One Billion People More Resilient
woman planting in a garden
கொள்கைத் தீர்வு

சமூகத் தோட்டங்கள்

ஊக்கமளிப்பவை

சுருக்கம்

காலியாக உள்ள, பயிர் செய்யப்படாத நிலத்தை சமூகத் தோட்டங்களாக மாற்றுவது அந்த பகுதியின் வெப்பத்தைக் குறைப்பதோடு கூடுதலாக சமுதாய மற்றும் பொருளாதாரப் பலன்களையும் வழங்கும். தோட்டங்கள் அல்லது மண்ணைக் கொண்டு உயர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள மண் வெப்பமான மாதங்களில் சூரிய ஒளி மற்றும் வெப்பத்தை தன்னுள் கிரகித்து வைத்துக்கொள்கிறது.

செயல்படுத்துதல்

காலியாக உள்ள, பயிர் செய்யபடாத நிலத்தை சமூகத் தோட்டங்களாக மாற்றுவதற்கு ஊக்கமளிக்கும் வகையில் பொதுமக்களுக்கான நிலத்தை, நிதியுதவியை மற்றும்/அல்லது நிர்வாக மேலாண்மை ஆகியவற்றை வழங்குதல்.

பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்

சமூகத் தோட்டங்கள் செயல்படுவதற்கு அடிப்படைக் கட்டமைப்பு தேவைப்படுகிறது (எ.கா. தண்ணீர் விநியோகம்) மேலும் இது சமூக மக்கள் ஒன்றிணைந்து செயல்படுதல், கூட்டு முயற்சி மற்றும் கல்வி ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.

கண்ணோட்டம்

  • பருவநிலை:

    மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வு
  • கொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:

    ஊக்கமளிப்பவைவெப்ப அபாயத்தைக் குறைக்கின்ற மற்றும் தயார்நிலையை மேம்படுத்தும் தீர்வுகளை செயல்படுத்துவதற்கு பங்குதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தள்ளுபடிகள், வரிக்கடன்கள், விரைவான அனுமதி, மேம்பாட்டு/மண்டல வகைப்படுத்துதல் போனஸ்கள், மற்றும் இன்னும் பல்வேறு நிதி மற்றும் நிதி-சாரா ஊக்கங்களை வழங்குதல்.
  • தூண்டுதல் புள்ளிகள்:

    நகர திட்டமிடல் செயல்முறைகள்பருவநிலை செயல்திட்டம், மின்சாரத்தை முற்றிலும் பயன்படுத்தாமல் இருப்பதற்கான திட்டம், மாஸ்டர் திட்டம், போக்குவரத்துத் திட்டம், மின்சக்தியை கண்காணித்தல் போன்ற நகர்புற முயற்சிகளை உள்ளடக்கியது.
    நகர நிலக் கையகப்படுத்துதல்/விற்பனையை மதிப்பிடுதல்ஊதா அல்லது பசுமை கட்டமைப்பு அல்லது மாவட்ட குளிர்வித்தல் போன்ற நகர்புற குளிர்வித்தல் முயற்சிகளுக்கு பொருத்தமான இடத்தை ஒதுக்கீடு செய்வது மற்றும் முயற்சிகளை மேற்கொள்வதை உள்ளடக்கியது.
    வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.
  • நடவடிக்கை வகைகள்:

    பசுமை/இயற்கைக் கட்டமைப்பு
  • துறைகள்:

    கல்வி, பூங்காக்கள், முறைசாரா தீர்வுகள்

உதாரண ஆய்வுகள்

தாக்கம்

  • இலக்குப் பயனாளிகள்:

    குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்
  • தாக்கத்தின் நிலை:

    அபாயக் குறைப்பு மற்றும் தணிப்பு
  • அளவீடுகள்:

    தோட்டங்களின் எண்ணிக்கை, பங்காளர் நிறுவனங்களின் எண்ணிக்கை

செயல்படுத்துதல்

  • நடவடிக்கை அளவு:

    தளம்
  • அதிகாரம் மற்றும் நிர்வாகம்:

    நகர அரசு
  • செயல்படுத்தும் கால அளவு:

    இடைப்பட்ட-காலம் (3 – 9 ஆண்டுகள்)
  • செயல்படுத்தும் பங்குதாரர்கள்:

    சமூக மக்கள் நிறுவனங்கள், நகர அரசு
  • நிதியளிக்கும் ஆதாரங்கள்:

    அரசு முதலீடு
  • செயல்படுவதற்கான திறன்:

    அதிகமானது, நடுத்தரமானது

பலன்கள்

  • செலவுப்-பயன்:

    குறைவானது
  • பொது நலன்:

    அதிகமானது
  • பசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:

    நடுத்தரமானது
  • இணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):

    உணவுப் பாதுகாப்பை வழங்குதல், உயிரி பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், காற்று மற்றும் தண்ணீர் மாசுகளை குறைத்தல், பசுமை இல்ல வாயு உமிழ்வுகளைக் குறைத்தல், மழைநீர் மேலாண்மையை மேம்படுத்துதல்
  • இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):

    சமூக ஒற்றுமையை வளர்த்தல், சொத்தின் மதிப்புகளை அதிகரித்தல், பொது இடத்தை மேம்படுத்துதல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்