பாடத்திட்ட நோக்கம்
வெப்பச் செயல்பாட்டை கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் பாடத்திட்டத்திற்கு வரவேற்கிறோம்! வெப்பத் திட்டமிடுதலை மேற்கொள்ளும் அதேநேரம், தீர்வுகளின் தாக்கங்களை அளவிடுவதற்கு முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை நீங்கள் விவரித்து அவற்றைக் கண்காணிக்கத் துவங்குவீர்கள். திட்டப்பணிகள் மற்றும் கொள்கைகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் என்பது அவற்றை உருவாக்கும் ஆரம்ப நிலைகளிலேயே துவங்கும் மேலும் திட்டம் அல்லது கொள்கை மாற்றமடைந்தாலும் அல்லது நிறைவடைந்தாலும் தொடர்வதாக இருக்க வேண்டும்.செயல்திறனை முழுமையாக மதிப்பீடு செய்வதற்கு உங்களது குறிகாட்டிகள் பருவநிலை மற்றும் மனித ஆரோக்கியத் தாக்கங்கள் ஆகிய இரண்டையும் அளவிட வேண்டும்.
இந்த பாடத்திட்டம் வெப்ப மீள்திறன் மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்வதற்கான சிறந்த நடைமுறைகளை வழங்குகிறது. தற்போது மேற்கொள்ளப்படும் அளவீடுகள் சமூக மக்களின் கருத்துக்கு நீங்கள் முன்னுரிமை வழங்க அனுமதிக்கிறது மேலும் தாக்கத்தை அதிகரிக்கவும் வாய்ப்புள்ள அபாயங்களைக் குறைக்கவும் தேவைக்கு ஏற்ப கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளை மாற்றியமைக்கிறது. தற்போது மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்கு ஆதரவளிக்க, காலப்போக்கில் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளைக் கண்காணிப்பதற்கான ஒரு தரவு சேகரிப்புத் திட்டத்தை உருவாக்குவது சிறந்த நடைமுறையாகும்.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
திட்டத்திலும் கொள்கையை இணைந்து-உருவாக்கும் செயல்முறையிலும் சமூகமக்கள் ஈடுபாட்டின் ஒரு தொடர்ச்சியாக சமூகமக்களின் பின்னூட்டத்தைக் கோருதல் (சமூக உறுப்பினர்களிடம் இருந்து நேரடியாக அல்லது பங்காளர் நிறுவனங்களின் மூலமாக).
-
திட்டம் அல்லது கொள்கையின் தாக்கங்களை அளவிடுவதற்கு வெப்பநிலை குறைதல், அல்பேடோ அதிகரித்தல், மர விதானம், மற்றும் சுகாதாரப் பலன்கள் போன்ற முக்கியமான செயல்திறன் குறிகாட்டிகளைக் கண்காணித்தல்.
-
தரவு காட்சிப்படுத்துதல் மற்றும் உரைச்சுருக்கங்கள் மூலமாக திட்டம் அல்லது கொள்கைகளின் வெற்றியை மதிப்பிடுவதற்காக சேகரிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்துதல்.
-
பொதுமக்கள் மற்றும் இதர பங்குதாரர்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கவும் அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கவும் குறிப்பிட்ட கால இடைவேளையில் திட்டத்தின் வளர்ச்சி குறித்து வெளிப்படையாக அறிவித்தல்.
வெளிப்பாடுகள்
-
முக்கிய செயல்திறன் குறிகாட்டு ஆவணமாக்கல்.
பலன்கள்
-
ஒரு அடிப்படை மதிப்பீட்டை எப்படி நடத்துவது என்பதைக் கற்றல்.
-
முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை அடையாளம் காணுதல்.
-
ஒரு தரவு சேகரிப்புத் திட்டத்தை உருவாக்குதல்.
-
செய்திகள் வழங்கும் முயற்சிகளின் வெற்றியை எப்படி மதிப்பிடுவது என்பதைத் தெரிந்துகொள்ளுதல்.
-
ஒரு வெப்ப அலையைத் தொடர்ந்து ஒரு நடவடிக்கைக்குப்-பிந்தைய மதிப்பாய்வை எப்படி நடத்துவது என்பதை முடிவுசெய்தல்.
கண்ணோட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக முழுமையான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
வெப்ப மீள்திறனை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்
திட்டப்பணிகள் மற்றும் கொள்கைகளை கண்காணித்தல் வெப்பத் தாக்கங்களைக் குறைப்பதில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தோல்விகளையும், அத்துடன் திட்டத்தின் எந்த அம்சங்களுக்கு கூடுதல் விரிவாக்கம் அல்லது முதலீடு தேவை என்பதையும் வெளிப்படுத்துகிறது. திட்டப்பணியின் செயல்திறனை விரிவாக்கம் செய்ய, நீட்டிக்க, அல்லது நிரூபிக்க விரும்பினால், சமூக உறுப்பினர்களை உள்ளடக்குதல் மற்றும் ஈடுபடக்செய்தல், ஒரு திட்டத்தை இணையாக-உருவாக்கும் செயல்முறையைப் பின்பற்றுதல் மற்றும் தரம்சார்ந்த மற்றும் எண் சார்ந்த தரவை சேகரித்தல் ஆகியவை அத்தியாவசியமான ஒரு படிநிலையாகும்.
திட்டப்பணிக்கான நிதி ஆதாரத்தின் அடிப்படையில், திட்டத்திற்கான பட்ஜெட் மற்றும் தாக்கம் பற்றிய தகவல் அளவிடப்பட்டு நிதி அதரவு வழங்குவோருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். கூடுதலாக, கொள்கையை உருவாக்குவோரும் தொழில் புரிவோரும், அவ்வப்போது வெப்பம் சார்ந்த திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கு அரசியல் மூலதனத்தை ஆரம்பிப்பார்கள். திட்டங்களின் செயல்திறன்களை செயல்விளக்கமாக காண்பிப்பதும் அதை தெரிவிப்பதும் அரசுத் தலைவர்களுக்கு பிரபலமாக இருப்பதற்கான ஆதரவையும் அரசியல் மூலதனத்தையும் அதிகரிக்கக்கூடும்.
வளங்கள்
செயல்படுத்துதலைக் கண்காணித்தல்
- உலகெங்கும்
பருவநிலை செயல் திட்டங்களைச் செயல்படுத்துதலைக் கண்காணிப்பதில் வழிகாட்டுதலுக்கு, சி40இன் கட்டமைப்பு, தொழில்நுட்ப ஆதாரங்கள், மற்றும் உதாரண ஆய்வுகளை ஆராயவும்.
நகர்புற தகவமைத்தல் ஆதரவுக் கருவி: தகவமைத்தலைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்
- ஐரோப்பா
தனிநபர் தகவமைத்தல் நடவடிக்கைகளைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுவதில் வழிகாட்டுதலுக்கு, பருவநிலை ADAPT இன் நகர்புற தகவமைத்தல் ஆதரவுக் கருவியை ஆராயவும்.
சமூக மக்கள்-அடிப்படையிலான தகவமைத்தலின் பங்கேற்புடன் கூடிய கண்காணிப்பு, மதிப்பீடு, பிரதிபலிப்பு மற்றும் கற்றல்
- உலகெங்கும்
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்கான ஒரு பங்கேற்புடன் கூடிய அணுகுமுறையை வடிவமைத்தல் மற்றும் செயல்படுத்துவதில் வழிகாட்டுதலைப் பெறுவதற்கு, CARE வழங்கும் சமூக மக்கள்-அடிப்படையிலான தகவமைத்தலின் பங்கேற்புடன் கூடிய கண்காணிப்பு, மதிப்பீடு, பிரதிபலிப்பு மற்றும் கற்றலைப் பாருங்கள்.
தொடர்ந்து-வளர்ந்து வரும் திட்டப்பணி அல்லது கொள்கைச் சூழ்நிலையில் கண்காணிப்பு என்பது தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல்முறையாகும், அதேவேளை மதிப்பீடுகள் என்பது குறிப்பிட்ட கால இடைவேளையில் திட்டத்தின் உள்ளோக்க மற்றும் உள்நோக்கமற்ற தாக்கத்தை ஒரு ஆழமான நிலையில் மதிப்பிடும் முறையாகும். ஒரு திட்டப்பணி அல்லது கொள்கை செயல்படுத்தப்படுகின்ற பின்னணியை மக்கள்தொகையியல் மாற்றம், பருவநிலையில் எதிர்பாராத மாற்றங்கள், மற்றும் இதர காரணிகள் கடுமையாக மாற்றியமைக்க முடியும். பெரும்பாலும் திட்டப்பணிகளின் தாக்கங்கள் காலப்போக்கில் வளர்ச்சியடையும் மேலும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்கு (M&E) ஒரு தொடர்ச்சியான அணுகுமுறையைக் கொண்டிருப்பது குறுகிய மற்றும் நடுத்தர காலக்கட்டத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பிரதிபலிக்கும்.
ஒரு கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு செயல்முறையை வடிவமைத்தல்
கண்காணிப்பிற்கான ஒரு தெளிவான காலக்கட்டத்தையும் (தினசரி, வாராந்தம், மாதாந்தம் போன்றவை), உங்களது பங்குதாரர்களுக்கு எந்த வெற்றி அளவீடுகள் அவசியமானவை, மற்றும் அத்தகைய குறிகாட்டிகளைக் கண்காணிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் யார் பொறுப்பாவார்கள் போன்றவற்றை தெளிவாக உறுதி செய்திடுங்கள். வெற்றிக்கான அளவீடுகள் என்பது திட்டப்பணி அல்லது கொள்கையினால் அதிகமாக பாதிக்கப்படக்கூடிய சமூக உறுப்பினர்கள் முதன்மைப்படுத்துகின்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டும், அத்துடன் நிதி வழங்குவோரின் ஏதேனும் தேவைகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். நீண்ட-கால திட்டப்பணிகளுக்கு, காலாண்டு அல்லது ஆண்டு அறிக்கைகள் பயனளிக்கலாம் அல்லது நிதி வழங்குவோர் மூலமாக கோரப்படலாம். இந்த M&E திட்டம் என்பது உங்களது திறன் மற்றும் வளங்கள் எந்த அளவுக்கு அனுமதிக்கிறதோ அந்த அளவுக்கு வலுவானதாகவும் விரிவாகவும் இருக்கலாம்.
வளங்கள்
தேசிய பருவநிலை மாற்ற நடவடிக்கைக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறையின் கட்டமைப்பு
- தென்னாப்பிரிக்கா
தென்னாப்பிரிக்க குடியரசு எப்படி M&E-யை நடத்துகிறது என்பது குறித்த ஒரு உதாரணத்திற்கு, அதன் தேசிய பருவநிலை மாற்ற நடவடிக்கைக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு முறையின் கட்டமைப்பின் 11-14 பக்கங்களைப் பாருங்கள்.
நகர மீள்திறன் கருவித்தொகுதி
- இந்தியா
அகமதாபாத் நகரம் அதன் வெப்பச் செயல்திட்டத்தை எப்படி கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, மற்ற நிறுவனங்களுடன் இணைந்து தேசிய வளப் பாதுகாப்பு குழு, மற்றும் பருவநிலை மற்றும் மேம்பாட்டு அறிவுக் கூட்டமைப்பு ஆகியோரின் கூட்டமைப்பில் தயாரிக்கப்பட்ட நகர மீள்திறன் கருவித்தொகுதியின் 15-17 பக்கங்களைப் பாருங்கள்.
கண்காணித்தல் மற்றும் அறிக்கையளித்தல்
- ஆஸ்திரேலியா
பெருநகர சிட்னிக்கான ஒரு நீடித்த திட்டத்தை செயல்படுத்துவதை சிட்னி நகரம் எப்படிக் கண்காணிக்கிறது என்பதற்கான ஒரு உதாரணத்திற்கு, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸின் பெருநகர நகரங்களுக்கான ஆணைக்குழுவின் கண்காணித்தல் மற்றும் அறிக்கையளித்தல் பக்கத்தைப் பாருங்கள்.
M&E இன் வெளிப்பாடுகளைப் பயன்படுத்துதல்
இந்த வெளிப்பாடுகள் கொள்கை அல்லது திட்டப்பணியின் வெற்றியை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும். இது அரசுத் தலைவர்கள் அல்லது பொதுமக்களுக்கான ஒரு அறிக்கையில் முறைப்படுத்தப்படும். இந்த திட்டப்பணியில் எது வெற்றிகரமாக இருந்தது எதை மேம்படுத்த முடியும் என்பது உள்பட கற்ற பாடங்களை அடிப்படையாகக் கொண்டு மேம்படுத்துவதற்கு, எதிர்கால நடவடிக்கைகளைத் தெரிவிப்பதற்காகவும் இது பயன்படுத்தப்பட வேண்டும். நீங்கள் இந்த திட்டப்பணியை ஒரு பகுதியில் செயல்படுத்தப்பட்ட முன்மாதித் திட்ட நிலையில் இருந்து ஒரு நகர் முழுவதற்கும் மாற்றுவது போன்ற விரிவாக்கம் செய்ய விரும்பினால், இந்த வெளிப்பாடுகள் விரிவாக்கத்தை தெரிவிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
M&E வெளிப்பாடுகளை பயன்படுத்துவது குறித்த வளங்கள்
கராச்சியில் வெப்ப எச்சரிக்கை
- இந்தியா
வெப்ப எச்சரிக்கை தகவல்தொடர்பைச் சுற்றி அமைந்துள்ள தகவல்தொடர்பு எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருந்துள்ளது என்பதை மதிப்பீடு செய்வதற்கு M&E முறையை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த ஒரு பரிசோதனைக்கு, பாக்கிஸ்தானின் கராச்சியில், START கூட்டமைப்பு மற்றும் இதரப் பங்காளர்கள் சம்மந்தமான ஒரு முன்மாதிரித் திட்டப்பணி தொடர்பான உதாரணத்திற்கு பக்கம் 18ஐ பாருங்கள்.
அரிசோனாவில் உள்ள குளிர்வித்தல் மையங்களின் மதிப்பீடு
- United States
அமெரிக்காவின் அரிசோனாவில் நீண்ட காலப் பயன்பாட்டில் குளிர்வித்தல் மையங்கள் எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு உதாரணத்திற்கு, 2017 இல் அமெரிக்க வானிலையியல் சங்கத்தினால் பெரிஷா மற்றும் பலரால் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையின் 9-10 பக்கங்களைப் பாருங்கள்.
உலக அளவில் தகவமைத்தல் முதலீடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் காட்சி
- Global
M&E பருவநிலை நிதி சம்மந்தமான நடவடிக்கைகளை தற்போதுள்ள M&E கட்டமைப்புகளுக்குள் எப்படி ஒருங்கிணைப்பது என்பதற்கு, பருவநிலை கொள்கை முயற்சியினால் தயாரிக்கப்பட்ட உலக அளவில் தகவமைத்தல் முதலீடு மற்றும் கண்காணிப்பு முறைகளின் 11ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
வெப்ப மீள்திறன் நடவடிக்கைகளை சிறப்பாக கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதில் உள்ள பொதுவான சவால்கள்
M&E என்பது காலம்-ஆகக்கூடியதாக மேலும் சிலநேரங்களில் குறிப்பிடும்படியான பணியாளர் வேலை செய்யும் தேவை உள்ளதாகவும் இருக்கக்கூடும். M&E செயல்முறையின் போது தலைமை மாறினால், தேவையான முதலீட்டினை ஏற்பது குறையலாம். உறுதியான M&E செயல்முறைகளை உருவாக்குவது இந்த கொள்கைகளின் பலனை விளக்குவதற்கு குறிப்பிடும்படியான அளவு தரவுகள் சேகரிக்கப்படுவதையும் புதிய தலைமைக்கு வழங்கப்படுவதையும் உறுதிசெய்கிறது. கூடுதலாக, வெற்றிக்கான கால அளவு என்பது வெளிப்புற அதிகாரங்கள் விரும்புவதைக் காட்டிலும் நீண்டதாக இருக்கலாம் மேலும் இதைப் பின்பற்றி நடத்துவது ஒரு சவாலாக இருக்கக்கூடும். M&E திட்டங்கள் திருத்தப்பட வேண்டிய தேவை இருக்கலாம். நெகிழ்வுத் தன்மையுடனும் தகவமைக்கக் கூடிய வகையிலும் இருப்பது ஒரு நிலையான வழியில் திட்டங்களைக் கண்காணிக்க உங்களுக்கு உதவும், மேலும் உங்களது பணி ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்யும்.