சமூக குளிர்வித்தல் மையங்கள்
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்
சுருக்கம்
குளர்வித்தல் மையங்கள் எனப்படுபவை மிகவும் கடுமையான வெப்பம் மற்றும் வெப்ப அலைகள் ஏற்படும் சமயங்களில் ஏர் கண்டிஷன் வசதியுள்ள பொது இடங்களாகும். குளிர்வித்தல் மையங்கள் என்பது வீட்டில் ஏர் கண்டிஷனர் நிறுவும் வசதியற்ற நலிவு நிலையில் உள்ள மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
செயல்படுத்துதல்
மிகவும் கடுமையான வெப்பம் உள்ள சமயங்களில் நூலகங்கள், முதுமக்களுக்கான மையங்கள், மற்றும் வழிபாட்டு மையங்கள் போன்ற தற்போதுள்ள கட்டமைப்பினை பொது மக்களுக்கான தற்காலிக குளிர்ச்சிமிக்க தங்கும் மையமாக பயன்படுத்துதல். இந்த செயல்நிலைகளில் உள்ளடங்குபவை 1) பொருத்தமான கட்டிடங்களை அடையாளம் காணுதல் (எ.கா. அரசுக்கு- சொந்தமான கட்டிடங்கள்); 2) நிதி ஒதுக்கீடு செய்தல் (எ.கா. சமூக பலன்கள் ஒப்பந்தம் அல்லது மானியத் திட்டம் மூலமாக), மற்றும் 3) வசதிகளை வழங்குதல் (எ.கா. கூடுதல் சமூக சேவைகள்).
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
குளிர்ச்சி மையங்களைத் தேர்வு செய்யும்போது அவற்றை நலிவு நிலையில் உள்ள மக்கள் எளிதாக அடைவதற்காக அந்த இடத்துடன் தொடர்புடைய போக்குவரத்து தடைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
நிதியுதவி மற்றும் நிதி ஆதரவு வழங்குதல்அபாயத்தை மாற்றுகின்ற முறைகள் உள்பட திட்டங்களை செயல்படுத்துவதற்கு அரசு அல்லது கொடையாளிகள் அளித்த நிதியை அல்லது தனியார் நிதியை ஒதுக்கீடு செய்தல்.தூண்டுதல் புள்ளிகள்:
நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
திட்டமிடுதல்/கொள்கைதுறைகள்:
கல்வி, பேரழிவு அபாய மேலாண்மை, பொது சுகாதாரம், போக்குவரத்து, முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மைஅளவீடுகள்:
குளிர்வித்தல் மையங்களின் எண்ணிக்கை, குளிர்வித்தல் மையங்களுக்கு அணுகல் பெற்ற சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
தளம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
சமூக மக்கள் நிறுவனங்கள், நகர அரசு, மாநில/மாகாண அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, தனியார் முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்செயல்படுவதற்கான திறன்:
அதிகமானது, நடுத்தரமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
அதிகமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், சமூகமக்கள் திறனை வளர்த்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்