One Billion People More Resilient
solar panels
கொள்கைத் தீர்வு

சூரிய மின் தகடுகள்

முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்

சுருக்கம்

மேற்கூரைகள் மீது சூரிய மின் தகடுகளை நிறுவுவது புதுப்பிக்கத்தக்க மின்சக்தியைப் பெறுதல் மற்றும் கட்டிடங்களுக்கு நேரடியாக குளிர்ச்சியை வழங்குதல் என்கின்ற இரட்டைப் பலன்களை வழங்கும். சூரிய மின் தகடுகளின் செயல்திறனை விளக்குவதற்காக அரசுகள் அவற்றை அரசுக்குச் -சொந்தமான கட்டிடங்களில் நிறுவி உள்ளூர் மக்களும் சூரிய மின்சாரத்திற்கு மாறுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்தலாம். அரசுகள் தங்களது மின்சார செலவுகளைக் குறைக்கவும் வரி செலுத்துவோரின் பணத்தைச் சேமிப்பதற்கும் சூரிய மின்சக்தி அரசுகளுக்கு உதவும்.

செயல்படுத்துதல்

பொருத்தமாக அரசுக்குச்-சொந்தமான தளங்களை அடையாளம் கண்டு சூரிய மின் தகடுகளை நிறுவுதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

சூரிய மின் தகடுகளை பல்வேறு வகையான பருவநிலைகளிலும் சூழ்நிலைகளிலும் குறைந்த பராமரிப்புச் செலவிலேயே பயன்படுத்த முடியும். பயன்படுத்தாமல் கைவிடப்பட்ட நிலங்கள் அல்லது இதர முழுமையாக பயன்படுத்தப்படாத தளங்களில் சூரிய மின் தகடுகளை நிறுவுவது குறித்தும் அரசு பரிசீலிக்கலாம்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்படுதல்அரசாங்கங்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்கள் (எ.கா. கட்டிடங்கள் மற்றும் சாலைகள்) மீது உரிமையும் அதிகார வரம்பும் உள்ளது மேலும் அவை நேரடி பணி வழங்வோராகவும், ஒப்பந்ததாரராகவும் செயல்படுகின்றனர். இது வெப்ப அபாயக் குறைப்பையும், தயார்நிலை தீர்வுகளையும் ஊக்கப்படுத்த அவர்களை அனுமதிக்கிறது மேலும் தங்களது சொத்துக்கள், வேலை வாய்ப்புகள், மற்றும் ஒப்பந்தங்களில் வெப்பத்திற்கு-மீள்நிலையை உருவாக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக முன்னுதாரணமாக தலைமை ஏற்று செயல்பட்டு தங்களது தாக்கத்தை விளக்குகிறது.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    கணிசமான மறுசீரமைப்புமறு-உருவாக்கம் அல்லது பெரிய அளவிலான புதுப்பித்தல் திட்டங்களை உள்ளடக்கியது.
    திட்டமிடப்பட்ட புதிய வளர்ச்சிபசுமை நிலப்பரப்பை அல்லது பயன்படுத்தாமல் உள்ள காலி நிலப்பரப்பை மேம்படுத்துவது அல்லது புதிய கட்டுமானங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
    முக்கியமான நகர கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிடுதல் அல்லது துவங்குதல்நகர்புற போக்குவரத்து, சாலை அல்லது பயன்பாட்டு சேவைகளின் கட்டுமானம் / மறு-கட்டுமானம் போன்றவற்றை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்ட படிவம்
  • துறைகள்:

    கட்டிடங்கள், பொதுப் பணிகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு, மின்சார சேமிப்பு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    கட்டிடம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    குறைவானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    பணிகளை உருவாக்குதல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்