One Billion People More Resilient
child planting a tree
கொள்கைத் தீர்வு

மரம் நடும் இயக்கம்

விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்

சுருக்கம்

மரங்கள் தண்ணீரை ஆவியாக்கி கடத்துவதன் மூலமாகவும் நிழல் தருவதன் மூலமாக குளிர்ச்சியைத் தருகிறது அது நடைபாதைகளில் வெப்பநிலைகளைக் குறைக்கிறது. தாவரங்களை அதிகப்படுத்துவது மாசு ஏற்படுவதைக் குறைத்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மற்றும் மின்சாரச் செலவுகளைக் குறைத்தல் என பல்வேறு இணைப்-பலன்களைத் தருகிறது. ஒரு மரம் நடும் இயக்கம் தனியார் சொத்து உரிமையாளர்களையும் தொழில்களையும் மரங்களை நடுவதற்கு ஊக்கப்படுத்தும். ஒரு இயக்கத்தின் மூலமாக, அரசாங்கங்கள் தன்னார்வளர்களை பணியமர்த்தி பொது நிலத்தில் மரங்களை நடுவதற்கு நிதிகளைத் திரட்டலாம்.

செயல்படுத்துதல்

மரங்களை வழங்குதல், கார்பரேட் நிறுவனத்தின் நிதி ஆதரவு அல்லது போட்டிகள் மற்றும் இதர திட்டங்கள் மூலமாக மரம் நடும் முயற்சிகளில் கலந்துகொள்ளவும் அதற்கு ஆதரவளிக்கவும் குடியிருப்போரை ஊக்கப்படுத்துதல். பங்கேற்பாளர்கள் தங்களது சொந்த சொத்திலும் மரங்களை நடலாம். தனியார் துறையைச் சேர்ந்த பங்காளர்கள் மற்றும் அறக்கட்டளைகளிடம் இருந்து நிதியுதவிகளைப் பெறுவதன் மூலமாக மரங்களுக்கான நிதிகளை அரசாங்கங்கள் திரட்ட முடியும்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

இந்த திட்டம் குளிர்ச்சியை வழங்குவதோடு மிகவும் கடுமையான வெப்பம் இருக்கும் சமயத்தில் அடர்த்தியான மரங்களின் பங்கு குறித்த விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது. ஒரு கல்வி இயக்கம் நடத்துவது தனியார் சொத்து உரிமையாளர்களுக்கும் தொழில்களுக்கும், தங்களது சொத்தில் மரங்களைத் தொடர்ந்து பராமரிப்பது மற்றும் பேணுவதில் உள்ள முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    பசுமை/இயற்கைக் கட்டமைப்பு
  • துறைகள்:

    கல்வி, பூங்காக்கள், பொதுப் பணிகள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    நகர்புற மர அடர்த்தியில் மாற்றம், நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    சுற்றுப்புற பகுதி, நகரம், மாவட்டம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    தொழில்துறை, நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    உணவுப் பாதுகாப்பை வழங்குதல், உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்