நோக்கம்
ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை மேற்கொள்ளுதல் என்ற பாடத்திட்டத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! இந்த பாடத்திட்டம் கடுமையான வெப்பத்தினால் உள்ளூர் பகுதிகளில் ஏற்படும் தாக்கங்களை புரிந்துகொள்வதற்கான உங்களது முதல் படிநிலைகளை வழங்குகிறது.இது வெப்ப மீள்திறனுக்கான திட்டமிடுதல், ஆதரவு திரட்டுதல், மற்றும் முதலீடு ஆகியவற்றைப் பற்றி தெரிவிக்க தற்போதுள்ள சூழ்நிலைகளை நீங்கள் புரிந்துகொள்ளவும், அவற்றின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் உங்களுக்கு உதவும்.
இந்த பாடத்திட்டத்திலுள்ள அத்தியாவசிய நடவடிக்கைகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள்
நடவடிக்கைகள்
-
உங்களது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் எதிர்காலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள வெப்பநிலைகள் (எ.கா 20 அல்லது 50 ஆண்டுகளில்), வெப்ப காலம் மற்றும் அதன் குணாதிசயங்கள், மற்றும் வெப்ப அலைகளின் வகைகள், அத்துடன் வெப்பத் தாக்கங்களுடன் பாதிப்பை அதிகரிக்கக்கூடிய இதர உள்ளூர் பருவநிலைப் பிரச்சனைகள் (புயல்கள், வறட்சி, காட்டுத்தீ) ஆகிய வெப்பநிலைப் போக்குகளை அடையாளம் காணுதல்.
-
முடிந்தால் உள்ளூர் நிலப்பரப்பு சம்மந்தமான வெப்பநிலை சார்ந்த நம்பகமான தரவை அடையாளம் கண்டு (பகல்நேர மற்றும் இரவுநேர காற்று வெப்பநிலைகள் சிறப்பானது; மாற்றாக, மதிப்பிடப்பட்ட நிலத்தின் மேற்பரப்பு வெப்பநிலை) முக்கியமான பகுதிகளை இனம் காணுதல்.
-
வெப்பம்- சார்ந்த அறிவு, வளங்கள் அல்லது வெப்பம்- பாதித்த சமூக மக்களிடம் தற்போதுள்ள உறவுகள்/பகிரப்பட்ட நம்பிக்கை கொண்ட உள்ளூர் பங்குதாரர்களை அடையாளம் காணுதல்.
வெளிப்பாடுகள்
-
உங்களது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் வெப்பநிலைப் போக்குகள் மற்றும் வெப்பத்தின் தன்மைகள் ஆகியவற்றைப் பற்றிய ஒரு மதிப்பாய்வு. முடிந்தால், வெப்பநிலை மற்றும் மக்கள்தொகை விநியோகம் ஆகிய இரண்டையும் காட்டும் ஒரு வரைபடம்.
-
வெப்பம்- சார்ந்த மதிப்பீடுகள், திட்டமிடுதல், மற்றும் திட்டப்பணிகள் ஆகியவற்றை இணைந்து உருவாக்குவதற்கு பொருத்தமான பங்காளர்களின் ஒரு பட்டியல்.
பலன்கள்
-
கிடைக்கக்கூடிய வெப்பம் சார்ந்த தரவு அடையாளம் காணப்படும்.
-
உங்களது அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீதான கடுமையான வெப்பத்தின் தாக்கங்கள் விவரிக்கப்படும்.
-
உங்களது அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வெப்பத்தின் தாக்கங்களைக் கையாள்வதற்கு ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மற்றும் அதனால் பயனடைந்த பகுதிகள் மற்றும் மக்கள்தொகை ஆகியோர் அடையாளம் காணப்படுவர்.
-
இந்த செயல்களுக்கு பங்களிப்பு வழங்கும் மற்றும் ஈடுபாடு காட்டும் முக்கிய பங்காளர்கள் அடையாளம் காணப்படுவர்.
கண்ணோட்டம்
வெளிப்பாடுகள், மற்றும் பலன்கள் இந்த பாடத்திட்டத்தின் மீதமுள்ள பகுதி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ள அதிக முழுமையான அணுகுமுறையின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாகும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கையின் விரிவான மற்றும் ஆழமான நிலையை நேரம், வளங்கள் மற்றும் திறன் ஆகியவைதான் கட்டுப்படுத்துகிறது என்று எங்களுக்குத் தெரியும். இந்த பாடத்திட்டங்களை ஆராயத் துவங்குவதும் உங்களது சூழ்நிலைக்கு எந்த தீர்வுகள் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருதுவதும் உங்களது பகுதியின் வெப்ப மீள்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படிநிலையாகும். எந்த நிலையிலும், கேள்விகள் மற்றும் கருத்துகள் இருந்தால் இந்த பக்கத்தின் அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்புப் படிவத்தைப் பயன்படுத்தி அர்ஷ்ட்-ராக்கைத் தொடர்புகொள்ளுங்கள்.
முக்கிய காரணிகள்
மிகக்கடுமையான வெப்பத்திற்கு ஆட்படுவது, அதன் அளவு, மற்றும் அடுக்கு நிகழ்வு ஆகியவை பல்வேறு வகையான காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது, அவற்றில் உள்ளடங்குபவை:
- அந்த பகுதியின் பூகோல தன்மைகள். உதாரணமாக, நகரின் மக்கள்தொகை அடர்த்தி, அந்த பகுதியின் நிலத்தோற்றப் பின்னணி, தண்ணீர் வளங்கள், காற்றுத் தன்மைகள், மற்றும் கட்டிட வகை, கட்டிட அமைப்பு, மற்றும் திசையமைப்பு போன்றவை.
- உள்ளூர் மற்றும் பிராந்திய பருவநிலை. அந்தப் பகுதி வெப்பம்-தொடர்பான அபாயங்களை மேலும் அதிகரிக்கக்கூடிய புயல்கள், வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டுத்தீ போன்றவை உள்ளிட்ட கூட்டு அபாயங்களை எதிர்கொள்ளலாம்.
- தற்போதுள்ள பசுமை மற்றும் நீல கட்டமைப்பு. சில பகுதிகள் வெப்ப அலைகளுக்கு அதிகமாக பாதிக்கப் படக்கூடிய நிலையில் இருக்கக்கூடும் ஏனெனில் அங்கே குளிர்ச்சியை வழங்கக்கூடிய இயற்கை அமைப்புகள் இல்லாமல் இருக்கலாம்.
- கட்டமைப்பின் அல்பேடோ (அதாவது சூரிய ஒளியை பிரதிபலித்திடும் திறன்). சாலைகள், மேற்கூரைகள் மற்றும் அதர மேற்பரப்புகளில் உள்ள பொருட்கள் மற்றவற்றைக் காட்டிலும் குறைவான அல்பேடோவைக் கொண்டிருக்கும் (மேலும் அதிக வெப்பத்தை கிரகித்துக்கொள்ளும்), இது உள்ளூர் வெப்பநிலைகளை பாதிக்கிறது.
- இயந்திர குளிர்விப்பு மற்றும் வாகனங்களின் பயன்பாடு. வாகனங்கள் மற்றும் ஏர் கண்டிஷனர்களில் இருந்து வெளியேறும் கழிவு வெப்பம் நகர்புற வெப்பத் தீவு பாதிப்பை மோசமாக்கக் கூடும்.
கூடுதலாக, ஒரு அடிப்படை அபாய மதிப்பீட்டை மேற்கொள்ளும் போது, இவற்றை கவனத்திக் கொள்ளவும்
- கூட்டாக செயல்படக்கூடிய சமூக மக்களின் ஆற்றல் மற்றும் மிகக்கடுமையான வெப்பம் சார்ந்த தலைப்பில் தற்போதைய ஆர்வம்.
- அரசு கட்டமைப்பு மற்றும் கொள்கை நிலவரம். உங்களது உள்ளூர் அரசு எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து உள்ளது (எ.கா. ஒவ்வொரு அமைப்பின் மூலமாக பணம் செலுத்தப்படுதல்), எங்கே அரசுக்கு செயல்படுவதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது, மேலும் வெப்பம் மற்றும்/ அல்லது பருவநிலை மாற்றம் தொடர்பான ஏதேனும் தற்போதைய உள்ளூர், பிராந்திய அல்லது தேசிய நடவடிக்கைகள் உள்ளதா போன்றவை.
- தரவு கிடைக்கும் வாய்ப்பு, முன்பே இது தொடர்பாக எடுக்கப்பட்ட முயற்சிகள், மற்றும் வாய்ப்புள்ள பங்குதாரர்களுடன் தற்போதுள்ள கூட்டணி.
- வாழ்விடம், சமுதாய/கலாச்சார, அல்லது பொருளாதார காரணிகளின் காரணமாக வெப்பம் சார்ந்த நலிவுநிலை. இந்த தலைப்பை மேலும் ஆராய்வதற்கு வெப்பம்-சார்ந்த நலிவுநிலைகள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காணுதல் பகுதியைப் பார்க்கவும்.
வளங்கள்
வெப்பத்திற்கான மீள்திறன் மதிப்பெண் பட்டியலுக்காக திட்ட ஒருங்கிணைப்பு
- அமெரிக்கா
தற்போதுள்ள நகரின் திட்டங்களுக்கு ஊடாக வெப்பம்-தொடர்பான கொள்கைகள் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதை மதிப்பாய்வு செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு செயல்முறையைப் பற்றிய ஒரு உதாரணத்திற்கு, கெய்த் மற்றும் பலர் மூலமாக உருவாக்கப்பட்ட வெப்பத்திற்கான மீள்திறன் மதிப்பெண் பட்டியலுக்காக திட்ட ஒருங்கிணைப்பு பகுதியைப் பாருங்கள். (2022).
வெப்பத்தை வெற்றிகொள்ளுதல்: நகரங்களுக்கான ஒரு நிலையான குளிர்வித்தல் கைப்புத்தகம்
- உலகெங்கும்
ஒரு அடிப்படை மதிப்பீட்டை உருவாக்குவதன் நோக்கங்கள் மற்றும் முக்கிய காரணிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு குளிர்ச்சிக் கூட்டணி, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம், ஆர்.எம்.ஐ, பருவநிலை மற்றும் மின்சக்திக்கான மேயர்களின் உலகளாவிய உடன்படிக்கை, மிஷன் இனோவேஷன், மற்றும் சுத்தமான குளிர்வித்தல் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெப்பத்தை வெற்றிகொள்ளுதல் கைப்புத்தகத்தின் 59-62 பக்கங்களைப் பார்க்கவும்.
உங்களது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் வெப்பநிலைகளை ஆராய்தல்
தற்போதைய மற்றும் எதிர்கால வெப்பநிலை மற்றும் வெப்பநிலைப் பகிர்வு ஆகியவற்றை மாறத்தக்க செலவினம், தொழில்நுட்ப சிக்கல், மற்றும் தரவுத் தேவைகளுடன் ஆராய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. பொதுவான அணுகுமுறைகளில் உள்ளடங்குபவை:
- ஒவ்வொரு ஆண்டும் ஒரு அதிகபட்ச வரம்பினைத் தாண்டுகின்ற பகல்நேர வெப்பநிலையை எத்தனை நாட்களுக்கு உங்கள் சமூகம் எதிர்கொள்கிறது என்பதைக் கணக்கிடுதல். இது நடவடிக்கை எடுப்பதற்கான மற்றும் முதலீட்டிற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கக்கூடும்.
- அருகில் உள்ள நகர்புறமற்ற பகுதிகளில் காணப்படும் வெப்பநிலைகளை உங்களது அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளதுடன் ஒப்பிட்டு நகர்புற வெப்பத் தீவை மதிப்பாய்வு செய்தல். இது உங்களது நகரில் கட்டிட சூழ்நிலையும் இதர காரணிகளும் வெப்ப பாதிப்பினை ஏற்படுத்துகின்றன என்பதை வெளிப்படுத்தக்கூடும்.
- எந்த அண்டைப் பகுதிகள் அதிக வெப்பமானதாக அல்லது குளிர்ச்சியானதாக இருக்கிறது என்பதை மதிப்பிட வெப்ப விநியோகத்தை மதிப்பாய்வு செய்தல். வெப்ப பாதிப்புகள் எங்கே மிகவும் கடுமையாக உள்ளது என்பதை இது வெளிப்படுத்தும் மேலும் வெப்ப மீள்திறன் முதலீடுகளுக்கு வழிகாட்ட ஆரம்பிக்கக்கூடும்.
வெப்ப பாதிப்பு மற்றும் நலிவு நிலையை மேலும் ஆழமாக புரிந்துகொள்ளவும் வெப்ப மீள்திறன் முதலீடுகளுக்கான முன்னுரிமைகளை அடையாளம் காணவும், நீங்கள் செய்யக்கூடியது:
- மக்கள்தொகை அல்லது வெப்பம்-சார்ந்த நலிவுநிலைகள் தரவுடன் வெப்ப வரைபடங்களை ஒன்றிணைத்தல் (வெப்பம்-சார்ந்த நலிவுநிலைகள் மற்றும் தாக்கங்களை அடையாளம் காணுதல் பகுதியைப் பாருங்கள்).
- பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களின் விழிப்புணர்வு (வெப்ப அபாய விழிப்புணர்வை மதிப்பிடுதல் பகுதியைப் பார்க்கவும்) மற்றும் பொருளாதாரம், கட்டமைப்பு, மற்றும் மக்களின் ஆரோக்கியம் ஆகியவை உள்பட இதர தாக்கங்களை மதிப்பிடுதல்.
உங்களது பகுதிகளுக்கான இந்த மதிப்பாய்வுகள் யாவும் ஏற்கெனவே ஆராய்ச்சியாளர்கள் அல்லது தொண்டு நிறுவனங்களால் செய்யப்பட்டிருக்கலாம். அவ்வாறு இல்லை என்றால், இந்த ஆய்வுகளை நடத்துகின்ற அல்லது ஆய்வுகளை மதிப்பாய்வு செய்யக்கூடிய சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப திறன் அல்லது உள்ளூரைப் பற்றிய அறிவுடைய அமைப்புகள் அல்லது நிறுவனங்களுடன் கூட்டணி அமைப்பது குறித்து சிந்திக்கவும். நீங்கள் ஆரம்பத்தில் ஒரு முதலீடு-குறைவான அணுகுமுறையை எடுத்து அதன்பின் வளங்கள் மற்றும் திறன் போதுமான அளவுக்கு கிடைக்கும் சமயத்தில் அதிக தரவு-சம்மந்தப்பட்ட மதிப்பாய்வுகளை மேற்கொள்வது குறித்து சிந்திக்கலாம்.
வளங்கள்
நகர்புற வெப்ப வரைபடமாக்கல் கட்டமைப்பு
- அமெரிக்கா
வெப்ப வரைபடமாக்கல் அணுகுமுறைகள், தொழில்நுட்பங்கள் மற்றும் பரிசீலனைகளின் ஒரு தொழில்புரிவோர்-சம்மந்தமான கண்ணோட்டத்திற்கு, அர்ஷ்ட்-ராக்கின் நகர்புற வெப்ப வரைபடமாக்கல் கட்டமைப்பைப் பார்க்கவும்.
வெப்பத் தீவுகளை அளவிடுதல்
- அமெரிக்கா
நகர்புற வெப்பத் தீவுகளை எப்படி அளவிடுவது என்பது குறித்த ஒரு கண்ணோட்டத்திற்கு, அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் வெப்பத் தீவுகளை அளவிடுதல் இணையப் பக்கத்தைப் பாருங்கள்.
இதேக்வினி பருவநிலைத் தாக்க வரைபடங்கள்
- தென்னாப்பிரிக்கா
இதேக்வினியில் (தென்னாப்பிரிக்கா) வெப்ப அழுத்தத்தின் ஒரு கதை வரைபடத்திற்கு, இதேக்வினியுடன் சி40 நகரங்கள் மூலமாக அமைக்கப்பட்ட, மற்றும் பருவநிலை தகவமைத்தல் சேவைகள் மூலமாக உருவாக்கப்பட்ட பருவநிலை தாக்க வரைபடங்களைப் பாருங்கள்.
இரண்டு வெப்ப மண்டல நகரங்களில் வெப்ப வரைபடங்களை உருவாக்கியதில் இருந்து பெற்ற பாடங்கள்
- உலகெங்கும்
ஃப்ரீடவுன் (சியாரா லியோன்) மற்றும் ரியோ டி ஜெனிரோ (பிரேஸில்) ஆகிய நகரங்கள் நகரின் வெப்பநிலைகளைக் குறிப்பதற்கு பங்கேற்பு முறையிலான வரைபட தயாரிப்பு முறைகளை எப்படிப் பயன்படுத்தின என்பதைப் பற்றிய ஒரு தொகுப்பிற்கு, அமெரிக்க தேசிய ஓசியானிக் மற்றும் காற்றுமண்டல நிர்வாகத்தின் மூலமாக வழங்கப்பட்ட இரண்டு வெப்ப மண்டல நகரங்களில் வெப்ப வரைபடங்களை உருவாக்கியதில் இருந்து பெற்ற பாடங்களைப் பாருங்கள்.
பாஸ்டனின் வெப்பத்திற்கு மீள்திறன் தீர்வுகள் திட்டம்
- அமெரிக்கா
உத்தேசிக்கப்பட்ட வெப்ப நாட்கள் மற்றும் பகல்நேர மற்றும் இதரவுநேர வெப்பநிலைக்கான நகர-அளவிலான வரைபடங்களுக்கான ஒரு உதாரணத்திற்கு பாஸ்டன் (அமெரிக்கா) நகரின் திட்டமான வெப்பத்திற்கு மீள்திறன் தீர்வுகளைப் பாருங்கள்.
தரவு வளங்களை அடையாளம் காணுதல்
உங்களது பகுதிக்கான வெப்பம்- சார்ந்த மதிப்பாய்வுகள் இல்லை என்றால் அல்லது போதுமானதாக இல்லை என்றால், நீங்கள் புதிய வெப்பம் மற்றும் ஆரோக்கியம்- சார்ந்த தரவுத்தொகுப்புகளைக் கண்டறிய அல்லது உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அடிப்படை வெப்பநிலைத் தரவு என்பது பெரும்பாலும் பொதுவெளியில் இருந்தாலும், அதிக பகுத்தறியத் தக்க தரவு மற்றும் முடிவு எடுப்பதற்கு அதிக உதவிகரமாக இருக்கக்கூடிய தரவு என்பது பெரும்பாலும் அதிக செலவாவதாக அல்லது கண்டறிவது கடினமானதாக இருக்கும்.
உதாரணமாக, இலவசமான அல்லது குறைந்த- செலவாகக்கூடிய நிலத்தின் மேற்பரப்பு வெப்பநிலை தரவுத் தொகுப்புகளைக் (பூமியின் மேற்பரப்பு எவ்வளவு வெப்பமாக இருக்கிறது என்கின்ற அளவு) கண்டறிவது சுலபமானதாக இருக்கலாம், ஆனால் மக்கள் எத்தகைய வெப்பநிலையை உணர்கிறார்கள் என்பது குறித்த துல்லியமான ஒரு அளவை அது வழங்காது, ஆகையால் அந்த தரவுகள் முடிவுகள்- எடுப்பவர்களுக்கு அதிக பயனளிக்காது. மக்களால் உணரப்படுகின்ற வெப்பநிலைகளுக்கான (மற்றும் அதன் காரணமாக வாய்ப்புள்ள சுகாதாரத் தாக்கங்களைப் பற்றிய) ஒரு மிகவும் துல்லியமான அளவான காற்று வெப்பநிலை தரவைக் கண்டறிவது மிகவும் கடினமாகும்.
முக்கிய தரவு வகைகளில் உள்ளடங்குபவை:
- வெப்பநிலை (பகல் நேர மற்றும் இரவு நேர, நில மேற்பரப்பு அல்லது காற்று வெப்பநிலை)
- ஈரப்பதம் (ஒப்பு ஈரப்பதம் அல்லது நீர்த்துளியாகும் நிலை)
- சுகாதாரம் (வெப்பத்தால்-தூண்டப்பட்ட அல்லது அனைத்துக்-காரணத்தாலும் ஏற்படும் மருத்துவமனை வருகைகள், வெப்ப நோய்கள் மற்றும் மரணங்கள்)
- மக்கள்தொகையியல் (மக்கள்தொகைப் பகிர்வு, வயது, வருமானம்)
- நிலப்பரப்பு (எ.கா. மரங்கள், மண், கான்கிரீட், கட்டிடங்கள்)
- அல்பேடோ
வளங்கள்
ஆபத்தை சிந்தியுங்கள்!
- உலகெங்கும்
உலகெங்கும் உள்ள வெப்ப அபாயத்தைப் பற்றிய பிராந்திய தரவிற்கு, பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய மையத்தின் அபாயத்தை சிந்தியுங்கள்! (திங்க் ஹஸார்டு) இணையத்தில் தேடுங்கள். இந்த கருவி ஒரு பகுதிக்குள் அடுத்த ஐந்தாண்டுகளில் மிகக்கடுமையான வெப்பத்திற்கு தொடர்ச்சியாக ஆட்படக்கூடிய வாய்ப்பை மாதிரியாக விளக்கும் மேலும் உத்தேசிக்கப்பட்ட வெப்பநிலை அதிகரிப்பையும் விவரிக்கும்.
பருவநிலைத் தாக்க வரைபடம்
- அமெரிக்கா
அடுத்த இருபது ஆண்டுகள், நூற்றாண்டின்-மையப்பகுதி, மற்றும் நூற்றாண்டின் முடிவு ஆகியவற்றில் உலகெங்கும் பிரதிநிச் செறிவுப் பாதைச் (RCP) சூழ்நிலைகளில் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றத்தை காட்சிப்படுத்த, பருவநிலைத் தாக்க வரைபடத்தைப் பாருங்கள். பருவநிலைத் தாக்க ஆய்வகத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட இந்த வரைபடம் RCPக்களின் சூழ்நிலைகளைக் காண்பிக்கும், இது பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை உத்தேசிக்கும்.இந்த கருவி GDP-யின் அடிப்படையில் மின்னாற்றல் மற்றும் இறப்புச் செலவுகளை உத்தேசிக்கவும் உங்களை அனுமதிக்கிறது.
இனம் காணப்பட்டவை: உலகின் ஒவ்வொரு பகுதியும் எப்படி வெப்பமாகியுள்ளது – மேலும் தொடர்ந்து வெப்பமாகக் கூடும்
- அமெரிக்கா
உத்தேசிக்கப்பட்ட வெப்பநிலை அதிகரிப்பு குறித்த மேலும் ஒரு தெளிவான உலகளாவிய வரைபடத்தைப் பெற பாருங்கள், கார்பன் சுருக்கப் பகுப்பாய்வு இனம் காணப்பட்டவை: உலகின் ஒவ்வொரு பகுதியும் எப்படி வெப்பமாகியுள்ளது – மேலும் தொடர்ந்து வெப்பமாகக் கூடும்.
விதான நகர்புற வெப்பத் தீவை (CL-UHI) அளவிடுதல், மாதிரியாக்குதல் மற்றும் கண்காணித்தல் குறித்த வழிகாட்டுதல்
- உலகெங்கும்
விதான நகர்புற வெப்பத் தீவு தரவு சேகரிப்பு முறைகளுக்கான ஒரு தொழில்நுட்ப கண்ணோட்டத்திற்கு, உலக வானிலையியல் நிறுவனத்தின் விதான நகர்புற வெப்பத் தீவை (CL-UHI) அளவிடுதல், மாதிரியாக்குதல் மற்றும் கண்காணித்தல் குறித்த வழிகாட்டுதலின் அத்தியாயம் 5ஐ பாருங்கள்.
உங்கள் பங்குதாரர்களை அடையாளம் காணுதல்
கடுமையான வெப்பம் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புகள் மீது தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது. வெப்ப மீள்திறனை அதிகரிப்பதற்காக தனிப்பட்ட அணுகுமுறையைத் தவிர்ப்பதற்கு ஒருங்கிணைப்பு அவசியமாகும், அதைப்போலவே ஒரு முழுமையான அனைத்தையும் உள்ளடக்கிய அணுகுமுறைகளுக்கு மதிப்பளிக்கவும் அதை உறுதிசெய்யவும் பல்வேறு கண்ணோட்டங்களைக் கொண்ட பங்காளர்களிடையே செயல்முறைகளை உருவாக்குவதும் அவசியமாகும்.
வெப்ப மீள்திறன் திட்டங்களை உருவாக்குவதற்கான செயல்முறை மற்றும் உக்திகள் யாவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் ஒத்துழைப்புடன் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு பங்குதாரர்களை இனம் கண்டுகொள்வது என்பது முதல் படிநிலையாகும். இந்த தகவலைப் பயன்படுத்தி கூட்டாளிகளுடன் ஈடுபடுவதன் மூலமாக, பாதிக்கப்பட்ட சமூக மக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து அனுபவத்தைப் பெற முடியும். உங்களது பங்குதாரர்களை புரிந்துகொள்வதும் வெற்றியை அளவிடுவதற்கு எத்தகைய அளவீடுகள் பொருத்தமானது என்பதை அடையாளம் காண்பதற்கு உதவும் மேலும் பொருத்தமான தரவை சேகரிப்பதற்கு அந்த பங்காளர்களை ஈடுபடுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.
பங்குதாரர்களை இனம் காணுதல் என்பது உங்களது பணியில் ஆர்வம் உள்ள அல்லது அதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் வரம்பு மற்றும் பரவலையும் அத்துடன் உங்களது பணியின் தாக்கத்தை எதிர்கொள்ளக்கூடிய மக்களையும் கண்டறிகிறது. உங்களது இனம் காணுதல் செயல்முறை அவர்களது தேவைகள், கண்ணோட்டங்கள் மற்றும் திறன்களையும் ஆவணப்படுத்தக் கூடும். திட்டமிடுதல், செயல்படுத்துதல், மற்றும் திட்டத்திற்கு-பிந்தைய காலக்கட்டத்தின் பல்வேறு நிலைகளில் யாரெல்லாம் ஈடுபட வேண்டும் என்ற முடிவுகளைத் தெரிவிக்க இது உதவுகிறது.
தெளிவான பங்குதாரர் மதிப்பாய்வு மற்றும் ஈடுபாடு இல்லாமல், செயல்முறையின் ஒவ்வொரு படிநிலையிலும் யாரிடம் ஆலோசனை பெறப்பட வேண்டும் அல்லது இணைத்-தயாரிப்பு பங்காளராக யாரை அழைக்க வேண்டும் என்பதை ஒரு திட்டம் முழுமையாக கவனத்தில் கொள்ள முடியாது. இதன் விளைவாக முழுமையான பிரதிநிதித்தன்மை கொண்டதாக இல்லாத ஒருதலை பட்சமான பலன் ஏற்படலாம் அல்லது நீண்ட-கால வெற்றிக்கு தேவையான ஆதரவை அது பெறாமல் போகலாம்.
வளங்கள்
பசிபிக் பகுதிக்கான பங்கேற்புக் கருவிகள்
- பசிபிக் பகுதி
பங்குதாரர் மதிப்பாய்வு அணுகுமுறைகள் மற்றும் சொற்களஞ்சியத்தின் ஒரு கண்ணோட்டத்தைப் பெறுவதற்கு, ஆசிய வளர்ச்சி வங்கி உருவாக்கியுள்ள பசிபிக் பகுதிக்கான பங்கேற்புக் கருவிகளின் 17ஆம் பக்கத்தைப் பார்க்கவும்.
பங்குதாரர் இனம்காணுதல் செயல்முறையைத் துவங்குதல்
பங்குதாரர் இனம்காணுதல் அணுகுமுறைகள் என்பது அதிகமான பங்கேற்பு முறையைக் கொண்டது முதல் மேல்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கீழ்நோக்கி செயல்படுத்தப்படும் முறைகள் என பல்வேறு முறையில் செய்யப்படலாம். உங்களது இனம்காணுதல் செயல்முறையில் உங்களது நேரடி அணி அல்லது நிறுவனத்தை மட்டுமே பங்கேற்கச் செய்வது என்பது மேல்மட்டத்தில் முடிவு செய்யப்பட்டு கீழ்நோக்கி செயல்படுத்தும் முறையாகும் அதேவேளை குழுவாக சிந்தித்து கலந்துரையாடுதல் அல்லது ஒருவரிடமிருந்து மற்றொருவரை இனம்காணுதல் என்பது அதிக பங்கேற்பு முறையைக் கொண்ட அணுகுமுறையாகும். பங்குதாரர்களில் அதிகமானவர்கள் சேர்க்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு, உங்களது நோக்கத்திற்கு பொருந்தக்கூடிய இனம் காணுதல் பயிற்சிக்கான ஒது தெளிவான குறிக்கோளை நிர்ணயிக்கவும், அதாவது உங்களது நகருக்குள் சமூக மக்கள் நிலையிலான வெப்பத் தயார்படுத்துதலில் ஈடுபட்டுள்ள அமைப்புகளை மட்டுமே ஈடுபடுத்துதல் போன்றவை.
உங்களது திட்டத்திற்கு அவர்கள் எப்படி பொருத்தமாக இருப்பார்கள் மற்றும் இனம் காணுதல் பயிற்சியில் இருந்து உருவாகும் ஏதேனும் கோட்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களது பங்குதார்களுக்கு முன்னுரிமையளித்து வகைப்படுத்துங்கள். யாருடைய கருத்துக்கள் எல்லாம் கேட்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொண்டு அவர்களை ஈடுபடுத்துவதற்கான வழிகளைக் கண்டறியவும். இறுதியாக, பங்குதார்களுக்கு இடையே உள்ள உறவுகளை அடையாளம் கண்டு உங்களது பங்குதாரர் வரைபடத்திற்கான சூழ்நிலையை விளக்குங்கள்.
நீங்கள் ஈடுபடுத்தக்கூடிய முழுமையில்லாத பங்குதாரர்களின் பட்டியலில் இருப்பவை:
- சமூகங்கள்: நகரில் குடியிருப்போர், சமூகமக்கள்-அடிப்படையிலான நிறுவனங்கள், மற்றும் நம்பிக்கை-அடிப்படையிலான நிறுவனங்கள்.
- பொதுத் துறை: நகராட்சி அமைப்புகள், மற்றும் பிராந்திய மற்றும் தேசிய திட்டமிடுதல் அமைப்புகள்.
- தனியார் துறை: ஊடக நிறுவனங்கள், சுகாதார வல்லுனர்கள், மின்னாற்றலைத் திட்டமிடுவோர், தொழில்நுட்பம் வழங்குவோர், மூத்த குடிமக்கள் மையங்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு வழங்குவோர், மற்றும் கட்டுமானங்களை உருவாக்குவோர்.
- பல்கலைக்கழகங்கள்: உள்ளூர் அல்லது தேசிய நிறுவனங்களில் உள்ள ஆராய்ச்சியாளர்கள்.
உங்களது இனம் காணுதல் செயல்முறையின் போது அடையாளம் காணப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் உங்களது பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். உங்களது திட்டப்பணி அல்லது திட்டமிடுதல் செயல்முறை முழுவதும், ஆரம்பக்கட்ட பங்குதாரர் வரைபடத்திற்குச் சென்று எந்த பங்குதாரர்களை ஈடுபடுத்த வேண்டும், அவர்கள் எப்படி எப்போது ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை மதிப்பீடு செய்யுங்கள்.
வளங்கள்
பங்குதாரர்களை ஈடுபடுத்துதல்
- ஐரோப்பா
பங்குதாரர் மதிப்பாய்வு முறைகள் குறித்த ஒரு கண்ணோட்டத்திற்கு, RESIN கற்றல் மையத்தின் பங்குதாரர்களை ஈடுபடுத்துதல் பக்கத்தைப் பாருங்கள்.
நகர மீள்திறன் கருவித்தொகுதி
- இந்தியா
ஈடுபடுத்தக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட பங்குதாரர்களின் ஒரு பட்டியலுக்கு, மற்ற பங்காளர்களிடையே இயற்கை வளங்கள் பாதுகாப்புக் குழு, அகமதாபாத் நகரம், இந்தியா, மற்றும் பருவநிலை மற்றும் மேம்பாட்டு அறிவுக் கூட்டமைப்பு ஆகியோர் மூலமாக உருவாக்கப்பட்ட நகர மீள்திறன் கருவித்தொகுதியின் பக்கங்கள் 9- 10 ஆகியவற்றைப் பார்க்கவும்.
மிகக்கடுமையான வெப்பச் செயல்திட்டம்
- அமெரிக்கா
தனது மிகக்கடுமையான வெப்பச் செயல்திட்டத்தை உருவாக்கிய போது பங்குதாரர்களை ஈடுபடுத்துவதற்காக ஃப்ளோரிடாவின் மயாமி-டேட் மாகாணம் பின்பற்றிய செயல்முறைகளின் விளக்கத்தைப் பெற, திட்டத்தின் பக்கம் 7ஐ பார்க்கவும்.
நகரங்களுக்கான வெப்ப அலை வழிகாட்டி
- உலகெங்கும்
வெப்பம்- சார்ந்த பங்குதாரர்களின் ஒரு அதிக விவரிவான பட்டியலுக்கு, செஞ்சிலுவை செம்பிறை பருவநிலை மையத்தின் நகரங்களுக்கான வெப்ப அலை வழிகாட்டியின் பக்கங்கள் 24-27 ஐ பாருங்கள்.
தற்போதுள்ள திட்டங்கள், கொள்கைகள், மற்றும் செயல்முறைகளுடன் உங்களது பணியை ஒழுங்குபடுத்துதல்
பங்குதாரர் இனம்காணுதல் செயல்முறைக்கு இணையாக, வெப்ப மீள்திறன் தொடர்பான உங்களது பகுதியில் உள்ள திட்டப்பணிகளை அடையாளம் கண்டு அத்தகைய பங்குதாரர்களுடன் ஆரம்பநிலையிலேயே கூட்டணிகளை உருவாக்குங்கள். இவற்றில் மற்றவற்றுடன், ஆரம்பக்கட்ட எச்சரிக்கை செய்யும் அமைப்புகளை உருவாக்குதல், ஒழுங்குமுறை மாற்றங்கள், நகர்புற மரம் நடுதல் போன்ற செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், மற்றும் விழிப்புணர்வு இயக்கங்கள் ஆகியவை உள்ளடங்கும்.இதில் வெப்பத்தின் மீது மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தாத (எ.கா. வீடற்ற மக்கள் அல்லது உயிரியல் பன்முகத்தன்மை திட்டங்கள் மீது கவனம் செலுத்தும் சமூக திட்டங்கள்) ஆனால் வெப்ப மீள்திறன் இணைப்- பலன்களைக் கொண்ட திட்டங்களும் உள்ளடங்கும்.
இத்தகைய திட்டங்களின் வழிகாட்டுதல்கள், ஒழுங்குமுறைகள், அல்லது இதர திட்டமிடுதல் செயல்முறைகளில் வெப்பம் குறித்த பரிசீலனைகளை ஒருங்கிணைத்தல் போன்ற “எளிய வெற்றிகள்” கிடைத்துவிட்டால், இது அந்த பிரச்சனை குறித்த செயல்வேகத்தை உருவாக்குவதோடு, எதிர்காலத்தில் பெரிய அளவிலான நடவடிக்கைகளுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.
வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு அடிப்படை வெப்ப அபாய மதிப்பீட்டை நடத்துதல் என்பதைப் பூர்த்தி செய்துள்ளீர்கள்.
இந்த பாடத்திட்டத்தில் இருந்து அத்தியாவசிய செயல்பாடுகள், வெளிப்பாடுகள், மற்றும் பலன்களை மதிப்பாய்வு செய்ய மறக்காதீர்கள்.