![construction workers](https://heatactionplatform.onebillionresilient.org/wp-content/uploads/sites/5/2023/05/etienne-girardet-sgYamIzhAhg-unsplash-1-scaled-e1652480165250.jpeg)
தொழில்சார் அபாயக் கொள்கைகள்
கட்டாயத்தேவை
![](https://heatactionplatform.onebillionresilient.org/wp-content/uploads/sites/5/2023/05/etienne-girardet-sgYamIzhAhg-unsplash-1-scaled-e1652480165250-1270x714.jpeg)
சுருக்கம்
வெப்ப பாதிப்புக்கு ஆளாவது தொழில் சார்ந்த நோய்கள் மற்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடும், முக்கியமாக வெளியிடங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அவை ஏற்படக்கூடும். பணி செய்கின்ற அல்லது பள்ளி செயல்படும் நேரங்களை திருத்தியமைப்பது, பகலில் வெப்பம் மிகவும் அதிகமாக உள்ள சமயத்தில் பணியாளர்கள் வெப்பத்தின் தாக்கத்திற்கு ஆளாவதைக் குறைக்கும் மேலும் அபாயத்தை சரிசெய்யும். இந்த திட்டமிடப்பட்ட மாற்றங்களுடன், பணியாளர்களைப் பாதுகாப்பதற்காக பணிவழங்குவோர் இடைவேளைகள் வழங்க வேண்டும், போதுமான தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் மேலும் பழக்கப் படுத்திக்கொள்வதற்கான சமயம் வழங்க வேண்டும்.
செயல்படுத்துதல்
பணி வழங்குவோர் கட்டாய வெப்ப அழுத்த விதிகளை உருவாக்குவதற்கான குறைந்தபட்ச தேவைகளை உருவாக்குதல். ஒரு உதாரணமாக, அது இவற்றை உள்ளடக்கியதாக இருக்கலாம்: நாளின் வெப்பம் மிகுந்த சமயங்களை தவிர்க்கக்கூடிய வகையில் பணிக்கால அட்டவணையை மாற்றுதல், வெப்பம்-சார்ந்த நோய்களுக்கான அறிகுறி உள்ளதா என்பதற்காக பணியாளர்களைக் கண்காணித்தல், அடிக்கடி இடைவேளை விடுதல், அவசரக்காலங்களில் எப்படி செயல்படுவது என்பது பற்றி தொழிலாளர்களுக்கு பயிற்சி அளித்தல், தண்ணீர் மற்றம் நிழல் வழங்குதல், மற்றும் இன்னும் பல.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
கொள்கையை உருவாக்கும்போது பணியாளர்கள் அல்லது பாதிக்கப்படக்கூடிய இதர பங்குதாரர்களின் ஆலோசனை கேட்கப்பட வேண்டும். இதைப் பின்பற்றாத பணி வழங்குவோருக்கு அபராதங்களை விதித்தல். தேவைப்பட்டால் தங்களுக்கு பணி வழங்குவோர் பற்றி புகார் அளிப்பதற்கு தொழிலாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் பொறுப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யவும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
கட்டாயத்தேவைகட்டாயத் தேவைகள் என்பவை குறியீடுகள், அவசரச் சட்டங்கள், மண்டலமாக்கல் கொள்கைகள், அல்லது இதர ஒழுங்குமுறைக் கருவிகளை உருவாக்குவதன் மூலமாக பங்குதாரர்கள் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை ஏற்படுத்தும் அரசு நிபந்தனைகளாகும்.தூண்டுதல் புள்ளிகள்:
வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
திட்டமிடுதல்/கொள்கைதுறைகள்:
அவசரக்கால மேலாண்மை, நகர நிர்வாகம், பொது சுகாதாரம், பொருளாதார மேம்பாடு
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மைஅளவீடுகள்:
தொழில்சார்ந்த கொள்கை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம், மாநிலம்/மாகாணம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
தொழில்துறை, நகர அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, தனியார் முதலீடுசெயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
நடுத்தரமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்