One Billion People More Resilient
small scale solar
கொள்கைத் தீர்வு

சிறு மின்கட்டமைப்புகள்

ஊக்கமளிப்பவை

சுருக்கம்

மிகவும் கடுமையான வெப்ப அலைகளின் போது, இயந்திரங்கள் மூலமாக குளிர்விப்பதற்கான தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக மின் தடைகள் ஏற்படுவதால், அத்தகைய சமயங்களில் மின் கட்டமைப்புகள் அவற்றின் அதிகபட்ச செயல் எல்லைக்கு தள்ளப்படுகின்றன. சிறு மின்கட்டமைப்புகள் என்பது முதன்மை மின்கட்டமைப்பிற்கு மின்சார விநியோகம் செய்யக்கூடிய அல்லது நேரடியாக சமூக மக்களுக்கு மின் விநியோகம் செய்யக்கூடிய திறன்கொண்ட பரவலாக்கப்பட்ட மின் கட்டமைப்புகளாகும். இந்த சிறு மின்கட்டமைப்புகள் ஒரு நம்பகமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் ஆதாரத்தை வழங்குவதோடு, முதன்மை மின் கட்டமைப்பின் மீதான பளுவையும் குறைக்க உதவும்.

செயல்படுத்துதல்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காகவும், இடை இணைப்புகளுக்காகவும், மேலும் சிறு மின்கட்டமைப்புகளை நிறுவுவதற்காகவும் ஊக்கத்தொகைகளை வழங்குங்கள்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

சாதனத்தைப் பாதுகாப்பதற்காக சிறு மின்கட்டமைப்புகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பராமரிப்பது அவசியமாகும். பல்வேறு உரிமைகொள்ளக்கூடிய மற்றும் இயக்கக்கூடிய மாதிரிகளை ஆராய்வதற்கு CBO-க்களுடன் கூட்டாக இணைந்து பணியாற்றுவது குறித்து சிந்திக்கவும்.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    திட்டமிடுதல்/கொள்கை
  • துறைகள்:

    பொதுப் பணிகள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    சிறு மின்கட்டமைப்புகள் மூலமாக வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    நகரம், மாநிலம்/மாகாணம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சமூக மக்கள் நிறுவனங்கள், தொழில்துறை, நகர அரசு, மாநில/மாகாண அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு, தனியார் முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    அதிகமானது
  • பொது நலன்:

    நடுத்தரமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூகமக்கள் திறனை வளர்த்தல், பணிகளை உருவாக்குதல், பயன்பாட்டு சேவைகளில் சேமித்தல்