முன்கூட்டியே -எச்சரிக்கை செய்யும் அமைப்பு
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்
சுருக்கம்
மிகவும் ஆபத்தான வெப்ப நிலைகள் கணிக்கப்படும்போது அவற்றைப் பற்றிய எச்சரிக்கைகளை வழங்குகின்ற தகவல்தொடர்பு அமைப்புகள் மிகவும் மோசமான வெப்பச் சம்பவங்களின் போது இறப்புகளைத் குறைத்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
செயல்படுத்துதல்
வெப்ப நிகழ்வின் கால அளவு மற்றும் அதன் தீவிரத்தன்மை குறித்தும் மேலும் குடியிருக்கும் மக்களை அந்த சமூகத்தில் உள்ள குளிர்ச்சியான வளங்களுக்கு செல்லும்படி வலியுறுத்துகின்ற தகவலுடன் கூடிய ஒரு கடுமையான வெப்ப முன்னெச்சரிக்கை அமைப்பினை உருவாக்குதல்.
பயன்படுத்துவதற்கான பரிசீலனைகள்
சமூக ஊடகம், வானொலி, தொலைக்காட்சி, உரைச் செய்தி மற்றும் தொலைபேசி அழைப்பு முன்னெச்சரிக்கைகள் போன்ற பல்வேறு தகவல்தொடர்பு முறைகள் வாயிலாக வெப்பத்தைப் பற்றிய முன்னெச்சரிக்கைகள் பகிரப்பட வேண்டும் அப்போது தான் அதிகமான மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய முடியும். முதலில் செய்யப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வழங்கப்படும் நேரமும் அது எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருந்துள்ளது என்பதும் அந்த அமைப்பின் மீது சமூக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும்.
கண்ணோட்டம்
பருவநிலை:
குளிர், மிதவெப்பம், வெப்பம்/ஈரப்பதம், வெப்பம்/உலர்வுகொள்கைக் கட்டுப்பாட்டு முறைகள்:
விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதல்கடுமையான வெப்பத்தின் அபாயங்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் ஈடுபடுத்துதலை தொகுதிகள் அல்லது பங்குதாரர் குழுக்களிடையே அதிகரிப்பதை இலக்காகக்கொண்ட திட்டங்களை அரசாங்கங்கள் வடிவமைத்து செயல்படுத்தலாம்.தூண்டுதல் புள்ளிகள்:
வருத்தமில்லாத நடவடிக்கைகள் (குறைந்த செலவு/குறைந்த முயற்சி தேவைப்படுபவை ஆனால் நீடித்த பலன் தருபவை)குறைந்த-செலவாகக்கூடிய மற்றும் குறைந்த முயற்சி தேவைப்படுகின்ற (அவற்றைச் சார்ந்திருக்கும் தேவைகளைப் பொறுத்தவரை) ஆனால் குறிப்பிடும்படியான சுற்றுச்சூழல் மற்றம்/அல்லது சமூகப் பலன்களைக் கொண்ட நடவடிக்கைகள்.நடவடிக்கை வகைகள்:
தகவல்தொடர்புகள்/களப்பணிதுறைகள்:
பேரழிவு அபாய மேலாண்மை, பொது சுகாதாரம், முறைசாரா தீர்வுகள்
உதாரண ஆய்வுகள்
தாக்கம்
இலக்குப் பயனாளிகள்:
குடியிருப்போர், வெப்பத்தினால்-பாதிக்கப்படக்கூடிய சமூக மக்கள்தாக்கத்தின் நிலை:
அவசரக்கால நடவடிக்கை மற்றும் மேலாண்மைஅளவீடுகள்:
சென்றடைந்த சமூக உறுப்பினர்களின் எண்ணிக்கை
செயல்படுத்துதல்
நடவடிக்கை அளவு:
நகரம், மாநிலம்/மாகாணம்அதிகாரம் மற்றும் நிர்வாகம்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுசெயல்படுத்தும் கால அளவு:
குறுகிய-காலம் (1 – 2 ஆண்டுகள்)செயல்படுத்தும் பங்குதாரர்கள்:
நகர அரசு, மாநில/மாகாண அரசுநிதியளிக்கும் ஆதாரங்கள்:
அரசு முதலீடு, மானியங்கள் மற்றும் பரோபகாரம்செயல்படுவதற்கான திறன்:
அதிகமானதுபலன்கள்
செலவுப்-பயன்:
குறைவானதுபொது நலன்:
அதிகமானதுபசுமை இல்ல வாயுக் (GHG) குறைப்பு:
பொருந்தாதுஇணைப்-பயன்கள் (பருவநிலை/சுற்றுச்சூழல்):
உணவுப் பாதுகாப்பை வழங்குதல்இணைப்-பயன்கள் (சமூக/பொருளாதார):
சமூக ஒற்றுமையை வளர்த்தல், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துதல்