One Billion People More Resilient
child planting a tree
கொள்கைத் தீர்வு

மரம் நடுதல்

முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்

சுருக்கம்

மரங்கள் தண்ணீரை ஆவியாக்கி கடத்துவதன் மூலமாகவும் நிழல் தருவதன் மூலமாக குளிர்ச்சியைத் தருகிறது அது நடைபாதைகளில் வெப்பநிலைகளைக் குறைக்கிறது. தாவரங்களை அதிகப்படுத்துவது மாசு ஏற்படுவதைக் குறைத்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மற்றும் மின்சாரச் செலவுகளைக் குறைத்தல் என பல்வேறு இணைப்-பலன்களைத் தருகிறது. மரம் நடுவதன் முக்கியத்துவம் மற்றும் தாக்கத்தை விளக்குவதற்கு அரசுக்குச்-சொந்தமான சொத்துகளில் அரசுகள் மரங்களை நடலாம், குளிர்வூட்டும் பலன்களைத் தரலாம், மேலும் மரங்களின் அடர்ந்த அமைப்பினை மேம்படுத்தலாம்.

செயல்படுத்துதல்

புதிய அல்லது தற்போது அரசுக்குச்-சொந்தமான நிலத்தில் மரங்களை நடுதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

இவற்றின் தாக்கத்தை விளக்குவதற்கு இவற்றை முதற்கட்டமாக செயல்படுத்தலாம், எனினும், அவற்றின் தாக்கம் தளத்தினை-அடிப்படையாகக் கொண்டிருக்கும். உதாரணமாக, ஏற்கெனவே பசுமைப் பகுதி அதிகமாக நிறைந்த நகருக்குச்-சொந்தமான மற்றும் நகரில் பராமரிக்கப்பட்டு வரும் பூங்காவில் அடர் மரங்களைச் சேர்ப்பதில் ஏற்கெனவே பசுமைப் பகுதி குறைவாக உள்ள இடத்தில் நடப்படும் மரத்தில் ஏற்படுவதைக் காட்டிலும் குறைவான தாக்கமே ஏற்படும். மரம் நடுவதில் அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது தொடர்பான செலவுகள் மற்றும் பணியாளர் தேவைகள் உள்ளது.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    கணிசமான மறுசீரமைப்புமறு-உருவாக்கம் அல்லது பெரிய அளவிலான புதுப்பித்தல் திட்டங்களை உள்ளடக்கியது.
    திட்டமிடப்பட்ட புதிய வளர்ச்சிபசுமை நிலப்பரப்பை அல்லது பயன்படுத்தாமல் உள்ள காலி நிலப்பரப்பை மேம்படுத்துவது அல்லது புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
    முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    பசுமை/இயற்கைக் கட்டமைப்பு
  • துறைகள்:

    பூங்காக்கள், பொதுப் பணிகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    தளம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    உணவுப் பாதுகாப்பை வழங்குதல், உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்