One Billion People More Resilient
street trees
கொள்கைத் தீர்வு

சாலை மரங்கள்

ஊக்கமளிப்பவை

சுருக்கம்

மரங்கள் தண்ணீரை ஆவியாக்கி கடத்துவதன் மூலமாகவும் நிழல் தருவதன் மூலமாக குளிர்ச்சியைத் தருகிறது அது நடைபாதைகளில் வெப்பநிலைகளைக் குறைக்கிறது. தாவரங்களை அதிகப்படுத்துவது மாசு ஏற்படுவதைக் குறைத்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மற்றும் மின்சாரச் செலவுகளைக் குறைத்தல் என பல்வேறு இணைப்-பலன்களைத் தருகிறது. மரங்களை நடுவதற்கும் அவற்றைத் தொடர்ச்சியாக பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகள் ஒரு தடையாக இருக்கலாம். ஊக்கத்தொகைகளை வழங்குவது தனியார் சொத்து உரிமையாளர்களையும் தொழில்களையும் மரங்களை நடுவதற்கு ஊக்கப்படுத்தும்.

செயல்படுத்துதல்

மழைநீர்க் கட்டணக் குறைப்பு, வரிக் கடன்கள், சொத்து மதிப்புகளுக்கு வரி அதிகரிப்புக்கான நிதியுதவி, அல்லது மானியத் திட்டங்கள் போன்ற ஊக்கத்தொகைகள் மூலமாக மரம் நடுதல் மற்றும் மரத்தைப் பாதுகாப்பதை உக்குவித்தல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

மரம் நடுவதில் அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பது தொடர்பான செலவுகள் மற்றும் பணியாளர் தேவைகள் உள்ளது.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
  • நடவடிக்கை வகைகள்:

    பசுமை/இயற்கைக் கட்டமைப்பு
  • துறைகள்:

    பூங்காக்கள், பொதுப் பணிகள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், சொத்து உரிமையாளர்கள், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    நகர்புற மர அடர்த்தியில் மாற்றம், நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    சுற்றுப்புற பகுதி, தளம், நகரம், மாவட்டம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    நடுத்தரமானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    உணவுப் பாதுகாப்பை வழங்குதல், உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்