பற்றி பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியமானது.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    நகர நிர்வாகம்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், தொழில் உரிமையாளர்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    ஒரு ஆண்டுக்கான நீடித்த கொள்முதல் ஒப்பந்தங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    பொருந்தாது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பொருந்தாது
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பொருந்தாது